September 10, 2021

சாணக் கழிவிலிருந்து உயிர் கரிம திரவ உரம் (Bio - Organic Liquid Fertilizer from Bio Gas Slurry)

 

 

 

 

சூரத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய தொழில் நுட்ப கழகத்தின் இயந்திர பொறியியலாளரும் முன்னாள் இயக்குனருமான டாக்டர். சலீம் சன்னிவாலா (Dr.Salim Channivala) பயோ கேஸ் ஆலைகளின் கழிவு சாணக் குழம்பு (Slurry) மற்றும், 16 நுண்ணூட்ட சத்துக்களால் தயாரிக்கப்பட்ட திரவ உயிர் கரிம உரத்தை (Bio - Organic Liquid Fertilizer) உருவாக்கி சந்தைப் படுத்தியுள்ளார்.



டாக்டர். சலீம் சன்னி வாலா தனது நான்கு உறவினர்களை புற்றுநோயால் இழந்த பிறகு ஆழ்ந்த தாக்கத்தில் இருந்தபோது காய்கறிகளில் அதிக அளவு ரசாயணங்ளால் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் தான் இந்த நோய் வந்ததாக தாக மருத்துவ தகவல்கள் தெரிவித்திருந்தன.
இந்த சம்பவத்தால் தூண்டப்பட்ட டாக்டர்.சலிம் 1981 - முதல் உணவு நச்சுத் தன்மையின் பிரச்சனைக்கு தீர்வு காண முடிவு செய்து விவசாயத்தில் எந்த ரசாயன பொருட்களும் பயன்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்த முடிவு செய்து பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு பயோகேஸ் சாணம் குழம்பிலிருந்து ஒரு உயிர் கரிம திரவ உரத்தை  (Bio - Organic Liquid Fertilizer) தயாரித்துள்ளார்.

நமது சேனலில் பயோ கேஸ் பற்றி விரிவாக காணொளிகளை வெளியிட்டுள்ளோம் லிங்க் கீழே உள்ளது

Video1:

https://youtu.be/DGtzjLhP7bQ

Video2:

https://youtu.be/9CnwqIEh9ig


பயோ கேஸ் குழம்பு (Bio -Gas Slurry) தாவரங்களுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் நிறைந்ததாக இருந்தாலும் சில நுண்ணூட்டச் சத்துக்களின் செறிவு இல்லை. எனவே பயோ கேஸ் குழம்பில் 16 வகையான இயற்கை நுண்ணூட்ட சத்துகள் சேர்த்து அதிக செயல்திறன் கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த திரவ உயிர் கரிமஉரத்தை தயாரித்து வெற்றி கண்டுள்ளார் டாக்டர். சலீம்.



பண ஆதாயங்களை விட ஆரோக்கியம் விலை மதிப்பற்ற என்ற தத்துவத்தின் அடிப்படையில் உயிர் கரிம திரவ உரம் "க்லோ லிக்விடானிக்" (Glow Green BioTech) என்ற வணிக நிறுவனத்தின் மூலம் லிட்டருக்கு ரூ 65/- க்கு செய்யப்படுகிறது.

"க்ளோகிரீன் பயோடெக்" (Glow Green Bio Tech) நிறுவனம் சுற்றுச்சூழல், மண், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், உள்ளூர் வேலைவாய்ப்பு, ஆரோக்கியம், மனிதனின் வாழ்க்கைத் தரத்தில் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

"லிக்விடானிக்" (Liquitonic) உலகம் முழுவதுக்குமாக க்ளோ கிரீன் பயோடெக் தயாரிக்கும் தனித்துவமான தயாரிப்பு ஆகும். தாவரங்கள், பயிர்கள், காய்கறிகள், பழங்களின் ஊட்டச்சத்து தேவைகள் மற்றும் அவற்றின் வளர்ச்சியில் ஈடுபடும் உடலியல் செயல்முறை பற்றிய முழுமையான புரிதலுக்கு பிறகே இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர். சலிம் 2019 - ல் பணி ஒய்வு பெற்ற பிறகு "உயிர் கரிம திட உரம்" (Solid Organic Bio - Fertilizer) வெற்றிகரமாக தயாரித்துள்ளார்.

விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்து வதிலிருந்து உயிர் கரிம உரங்கள் வேளாண்மைக்கு மாறுவதன் மூலம் சுற்றுச்சூழல், மண், விவசாயிகளின் வாழ்க்கைத்தரம், பொதுமக்களின் ஆரோக்கியம் மூலம் ஒட்டுமொத்த மனிதனின் முன்னேற்றம் அமைய வேண்டும் என்று விரும்புவதாக டாக்டர். சலீம் சன்னிவாலா கூறுகிறார்.

CONTACT INFO
Address​
H-561, Near Dungra Colony, Dungra, Kamrej, Surat Gujarat, 394180 - IN

Email Us
glogreenbiotec@gmail.com

Call Us
+91 97129 93552

Our Website: https://glowgreenbiotech.com/

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories