February 27, 2021

(Corn Extractor Machine) சோளப்பால் இயந்திரம்

ஹரியானா மாநிலத்திலுள்ள தம்லா (Damla) கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு. தரம்பீர் கம்போஜ் (Mr.Dharambir Kamboj) இயற்கையான வாழ்க்கை முறையை முடக்கிப்போட்ட கொரோன-19 பெருந்தொற்று (Pandemic) காலத்தில் சோளப் பால் இயந்திரம் ஒன்றை தயாரித்து சாதனை படைத்துள்ளார். விவசாயமும் விவசாய பொருட்கள் விற்பனை செய்ய முடியாமலும் பல விவசாயிகள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகினர். வட இந்தியாவில் பெருமளவு பயிரிடப்படும் மக்காச்சோளம் சந்தைப்படுத்த முடியாத நிலையில் திரு.தரம்பீர் மாற்று வழியாக சோளப்பால் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்து சோளப்பாலையும் இயந்திரத்தையும் சந்தைப் படுத்தி உள்ளார். அதுவரையில் சீனாவில் உள்ள இயந்திரம் ரூபாய் 2 லட்சம் விலையுள்ளதை ரூ 20,000 செலவில் தயாரித்து உள்ளார் என்பது சிறப்பு.

திரு.தரம்பீர் அவர்களின் செலவு குறைந்த தனித்துவமான இயந்திரம் அறுவடை செய்யப்பட்ட மக்காச் சோளக்காம்புமுனை (Corn Cob) யிலிருந்து மக்காச்சோள மணியினை பிரித்தெடுக்கவும் அதிலிருந்து பாலை (Malt) பிழிந்தெடுக்கவும் சிறப்பாக செயல்படுகிறது. இந்தப் பாலை நேரடியாக மாட்டு பாலுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும். மேலும் பல உணவு பதப்படுத்தும் இயந்திரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணை எடுக்கவும், பழச்சாறு தயாரிக்கவும், கற்றாழை (Aloe Vera), ஹோலி பாசில் (Holy Basil) சோயா மொச்சை, மஞ்சள், சீரகம், ரோஜாபூக்கள் மற்றும் பல சாறுகளையும் எடுக்க இவ்வியந்திரம் பயன்படுத்தப்படுகிறது.



திரு.தரம்பீர் இயந்திரம் தயாரிக்கும் முயற்சியில் இரண்டு முறை தோல்வியை அடைந்தாலும் மூன்றாவது முயற்சியில் ஒரு இயந்திரத்தை இரும்பு எஃகு தகடுகள் (Steel Plates) மற்றும் தாங்கு உருளைகளையும் (Bearings) பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார் என்பது சாதனை.

மக்காச்சோளப்பாலின் மணமும் சுவையும் (Flavour) தக்க வைக்க மாட்டுப்பால், சர்க்கரை,  மற்றும் தண்ணீர் கலந்து கொதிக்கவைத்து பின்னர் ஆறவைத்து 200 ML பாட்டில்களில் விற்பனை செய்கிறார். மேலும் சோளப் பாலினை டீ, காப்பி, அல்வா மற்றும் பல உணவு தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.



திரு.தரம்பீர் தனது தயாரிப்பு இயந்திரத்தின் செயல்பாடு களை பல விவசாயிகள் முன்னிலையில் செயல்படுத்தி பெருத்த வரேவேற்பைப் பெற்று உள்ளார். மாநில முதலமைச்சர் திரு. மனோஹர்லால் அவர்களின் பாராட்டுதலையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Website: www.kissandharambir.com

contact no: 9812646563

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories