April 26, 2022

நவீன மீன் வளர்ப்புத் தொழில்நுட்பம் (Modern Aquaculture Technology)

உலக மீன்வள நிறுவனத்தின் கூற்றுப்படி மீன் உற்பத்தியில் 7.58 சதவீதத்தைக் கொண்டு, உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இருப்பினும் நிலம் சார்ந்த மீன் பிடியில் இருந்து மகசூல் அதிகரித்து வரும் நிலையில் கடல்சார்ந்த மீன்பிடி உற்பத்தி குறைந்து வருகிறது என்பதுதான் நகைப்புக்குரிய விஷயம்.

மீன் வளர்ப்பத் துறை 25 பில்லியன் டாலர் தொழில்துறையாகும். இதில் மீன் தீவனம் மற்றும் பண்ணைகளை இயக்குதல் போன்ற உள்ளீடுகளை உள்ளடக்கிய அப்ஸ்டிரீம் பிரிவு (Upstream Sector)  சுமார் 9 பில்லியன் டாலர் மற்றும் விற்பனையின் மூலம் பெறப்படும் மதிப்பு 16 பில்லியன் டாலராக ஆகும்.



நீண்ட காலமாக அக்வா வளர்ப்பு அல்லது மீன், இரால் இரால் மட்டி மற்றும் பிற உண்ணக்கூடிய நீர்வாழ் உயிரினங்களின் செயல்பாடு இந்தியாவில் மிகவும் ஒழுங்கமைக்கப் படாமல் உள்ளது. விவசாயிகள் நல்ல விளைச்சலை பெறுகின்றனர் ஆனால் இடைத்தரகர்கள் பொருளுக்கு தகுதியான பணத்தை

 விவசாயிகள் ஈட்ட முடியவில்லை.


இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காகத்தான் ராஜ மனோகர் "ராஜ்" சோமசுந்தரம் 2017 - ஆம் ஆண்டு சென்னையைத் தளமாகக் கொண்ட "அக்வா கனெக்ட்" (Aqua Connect) என்ற முழு அளவிலான மீன் வளர்ப்பு தொழில் நுட்ப முறையையும் சந்தையையும் தொடங்கினார். இது நிகழ்கால தொழில்நுட்ப அடிப்படையிலான பண்ணை கண்காணிப்பு தீர்வுகள், ஆலோசனைகள் மீன் வளர்ப்பு நிபுணத்துவம் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்குகிறது.



"அக்வா கனெக்ட்" துவக்க நிறுவனம் செயற்கை அறிவு (Artificial intelligence) மற்றும் செயற்கைக்கோள் ரிமோட் சென்சிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. மேலும் சுமார் 60,000 மீன் மற்றும் இறால் விவசாயிகளுடன் இணைந்து அவர்களின் உற்பத்தி திறனையும் லாபத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

முழு மதிப்புச் சங்கிலிகளையும் ஒழுங்கு படுத்துகிறது மேலும் விற்பனையாளர்கள், மற்றும் சப்ளையர்கள், பண்ணை உள்ளீடு பொருட்கள் உட்பட அப்ஸ்டிரீம் மற்றும் கீழ்நிலை செயல் பாட்டாளர்களுடன் விவசாயிகளை இணைக்கிறது.

உற்பத்தியாளர்களுக்கு புரோபயாட்டிக்குகள், நீர் ரசாயனங்கள், உற்பத்தி ஊடகங்கள் போன்றவற்றை வழங்குகிறது. மேலும் அவர்களின் உள்ளீடுகளின் செலவினை 30 சதவீதம் குறைத்து உறுதி செய்கிறது.

ஒரு மீன்வளர்ப்பு விவசாயி எதிர்கொள்ளும் மூன்று முக்கிய சவால்களாக நீரின் தரம், தீவனம் திறன் மற்றும் மீன்களின் உற்பத்தி அளவு, தரம் ஆகியவற்றை உறுதி செய்கிறது.

"அக்வா கனெக்ட்" மனித மற்றும் தொழில் நுட்பத் தலையீட்டின் கூறுகளை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு நிலவும் சிறந்த நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்துகிறது.

"அக்வா கனெக்ட்" ஆனது விவசாயிகளுக்குத் தேவையான நிபுணத்துவத்தை உரிமையாளர் கூட்டாளர்கள் இணைந்து மீன் தீவனம், மருந்துகள் மற்றும் பிற தேவையான கருவிகள் போன்ற அனைத்து உள்ளீடுகளையும், சில்லறை விற்பனை நிலையங்கள் வழங்கும் நிபுணர்களின் வலையமைப்பையும் கொண்டுள்ளது - செயலியிலும் தகவல் கிடைக்கிறது.

வரலாற்று ரீதியாக இந்திய விவசாயிகளால் அறிவியல் மற்றும் தரமான உள்ளீடுகள் பெற முடியாமல் இருந்தது ஆனால் "அக்வா கனெக்ட்" மூலம் அனைத்தும் பெறப்பட்டு விவசாயிகளின் லாப வரம்பு 15  
சதவீதம் அதிகரித்துள்ளது என்பது நிதர்ஸனம்.

கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டு "அக்வா கனெக்ட்" நிறுவனம் தமிழ்நாடு, ஆந்திரா மாநிலம் தவிர ஒரிசா குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் பீகார் போன்ற நிலப்பரப்பை மட்டுமே கொண்டுள்ள மாநிலங்களிலும் விரிவுபடுத்தியுள்ளது

"அக்வா கனெக்ட் " தற்போது ஜப்பானிலிருந்து ஒரு ஏற்றுமதி ஆர்டருடன் வெளிநாட்டு சந்தையில் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Contact:

Head Office Type II/17, Dr.VSI Estate, Thiruvanmiyur, Chennai, Tamilnadu, India - 600041

Get in touch

Toll Free: 1800 123 1263
Mobile: +91 72999 10993
Email: info@aquaconnect.blue

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories