November 20, 2020

கேரளவின் தனித்துவமான புராதன மாம்பழ கிராமம் (Unique Heritage Mango Village in Kerala)

கேரளா மாநிலத்தின் கன்னூர் மாவட்டத்தில் (Kannur District) உள்ள கண்ணாபுரம் கிராமம் (Kannapuram Village) 200 வகைக்கு மேற்பட்ட மாமரங்களை வளர்த்து சாதனை புரிந்து வருகிறது. கண்ணாபுரம் கிராமத்தில் உள்ள மா விரும்பிகள் (Mango Lovers) நாட்டு மாஞ்சேட்டில் (Nattu Manjottil), அதாவது "Under Mango tree" என்ற அமைப்பின் மூலம் இத்தகைய சேவையினை வெற்றிகரமாக செய்து வருகின்றனர்.

விவசாயி ஷைஜீ மாச்சாத்தி (Shuru Machatti) கூறுகையில் கிராமத்தில் நில உரிமையாளர் ஒருவர் 200 ஆண்டு பழமையான வெள்ளாதான் மாமரத்தை (Vellanthan Mango Tree) சொந்த காரணங்களுக்காக வெட்டப்பட்டபோது அந்த மரத்தின் கிளைகளை ஒட்டு மரம் தயாரித்து நட்டபோது இந்த "நாட்டு மாஞ்சோட்டில்" (Nattu Manjottil) பயணம் தொடங்கியது. மிகவும் இனிப்பான சுவையுள்ள வெள்ளாத்தான் மாம்பழங்களை விரும்பாத பல விவசாயிகள் அதன் கிளைகளை எடுத்துச் சென்று ஒட்டு மரங்களை உருவாக்கினர் அந்தப் பணி இன்று வரை பல்கி பெருகி வருகிறது என்று கூறுகிறார்.

மாம்பழ விரும்பிகள் "நாட்டு மாஞ்சோட்டில்" அமைப்பு முகநூல் (Facebook) ஒன்றையும் கொண்டு மா சம்பந்தமான பலதகவல்களை பகிர்கிறது. கண்ணபுரம் கிராமத்தின் ஒரு சிறு பகுதியில் கூட நூற்றுக்கும் மேற்பட்ட வகையான மா மரங்களை காண முடியும். தற்சமயம் இந்த சிறிய கிராமத்தில் 208 வகைக்கும் மேலான மா மர வகைகள் உள்ளன. பெரும்பாளும் மாம்பழங்கள் அவற்றின் சுவை, நிறம் மற்றும் உருவ அமைப்புகள் கொண்டு பெயரிடப்பட்டுள்ளன.



அவற்றில் சில:

செரிமாங்கா (Cheri Mango)

கண்ணபுரம் மாங்கா (Kannapuram Mango)

சொப்பன் மாங்கா (Choppan Mango)

வெள்ளாதான் மாங்கா (Vallathan Mango)

குலநிர்யான் மாங்கா (Kula Niryan Mango)

தேங்கா மாங்கா (Thenga Mango)

புலியன் மாங்கா (Puliyan Mango)

குடகாச்சி மாங்கா (Kudakachi Mango)

பப்பகாய் மாங்கா (Bappakai Mango)

மற்றும் பல

"தேசிய மா தினம்" (National Mango Day) ஜுலை 22, 2020-ல் கேரள பயோ டைவர்சிடி அமைப்பு கண்ணபுரம் கிரமத்தை "உள்நாட்டு மா புராதன பகுதி" என்று (Indigenous Mango Heritage Area) அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தின் விவசாய அமைச்சர் திரு.சுனில்குமார் (Mr.SunilKumar) கண்ணபுரம் கிராமத்தில் 100 வகையான மாங்கன்றுகளை உற்பத்தி செய்து மாநிலத்தின் 100 நடுவண் அமைப்புகளுக்கு தொடர்ந்து அனுப்புவதற்கான திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி துவங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நைஜீரியாவில் நித்திய கல்யாணி என்ற மலரினை பல அடிப்படை நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துவது போல் மாம்பழத்தின் மருத்துவ குணங்களை அரிய ஆராய்ச்சி அமைப்பினை ஏற்படுத்தி மனிதகுலம் பயன்பெற விரும்புவதாக திரு.ஷைஜீ மச்சாத்தி அவர்கள் நிறைவாக வேண்டுகோள் விடுகிறார். 

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories