July 28, 2020

பதப்படுத்திய வாழை இலைத் தட்டுகள்

வாழை இலை உலகமெங்கும், குறிப்பாக இந்தியாவில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.கோயில்கள்,வீட்டு விசேஷங்கள், மங்கல அமங்கல நிகழ்வுகள் அனைத்திலும் வாழை இலைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.ஆனால் அவை அதிகபட்சமாக மூன்று நாட்கள் வரையிலேயே பயன்படுத்த முடிகிறது அதன்பின் குப்பையை அடைகிறது குப்பையாக வீணாகும் வாழை இலைகள் பல டன்களைத் தாண்டுகிறது. வாழை இலையின் வாழ்நாளை நீட்டித்து பயன்படுத்த முடியுமேயாணால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை குறைக்க முடியும்.வாழை விவசாயிகளும் பெருமளவில் பயனடைவார்கள்.எப்படி வாழை இலையின் வாழ்நாளை நீட்டிப்பது?

இந்த கேள்வியை விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு (Watrap) என்ற கிராமத்தைச் சேர்ந்த 11 வயதான டெனித் ஆதித்யா (Tenith Adithya) என்ற சிறுவன் தனக்குத் தானே கேட்டு அதற்கான முயற்சியையும் தனது சொந்தமான வீட்டு ஆராய்ச்சி கூடத்தில் செய்து வந்ததன் விளைவு தான், பதப்படுத்திய வாழை இலை தட்டுகள், குவளைகள் (Cups), வாழைஇலை கவர்கள் (Envelopes), பெட்டிகள் (Boxes),மற்றும் உரிஞ்சு குழல்கள் (Straws).

 

 

அடிப்படை கண்டுபிடிப்பு:

பொதுவாக வாழை இலைகள் சுருண்டு போவதற்கும் அழிவதற்கும் காரணம் செல்களில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களே (metabolism).வாழை இலைகள் வாழை மரத்திலிருந்து வெட்டப்பட்ட உடன் செல்லின் சிதைவுகள் வேகமாக நடைபெறுவதால் சுருண்டு மூன்று நாட்களில் பயன்படாமல் குப்பையாகிறது இலை செல்களில் ஏற்படும் சிதைவு மாற்றங்களை தடுத்து நிறுத்தினால் இலைகளின் வாழ்நாள் நீடிக்கிறது. இந்த அடிப்படை கண்டுபிடிப்பைத்தான் 22 வயது டெனித் ஆதித்யா இலையின் வாழ்நாளை நீடிக்க பயன்படுத்துகிறார். இவருடைய இந்த செல்லுலார் தொழில்நுட்பத்தின் மூலம் 3 நாட்களே வாழ்நாளாக இருந்த இந்த வாழை இலையின் ஆயுள் 3 வருடமாக மாறியுள்ளது.

 

செல்லுலார் தொழில்நுட்பம்:
(Cellular Technology)

1. வாழை இலையின் பச்சயம் (Chlorophyl) பாதுகாக்கும் செயல்முறை (Process).

2. இலை செல்களின் செயல்பாட்டை நிறுத்த உறைநிலை செய்முறை (Process).

3.தேவையான அளவிற்கு உலரவைக்கும் செய்முறை (Process).

4.ஒரு நிமிடம் கிருமிகளை அளித்து சுத்தம் செய்தல் (Sterlization) செய்முறை (Process).

5.இலையை ஆறு நிமிடங்களுக்கு ஸ்திரப் படுத்துதல் (stabilization) செய்முறை.

6.கிருமிகளை எதிர்க்கும் சக்தியை ஏற்படுத்தல் (Resistant Pathogens) செய்முறை.

7.பாதுகாப்பை ஏற்படுத்த 60 வினாடிகள் புற ஊதா கதிர்களை (Ultraviolet Rays) பாய்ச்சுதல் செயல்முறை.

8.தேவையான பயன்பாட்டுக்கு தகுந்தாற்போல் அச்சு இயந்திரங்கள் மூலமாக வடிவம் கொடுக்கும் செயல்முறை.

பதப்படுத்திய வாழை இலையின் பயன்கள்:

1. இது உடலுக்கு ஊறு விளைவிக்காத அங்கக பொருள். (Organic)

2. ரசாயனங்கள் இல்லாதது.

3. பயன்பாட்டுக்கு பிறகு 100 சதவீதம் அழியக்கூடியது (Bio -Degradable).

4. வனங்களை அழிக்கத் தேவையில்லை.

5. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கிறது.

6. கிருமிகள் இல்லாதது.

7. உற்பத்தி செலவு மிகவும் குறைவானது.

8. உற்பத்தி செய்ய பெரிய தொழிற்சாலைகள் தேவையில்லை சாதாரண இயந்திரங்களே போதுமானது.

9. பெருமளவில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக அமைகிறது.

10. பாதுகாப்பாக பல்வேறு இடங்களுக்கு எளிமையாக எடுத்துச் செல்ல முடியும்.

22 வயது டெனித் ஆதித்யாவின் இந்த தனித்துவமான கண்டுபிடிப்பிற்காக 2014ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற உலக விஞ்ஞான கண்காட்சியில் சிறந்த கண்டுபிடிப்பதற்கான பதக்கம் வழங்கப்பட்டது. இது தவிர கின்னஸ் உலக சாதனை தேசிய மற்றும் பன்னாட்டு பாராட்டுகள், பதக்கங்கள் பல அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories