புகையினால் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழப்பவர்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. மாசு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான "லான்செட் குழு" என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் புகையினால் காற்று மாசுபாடு காரணமாக உலகம் முழுவதும் 90 லட்சம் பேர் பலியாகியுள்ளனர் என்றும் இதில் அதிகபட்சமாக இந்தியாவில் 25 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 18 லட்சம் பேர் உயிரிழந்து சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது காற்று மாசுபாடு காரணமாக உலக அளவில் 6 பேரில் ஒருவர் இறந்து கொண்டிருக்கின்றனர். இறப்பு விகிதம் வளரும் நாடுகளில் தான் அதிகம் உள்ளது. மேலும் இது எய்ட்ஸ், மலேரியா, காசநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையைவிட 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடதக்கது.
வாகனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கரிகள், விறகுகள் கொண்டு எரிக்கப்படும் மின் உலைகள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் புகையினை பயன்பாடு உள்ள பொருளாக மாற்றும் முயற்சியில் "கிராவிகி ஆராய்ச்சிக்கூடம்" (Graviky Labs) நிறுவனர் அனிருத் ஷர்மா (Anirudh Sharma) வெற்றி கண்டுள்ளார். புகையினில் வெளிப்படும் கருப்பு கறிதுகள்களைத் (Carbon Particles) கொண்டு கருப்பு இங்க் தயாரிக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
அச்சுத்துறை மற்றும் சாய துறையில் (Paints) 60 சதவீதம் வரையில் கருப்பு நிறமே பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவதால் பெருமளவு உபயோகப்படும் கருப்பு இங்க் தயாரித்துள்ளார் தயாரிப்பிற்கு "ஏர் இங்க்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஏர் இங்க் தயாரிப்பு முறை:
புகை போக்கியிலிருந்து புகை நேரடியாக கரைப்பான் (Solvent) உள்ள கொள்கலனின் வழியாக அனுப்பப்படுகிறது. புகையில் இருக்கும் கரித்துகள்கள் (Soot) கரைப்பானில் கரைந்து இங்க்காக ஆகின்றது. இது ஒரு மிக எளிய முறை. இதற்காக புதிய பெருஞ்செலவு இயந்திரங்கள் தேவையில்லை என்பதுதான் இதன் சிறப்பு. வெளிப்படும் புகையின் அளவினை பொருத்து ஒரு நாளைக்கு 500 கிலோ முதல் 1000 கிலோ வரையில் (Air Ink) ஏர் இங்க் என்ற கருப்பு மை தயாரிக்கப்படுகிறது. கரைப்பான் (Solvent) -ஐ பொறுத்து எழுது மையாகவோ, கருப்பு பெயிண்டாகவோ, ஸ்பிரே பெயிண்டாகவோ பெற இயலும்.
தற்சமயம் "கிராவிக்கி லேப்ஸ்" (Graviky Labs) (Heineken) ஹீனேகன், மாஸ்டர் கார்ட் (MasterCard), மற்றும் (Dell) டெல் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து ஏர் இங்க் வணிகரீதியாக தயாரிக்க உள்ளது.
புகையின் தாக்கத்தினால் (Asthma), ஆஸ்த்துமா, (Stroke) ஸ்டுரோக், (Lungs) நுரையீரல் மற்றும் கேன்சர் நோய்கள் ஏற்படும் நிலையினை மாற்றி இங்க் மற்றும் பெயிண்ட் உற்பத்தி வணிகம் மட்டுமல்லாமல் உயிர்களுக்கும் பாதுகாப்பும் அளிக்கப்படுவது என்பது பாராட்டத்தக்கது.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.