பொதுவாக மஞ்சள் வகைகள் அனைத்தும் விவசாய நிலங்களில் மொத்த பயிராக பராமரித்து வளர்க்கப் பட்டு விற்ப்பனைக்கு வருகின்றன. மாற்றாக புனே நகரத்தைச் சேர்ந்த பெண் திருமதி. சுஜாதா நபாடே (Mr.Sujatha Naphade) கடந்த நான்கு ஆண்டுகளாக தனது வீட்டுப் புறக்கடை தோட்டத்தில் தொட்டிகளில் மஞ்சள் பயிரிட்டு வளர்த்து வருடத்துக்கு சுமார் 7 கிலோ மஞ்சள் அறுவடை செய்து தனது வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்கிறார்.
மஞ்சள் வளர்ப்புத் தொட்டி ஊடகமாக தோட்டமண், சமையலைறக் கழிவுகள், காய்ந்த இலை தழை சருகுகள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துகிறார். தொட்டிகளுக்கு பதிலாக க்ரோ பேக்குகள் (Grow Bags) பயன்படுத்தலாம். அனுபவ ரீதியாக விதைகளற்ற மஞ்சள் துண்டுகளை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பயிர்செய்தால் நல்ல விளைச்சல் அடைகிறது என்று திருமதி.சுஜாதா கூறுகிறார். பயிரிட்ட ஒன்பது அல்லது பத்து மாதத்தில் மஞ்சள் அறுவடை செய்யலாம்.
வீட்டுத் தோட்டத்தில் மஞ்சள் வளர்ப்பு முறையினை விரும்புபவர்களுக்கு பகிர விரும்புகிறார் திருமதி சுஜாதா.