குஜராத் மாநிலத்தில் கிர் தேசிய வனவியல் பூங்காவின் அருகில் உள்ள பால்செல் (Bhal Chel) கிராமத்தில் ஒரு தனித்துவமான மாம்பழ பண்ணையை ஜாரியா விவசாய குடும்பம் (Jhariya Agriculture Family) கடந்த மூன்று தசாப்தங்களாக நடத்தி வருகிறது.
சுமார் 12.5 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த மாம்பழப் பண்ணையில் 200 வகைகளுக்கும் மேலான மாம்பழ வகைகள் அறுவடை செய்யப்படுகின்றன அனைத்து வகைகளும் பழமாகவும், மரக்கன்றுகளாகவும் - (Sapplings) விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஜாரியா குடும்பம் தங்கள் பழத்தோட்டத்தில் 230 வகையான மாம்பழம் மரங்களை வளர்க்கிறது. அவற்றில் சில தென்னிந்தியாவைச் சேர்ந்த சின்ன ரசம், சந்திரா மா மற்றும் வடக்கிலிருந்து சௌன்சா, லாங்டா மற்றும் தாசேரி ஆகியவை அடங்கும். அவர்களிடம் உள்ள குள்ள மாம்பழங்கள் மற்றும் சிந்து - 117 எனப்படும் விதையில்லா மாம்பழ வகைகளும் உள்ளன. அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான பிற வகைகள் உள்ளன. இந்தப் பண்ணையில் கடிமோன், பஜ்ரங், பரமாசி, பரமாரி வல்சாத் போன்ற பல வகைகள் உள்ளன. இவை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாம்பழங்களை வழங்குகின்றன.
"அணில் மாம்பழ பண்ணைகள் மற்றும் நர்சரியின் சிறப்புகள்:-
1. மாமரங்கள் அனைத்தும் சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் பாசன செயல்பாடு கொண்டது.
2. இயற்கை விவசாய முறைகள் மட்டுமே பின்பற்றப்படுகிறது. ரசாயனங்கள் ஏதுமில்லை
3. அடர் சாகுபடி முறை நான்கு மடங்கு அதிக மரங்களை வளர்க்க உதவுகிறது.
4. பண்ணையின் மற்றொரு தனித்தன்மை என்னவென்றால் 80 வகையான மாம்பழங்களை தாங்கிய ஒரு மரம் உள்ளது அனைத்தும் ஒட்டு மூலம் ஏற்படுத்தப்பட்டது.
5. விதையில்லா மாம்பழ வகை ஒன்று சிந்து 117 ரகம் உள்ளது.
6. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பலன் தரும் மாமர வகைகளான கடிமோன், பரா மாசி ஆகியவற்றை கொண்டுள்ளது.
மாம்பழத் தோட்டத்தில் வாழும் அனுபவத்திற்காக பார்வையாளர்களுக்கு இந்த மாம்பழம் அருங்காட்சியம் எப்போதும் அதன் கதவுகளை திறந்து வைத்துள்ளது ஆண்டுமுழுவதும் விருந்தினர்களுக்கு விருந்தாளிகளுக்கு சூழல் சுற்றுலா நிறுவனமாக அணில் பார்ம் ஹவுஸ் உள்ளது. ஆர்கானிக் மாம்பழங்கள் மற்றும் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் மரக் கன்றுகளை விற்பனை செய்கிறது. இந்த மாம்பழத் தோட்டம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பழங்களை பார்க்கவும் கற்றுக் கொள்ளவும் வருகிறது.
Contact :
Anil Farm House: 9879001098
https://www.facebook.com/
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.