May 18, 2021

மலிவு விலையில் புல்லட் டிராக்டர் (Low Cost Bullet Tractor)

மாராஷ்டிராவின் லாதூரில் உள்ள நிலங்கா கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான விவசாயி திரு. மக்பூல் ஷேக் (Mr.Maqbul Shaikh) 10 குதிரைசக்தி (10 H.P) புல்லட் டிராக்டரை உருவாக்கி உள்ளார். இந்த டிராக்டர் விதைத்தல், களை எடுத்தல், பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்தல், உழுதல் மற்றும் பெருமளவு உழைப்புப் செலவை குறைத்தல் (Labour) ஆகியவற்றை நிறைவேற்றுகிறது.

வாகன எரிபொருளால் இயங்கும் இந்த புல்லட் டிராக்டர் 10 H.P ரூ 1.6 லட்சம் விலையிலும் 5 HP டிராக்டர் ரூ. 60,000 விலையிலும் உள்ளது.



நிலாங்கா கிராம மக்கள் 2015 - ஆம் ஆண்டுமுதல் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மோசமான மழையால் கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகி சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். குடிநீர் பற்றாக்குறை தவிர விவசாயத்திற்கான தண்ணீரும் பற்றாக்குறையாக இருந்ததால் கால்நடை இழப்பும் பெருமளவு இருந்து பொருளாதாரம் பாதிக்கப் பட்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் சுமார் 12 லட்சம் செலவில் விற்கப்படும் டிராக்டர்களை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாக மாற்றி சந்தையில் தற்போது விற்பனையில் இருக்கும் டிராக்டர்களின் விலையில் 1/10 பங்கு விலையில் ஒரு புதுமையான டிராக்டரை வடிவமைத்த புல்லட் டிராக்டரை கட்டியுள்ளார்.

இந்த ஒரு மலிவு மாற்று திரு.மக்பூலுக்கு அவரது கண்டுபிடிப்பிற்கான உத்வேகம் அவரது சகோதரனின் கருவி பட்டறையில் (Workshop) இருந்து உருவானது.



"அக்ரோ ஒன் டிரெய்லர்கள் மற்றும் மஞ்சூர் பாய் "டிராக்டர்கள்" என்ற பட்டறையில் பழைய ஸ்கிராப் பொருட்கள், என்ஜின்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட புல்லட் பைக்குகளைக் கொண்டு சிறியதாக கனமான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவுக்கு சக்திவாய்ந்த புல்லட் டிராக்டரை 2016- லிருந்து உருவாக்கும் முயற்சியில் இறங்கிய திரு. மக்பூல் தனது முதல் 10 H.P புல்லட் டிராக்டரை 2018-ல் செய்து முடித்தார்.

"புல்லட் டிராக்டர்" பலவிதமான நன்மைகளு உடன் வருகிறது:-

1. சாதாரணமான டிராக்டர் குறைந்த பட்சம் ரூ 12 லட்சம் வரையில் விற்கப்படுகிறது. ஆனால் புல்லட் டிராக்டர் 10 H.P ரூ 1.6 லட்சமும் சிறிய பதிப்பு 5 H.P ரூ 60,000 - ல் விலையடக்கம்.

2. விதைகளை வயல்களின் மூலைகளிலும் விதைக்க இந்த புல்லட் டிராக்டரால் முடியும்.

3. இது களைகளை திறம்பட அழிக்க உதவுகிறது.

4. கரும்பு பயிர்களின் ஊடே எளிதாக நகர்ந்து செயலாற்றுகிறது.

5. பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும்போது குறுகிய பாதைகளில் செல்ல டிராக்டர்கள் உதவுகிறது.

6. "புல்லட் டிராக்டர்" ஒரு லிட்டர் டீசல் எரிபொருளில் 1.5 மணி நேரம் இயங்கும். வழக்கமான டிராக்டர்கள் இரண்டு மடங்கள் எரிபொருள் தேவைப்படும்.

7. இந்த டிராக்டரின் சிறிய பாகங்கள் எளிதாக வயல் வெளியிலேயே பழுது பார்க்க இயலும். பட்டறைகளுக்கு செல்லத் தேவையில்லை.

8. பெருமளவு உழைப்பு (Labour) செலவை குறைக்கிறது.

திரு. மக்பூலின் இந்த கண்டுபிடிப்பு மகாராஷ்டிரா அரசிடமிருந்து "கிருஷரத்னா" (Krushi Ratna Award) விருதையும்" "யுவகிருஷீசன்ஷோதக்" (Yuva Krushi Sanshodhak Award) விருதையும் பெற்றுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு சொந்த கிராமத்திலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் 140 க்கும் மேலான புல்லட் டிராக்டர்கள் விற்கப்பட்ட அளவிற்கு மிகப் பிரபலமாகிவிட்டது.

தனது கண்டுபிடிப்பு பல விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் விவசாயத்தை எளிதாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன் வரும் காலங்களிலும் இத்தகைய பணியைத் தொடர விரும்புகிறேன் என்று திரு.மக்பூர் ஷேக் கூறுகிறார்.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories