May 01, 2021

சாண விறகு (Cow Dung Logs)

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தின் 67 வயது வணிகர் சுக்தேவ் சிங் மாட்டுச் சாணத்தை கொண்டு விறகு உருளைகளை தயார் செய்யும் இயந்திரத்தினை வடிவமைத்துள்ளார். சிக்கலான தொழில்நுட்பம் ஏதுமில்லாமல்  எளிய முறையில் செயல்படக்கூடிய இந்த இயந்திரம் சான உருளைகளை தயாரிப்பதன் மூலம்  கால்நடை கழிவுகள் மேலாண்மைக்கு பெருமளவில் உதவியாக உள்ளது.

சுக்தேவ் சிங்கிற்கு மீரத் நகரில் ஒரு விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.. வழக்கமான விவசாய உபகரணங்கள் செய்வதோடு மட்டுமில்லாமல் ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வரவேண்டுமென்ற தேடுதலை எப்போதும் கொண்டுள்ள சுக்தேவ் சிங் 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாட்டு சாணத்தை ஏதாவது ஒரு பயனுள்ள பொருளாக மாற்றவும்.அதனால் விவசாயிகளிடையே ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தவும், எரிசக்திக்காக மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்கும் சாண விறகு தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். ஆரம்பத்தில் தயாரிப்பில் சில குறைபாடுகள் இருந்தபோதும் தற்போது 5 -(Hp) குதிரை சக்தி கொண்ட ஒரு மின்சார மோட்டார் கொண்டு சாண விறகு உருளைகளை தயார் செய்கிறார்.



முதலில் மாட்டுசாணத்திணை, ஈரத்தை போக்குவதற்கு சூரிய ஒளியில் ஐந்து நாட்கள் உலர்த்தி அதனை இயந்திரத்தினுள் கொட்டப்படுகிறது. இயந்திரத்தின் திருகி பிழியும் தொழில்நுட்பம் சாணத்தை நன்றாக கலந்து கெட்டியான மர உருளைகளாக மாற்றி வெளியில் தள்ளுகிறது. உருளைகளை 3 அடி நீளம் வரையில் கொண்டுவர முடிகிறது. நமக்குத் தேவையான அளவுக்கு சாண உருளைகளை பெற இயந்திர அமைப்பும் தொழில்நுட்பமும் உள்ளது. ஒரு நிமிடத்திற்கு 3 அடி நீளம் கொண்ட விரகு உருளை வீதம் மணிக்கு சுமார் 60 விறகு உருளைகள் தயாரிக்கப்படுகிறது.

மீரத்தில் உள்ள முகமது குல்பாம் என்ற பால்பண்ணை விவசாயி தினசரி சேரும் 100 கிலோ மாட்டு சாணத்தில் 40 கிலோ உருளைகளை விற்பனை  செய்வதன் மூலம் சராசரியாக மாதம் RS. 8400 -/- வரையில் ஈட்டுகிறார். ஆரம்ப முதலீடான இந்த இயந்திரத்தின் விலை Rs.80000 -/-

ஒரு ஆண்டில் இந்த முதலீட்டினை ஈட்டி அதன் பின் தொடர்ந்து லாபம் பெற முடிகிறது என்கிறார்.

நகரங்களில் தற்சமயம் வாயு (GAS) அடுப்புகள் பயன்பாட்டில் இருந்தாலும் இன்றும் கிராமங்களில் பெரும்பாலும் விறகு அடுப்புகள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. சுடுகாடுகளில் கூட எரியூட்ட பல இடங்களில் விறகு தான் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. எரிப்பதற்கு இத்தகைய உருளைகள் பயன்படுத்துவதன் மூலம் மரங்களை வெட்டுவது பெருமளவில் குறையும் என்பது நிச்சயம்.

சாணகழிவுகளை விறகு உருளைகளாக மாற்றி பயன்படுத்தும் சிறிய, சிறிய தொழில்நுட்பங்கள் தான் "கழிவுகள் இல்லாத பொருளாதாரம்"(zero waste circular economy) உருவாக்கம் செய்வதின் அடிப்படை என்பது நிதர்சனம்.

இதை காணொளியாக படம்பிடிக்க கோயம்புத்தூரில் உள்ள ஆர்பிட் டெக்ஸ்டூல் நிறுவனத்தை அணுகினேன்.

மேலே குறிப்பிடப்பட்ட ஆர்பிட் டெக்ஸ் என்ற கம்பெனியின் இயந்திரத்தை பரிசோதனை செய்வதற்காக நேரில் சென்றிருந்தோம். அப்போது அவர்களின் சேவை சற்று முகம் சுளிக்கும் படி இருந்தது.

 
அதை விடவும் சோதிக்கப்பட்ட இயந்திரம் போதுமான அளவு வேலை செய்யவில்லை. இதனால் விவசாயிகள் அந்த இயந்திரத்தை வாங்கும்முன் நன்கு பரிசோதித்து விட்டு மற்றும் பல விமர்சனங்களை படித்து விட்டு இயந்திரத்தை வாங்கும்படி பரிந்துரை செய்கிறோம்.
Stories