January 06, 2021

மின்சார ஆட்டோரிக் ஷா (Electrical Auto Rickshaw)

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய காலகட்டத்தில் காற்று மாசு ஏற்படுத்தாத ஆட்டோரிக் ஷாக்கள் வரவேற்கப்படுகின்றன. தற்போதுள்ள எரிபொருள் ஆட்டோ ரிக் ஷாக்கள் மிகக் குறைந்த செலவில் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றும் தொழில் நுட்பத்தினை "ரேஸ் எனர்ஜி" (RACEnergy) நிறுவனம் செயலாற்றி வருகின்றது.

திரு.அருண் ஸ்ரேயாஸ் (Mr. Arun Sreyas) ஹைதரபாத்தைச் (Hyderabad) சேர்ந்த இளம் பொறியாளர் எரிபொருள் ஆட்டோ ரிக்ஷாக்களை மின்சார இயக்க ஆட்டோக்களாக மாற்றும் தொழில் நுட்பத்தினை பெருமுயற்சிக்குப்பின் கண்டுபிடித்து ரேஸ் எனர்ஜி (Race Energy) அதன் மூலமாக செயலாற்றி வருகின்றனர்.


மின்சார ஆட்டோவாக மாற்றும் மற்றும் செயல்படும் முறை:

- எரிபொருள் ஆட்டோவின் என்ஜின் மாற்றப்பட்டு மாற்றுக் கருவிகள் (Conversation Kit) பொருத்தப்படுகிறது.

- பொருத்தப்பட்டபின் ஆட்டோக்கள் பேட்டரிமூலம் இயங்கும் வகையில் சில மாறுதல்கள் செய்யப்படுகின்றன.

- மாற்று கருவிகள் (Conversion Kit) ரூ.50,000 செலவில் பொருத்தப்படுகிறது.

ஆட்டோ உரிமையாளர்கள் பேட்டரி வாங்க வேண்டியதில்லை. நிறுவனமே பேட்டரியை இலவசமாக பொருத்தி தருகிறது.

- பயன்பாட்டுக்கு பிறகு பேட்டரியை வாகன உரிமையாளர்கள் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. பேட்டரி மாற்றும் நிலையத்தில் (Battery Swapping Station) இரண்டு நிமிடத்தில் பேட்டரி மாற்றிக் கொள்ளலாம்.

- பேட்டரி மின்சார பயன்பாட்டுக்கு தகுந்தார்போல் சரியாக கணக்கிட்டு தொகையை செலுத்தினால் போதுமானது (பெட்ரோல் பங்கில் வாங்கும் பெட்ரோல்/ டிசலுக்கு பணம் செலுத்தி வாங்குவதைப் போல.

- சாதாரணமாக எரிபொருள் செலவில் பாதியளவிலேயே மின்சாரத்துக்கு செலவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- மாற்றுக் கருவிகள் பொருத்த செலவாகும் ரூ 50,000 / - 10 மாதத்தில் ஈடு செய்யப்படுகிறது.

- முழுவதும் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியின் மின்சாரம் 10 முதல் 12 மணி நேரம் வரையிலும் அல்லது சுமார் 200 கிலோமீட்டர் வரையிலும் பயணம் செய்ய முடியும்.

- மின்சார ஆட்டோக்கள் அதிகபட்சம் 60 கி.மி. வேகத்தில் இயக்கத்தக்கது.

- தற்சமயம் சுமார் 6 பேட்டரி மாற்று (Battery Swapping Station) நிலையங்கள் ஹைதராபாதில் இருந்தாலும் மேலும் பல நிலையங்கள் நிர்மாணிக்கப் போவதாக செயல் இயக்குனர் திரு. அருண் ஸ்ரேயாஸ் கூறுகிறார்.

- சுமார் 300 எரிபொருள் ஆட்டோ ரிக் ஷாக்கள் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ ரிக் ஷாக்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.



ஹைதராபாதில் மட்டும் சுமார் ஒரு லட்சம் எரிபொருள் ஆட்டோ ரிக் ஷாக்கள் இயங்கும் நிலையில் அதன் புகையால் ஏற்படும் காற்று மாசு மின்சார ஆட்டோக்களாக மாற்றும்போது தவிர்க்கப்படும் என்பது நிதர்சனம்.

Mail To: hello@racenergy.in

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories