March 07, 2021

10,000 ரூபாயில் "சப்ஜிகோதி" புதுமை சேமிப்பு கிடங்கு "Sabji Kothi" Storage Tent in 10,000 Rs

பீகார் மாநிலத்தின் பகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நயா தோலா துதேகா (Naya Tola Dudheka) கிராமத்தில் பிறந்து வளர்ந்த திரு. நிக்கிகுமார் ஜா (Mr. Nikky Kumar Jha) மற்றும் சகோதரி செல்வி ராஷ்மிஜா (Miss Rashmijha) இணைந்து சிறு, குரு விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் பழங்கள், காய்கறிகள் கெடாமல் பாதுகாக்க ஒரு புதுமையான இணைய தொழில்நுட்ப சாதனத்தை (Internet of Things) வடிவமைத்து சந்தைப்படுத்தி உள்ளார்.



இந்தியா உலகிலேயே மிக அதிகமான காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்தாலும் 30 சதவீத உற்பத்தி சரியான சேமிப்பு முறை இல்லாததால் அழுகி அழிகிறது என்பது யதார்தம். விவசாயி விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விரைவில் கெட்டுபோய் வீணாகாமல் தடுக்க போதுமான சேமிப்பு வசதிகள் தேவைப்படுகின்றன. இத்தகையதானஉள் கட்டமைப்புகளை ஒரு நிறுவனம் செய்ய பெரிய அளவிலான மூலதனம், விரிவான தளவாடங்கள் (Extensive Logistics) மற்றும் மின்சாரம் தேவைப்படுகிறது. இதனை நாள்தோறும் பார்த்து வளர்ந்த திரு. நிக்கி குமார்ஜா தனித்துவமான எளிய சேமிப்பு சாதனத்தை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில் மிகக் குறைந்த விலையில் வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் பழங்கள் மற்றும் காய்கறிகள் அறுவடைக்கு பிறகு 30 நாள் வரையில் கெடாமல் பாதுகாக்க முடியும்.



அதற்காக அதிக செலவாகும் குளிர்பதன கிடங்கோ மின்சார செலவுகளோ தேவையில்லை. இதற்கான அவரது "சப்ஜி கோதி" (Sabji Kothi) என்ற இவரது கண்டுபிடிப்பு ஒரு சிறிய கூடாரம் (Tent) போன்றது. இயற்கையான
முறையில் 30 நாட்கள் வரையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் கெடாமல் பாதுகாக்கப் படுகிறது.

"சப்ஜிகோதி" (Sabji Kothi) செயல்படும் முறை:

காய்கறிகள், பழங்கள் விரைவில் கெட்டு அழிவதற்கு உருவாகும் எத்திலீன் உயிர்த் தொகுப்பு (Ethylene Bio Synthesis) தான். எத்திலின் உயிர் தொகுப்பு உற்பத்தியை தடை செய்ய அறையினுள் 1 லிட்டர் தண்ணிரையும் 10 வாட் மின்சாரத்தைக் கொண்டு அதிகப்படியான ஈரப்பதத்தை உண்டாக்கப் படுகிறது. எத்தில்ன் உயிர்த் தொகுப்பில் ஆக்ஸிஜன் ஏற்றி (Oxidise) சிறிய மூலக்கூறுகளாக்கு கிறது (Small molecules) இந்த அறை உயர்நிலை தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டு பழம் மற்றும் காய்கறிகளின் சுவாசத்தையும் அடக்குவதன் மூலம் அவற்றின் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது. அதாவது இந்த முறை எத்திலின் சிதைவு பாதுகாப்பு நுட்பமாக (Ethylene - Degradation as the preservation) செயல்படுகிறது.

- தற்போது 100 கிலோ, 500 கிலோ மற்றும் 1000 கிலோ டெண்டுகள் முறையே ரூ 10,000 /- , 20,000 / - , 40,000 /- என்ற அளவில் விற்பனையில் உள்ளன.

சிறப்புகள்:

- மிகப்பெரிய குளிர்பதன கிடங்குகள் தேவை இல்லை

- சிறு குறு விவசாயிகள் அவர்களுக்கு தேவையான அளவுகளில் "சப்ஜி கோதி" டெண்டுகள் வாங்கி பயன்படுத்தலாம்.

- ஒரு லிட்டர் தண்ணீருடன் 10 watt சோலார் மின்சாரம் அல்லது மின்துறை மின்சாரம் போதுமானது. 10 வாட் மின்சாரம் என்பது ஒரு செல்போனுக்கு தேவையான மின்சாரம் மட்டுமே.

- எங்கேயும் வண்டியிலோ, ரிக்ஷாவிலோ, கூட எடுத்துச் செல்லலாம்.

- சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லை.
(Eco Friendly)

- சேமிக்கும் பழங்கள், மற்றும் காய்களுக்கு தேவையான ஈரப்பதம் பராமரிக்க "ரெகு லேட்டர்கள்" பொருத்தப்பட்டுள்ளது.

- நுண்கிருமிகள் பாதிப்பு முழுமையாக தவிர்க்கப்படுகிறது (Sterile)

- விவசாயிகளின் பொருளாதார பேரிழப்பைத் தவிர்க்கிறது.

திரு. நிக்கி குமார்ஜா மற்றும் சகோதரி ராஷ்மி ஜா கண்டுபிடிப்பு "சப்ஜி கோதி" உலகெங்குமிருந்து பாராட்டுகளும் விருதுகளும் பெற்று விருகின்றது.

அருணாச்சல பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் பெருமளவில் பாராட்டுகளைப் பெற்று பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஸ்தாபனம் (Bill Gates and Melinda Gates Foundation) தொடர்ந்து ஆதர வளிக்கிறது (Support) என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் (AGNI MISSION) உட்பட பல அமைப்புகள் ஆதரவளிக்கிறது. மார்ச் 2019-ல் சந்தைப் படுத்தப்பட்டுள்ள இயந்திரம் விரைவில் அனைத்து இந்தியா மற்றும் உலக நாடுகளில் விவசாயிகள் பெற்று பயன் பெறுவர் என்பது திண்ணம்.

Contact:

Address: F1, Rural India Business Centre, Thawe, Bihar 841440
Phone: 088262 17394

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 
Stories