இரண்டு இளம்பெண்கள் நிஷிதா வசந்த் (Nishitha Vasanth) மற்றும் பிரியா சிரீ மணி (PriyaShri Mani) இவரும் இணைந்து முற்றிலும் குப்பை கழிவுகளைக் கொண்டு கொடைக்கானலில் ஒரு மண் வீட்டை கட்டியுள்ளனர். மண் வீடு (Mud House) தொடர்பாக பல ஆராய்ச்சிகளை நடத்தி கடின உழைப்பின் மூலம் அவர்களின் முடிவை கடந்த ஆண்டில் கட்டி குடிபுகுந்துள்ளனர்.
முக்கியமாக மறுசுழற்சி செய்யக்கூடிய (Recyclable Materials) பொருட்களைக் கொண்டு வீடு கட்டப்பட்டுள்ளது. கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உயிரிகள் சிதைக்க முடியாத (Non Bio degradable) குப்பைகளாக சேரக்கூடியக்கூடிய பழைய சிமெண்ட் பைகள் (Poly Propylene) சேகரம் செய்யப்பட்டு மண் நிறப்பப்பட்டு செங்கற்களுக்கு பதிலாக சுவர் எழுப்பி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்குகு இடையிலும் மண்நிறப்பப்பட்ட பைகள் அனைத்தும் ஒன்றிணைந்து பிடிக்கும் வகையில் முள் கம்பிகள் (Barbed Wire) கொண்டு இறுக்கப் பட்டுள்ளது சுவர்களுக்கான பூச்சாக (Plaster) சாணம் மற்றும் களிமண் (Clay) பயன்படுத்தி பலப்படுத்தப் (Reinforce) பட்டுள்ளது.
சுவர்களுக்கு ஜன்னல்களாக வாகனங்களின் டயர்கள் "சாளரச் சட்டகமாக" (Window Frames) பயன்படுத்தப்பட்டுள்ளன. வெளிச்சத்திற்காக குளியலறைகளில்" பீர் பாட்டில் "களும் (Beer Bottles) தரைகள் பழங்கால தொழில் நுட்ப மான "ஆக்ஸைட்" (Oxide Flooring) கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. படிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற "ஆத்தங்குடி ஓடுகள்" (Athangudi Tiles) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கூறைகள் மூங்கில் சட்டங்கள் பொருத்தப்பட்டு அதன் மீது நனைந்த ஓலைகள் கொண்டு வேயப்பட்டு வீட்டினுள்ளே குளுமையாக இருக்கும் படி அமைந்துள்ளது. வீட்டின் பெரும்பாலான இணைப்பு ஒட்டு பொருளாக களிமண்ணும் சாணமுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமானத்திற்காக எந்த வடிவமைப்பாளரும் (Architect) மற்றும் கட்டுமான நிறுவனமும் (Builder) பணியமர்த்தப் படாமல் இரண்டு இளம் பெண்கள் மட்டுமே செய்து உள்ளார் என்பது சிறப்பு.
இவர்களின் கடின உழைப்பும் உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் சவால் விடும் அளவிற்கு முழுமையான ஒன்று என்பது திண்ணம்.
உண்மையில் "இனிப்பு என்பது உழைப்பின் பலன்"
(Sweet are fruits of Labour) அல்லவா?
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.