May 01, 2021

8 லட்சம் செலவில் 2200 சதுர அடியில் தற்சார்பு வீடு "Low Cost Dome Houses"

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த திரு.பிரவின் (Mr.Praveen) மற்றும் திருமதி. வித்யா (Mrs. Vidya) தம்பதியினர் ஏ.பி.ஹெச்.ஏ கட்டிடக்கலை (ABHA Architecture) என்ற நிருவனப் பெயரின் கீழ் சுற்றுச்சூழல் உணர்வுள்ள பொருள் தட்டுகள் (Eco Concious Material Palettes) மற்றும் மறைமுக குளிரூட்டும் (Passive Cooling) உத்திகளைப் பயன்படுத்தி செலவு குறைந்த நீடித்த மற்றும் பேரழிவைத் தடுக்கும் குவிமாட (Dome Houses) வீடு களை கட்டுகிறனர்.



2009 - ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் சாங்கிலி (Sangile) மாவட்டத்தில் இவர்களால் கட்டப்பட்ட "தமானி" அமைப்பு (Dhamani) வீடு பிராந்திய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து பல பார்வையாளர்கள் பெருமளவில் பார்த்தனர். மாமரம், தென்னை மரங்களை உள்ளடக்கி 2200 சதுர அடியில் உள்ளூர் செங்கற்கள் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் "தமனி" வீடு வெறும் 8 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளதை அனைவரும் வியந்து பார்த்தனர்.



வீட்டின் பழமையான நினைவு  சின்ன அம்சமாக  (Monumental Feature) கட்டிடக்கலையை பாராட்டும் விதமாக அதன் வளைவு, கட்டமைப்பின் பின் மையத்தில் உள்ளது. உச்ச வரம்பில் உள்ள ஸ்கைலைட் பிளவுகள் சூடான காற்று வெளியேற உதவுகிறது. மற்றும் சுவர்களின் கீழ் உள்ள எலிப் பொறி குழி முறை (Rat Trap Cavity Method) குளிர்ந்த காற்று நுழைய அனுமதிக்கிறது.

தமானி வீட்டின் அழகியல் மற்றும் கட்டிடக்கலை சிறப்பம்சங்கள்
19 வயதான நிறுவனத்தின் கட்டுமான திட்டங்களில் பிரதிபலிக்கிறது. பாரம்பரிய நடை முறைகளைப் பயன்படுத்தி பசுமை வீடுகளைக் கட்டும் ஒரே நோக்கத்துடன் திரு. பிரவீன் தனது மனைவி வித்யாவுடன் சேர்ந்து நிலையான நிறுவனத்தை செயல்படுத்தி வருகின்றனர். ஒரு குவி மாடம் (Tomb), விளைவுகள் மற்றும் வால்ட்ஸ் (Vaults) போன்ற அழகிய வடிவ அமைப்புகளை ஒன்றிணைத்து கட்டுவது ஒரு தனித்துவமான விற்பனை உக்தியாக உள்ளது.

குடியிருப்பு முதல் வணிக நிறுவன கட்டிட கட்டமைப்புகள் வரை தம்பதிகள் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா முழுவதும் 300க்கும் மேலான வீடுகளை கட்டியுள்ளனர். அனைத்து வீடுகளிலும் தங்கள் புதுமையான வடிவங்களிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் சாம்பல் செங்கற்கள் மற்றும் கார்பன் உமிழும் பொருட்களைத் தவிர்த்து கட்டுவதால் 25% முதல் 30% வரை  செலவுகளை மிச்சப்படுத்தியுள்ளனர்.

நாம் முயற்சித்து பூமியை நம்முடைய வீடாகக் கருதி அதை மாசுபடுவதை தவிர்க்க வேண்டும். அதில் சிவில் கட்டுமானம் ஒரு ஒருங்கிணைந்த பங்கினை வகிக்கிறது. கட்டிடக் கலைஞர்கள், கட்டுமானம் (Builders) செய்பவர்கள் மற்றும் பொறியாளர்கள் சூழல் நட்பு செயல்முறை நோக்கி நகர்ந்தால் எதிர்காலத்தில் சுற்றுச் சூழல் பாதிப்பில்லாத முன்னேற்றத்தில் ஒரு தெளிவான முன்னேற்றத்தைக் காண்போம் என்று திருமதி. வித்யா கூறுகிறார். 


Ar. Praveen Mali. Plot No.4, Shriram, Manisha state bank colony, Sahyadrinagar, Vishrambag Sangli, Maharashtra, India 416416

abhadesigns@yahoo.com

http://www.abhaarch.com/

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories