ராஜஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட "ஐசர்ட் எனர்ஜி ரிசர்ச் பிரைவேட் லிமிடெட் கம்பெனி" (IYSERT Energy Research Private Limited Company) ISO - தரச்சான்று பெற்ற நிறுவனம். திரு.ராக்கேஷ் பிஸ்வாஸ் (Mr.Rakesh Biswas) என்பவரால் 2012 - ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 2014 - ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வணிகரீதியான, அரசு சாரா, அரசியல் சாரா அமைப்பாக சுற்றுச்சூழல் நட்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க தனித்துவமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை செயல்படுத்தி வருகிறது.
பொதுவாக சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் (Solar and wind mill Electricity) இரண்டும் தனித்தனியாக இயங்கி வரும் நிலையில் 24 மணி நேரமும் மின்சார உற்பத்தி செய்யக் கூடிய சூரிய ஒளி தட்டுகள் (Solar Panels) மற்றும் காற்றாலை டர்பைன் (Wind Turbine) இரண்டும் இணைந்த தனித்துவமான மின் உற்பத்தி தொழில்நுட்பத்தை (IYSERT) செயலாற்றி வருகிறது.
கலப்பின மின் நிலையத்தின் நன்மைகள்: (Advantages of Hybrid Plant):
1. 24 மணி நேர மின் உற்பத்தி திறன்
2. புதுப்பிக்கத்தக்க வளங்களின் இன் தினசரி மற்றும் பருவகால ஏற்ற இறக்கங்களை தவிர்க்கிறது.
3. ஆன் போர்டு MPPT செயல் திறனை அதிகரிக்கிறது.
4. எளிதில் செருக வடிவமைக்ப்பட்ட அமைப்புகள் (Designed to plug - n - Play easily)
5. மின்மாற்றியின் (Inverter) செயல் திறனை அதிகரிக்கிறது.
6. இடத்திற்கேற்ப நெகிழ்வுத் தன்மை (Flexibility) மற்றும் தனிப்பயனாக்கம் (Customisation) கொண்டது.
7. மின்சாரத்துறை இணைப்பு
(On Grid) மற்றும் தனித்துமான
(Off Grid) வடிவமைப்பு கொண்டது.
8. உள்ளமைக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் அறிக்கை அளிப்புக்திறன் கொண்டது.
9. அதிக மின் அடர்த்தி (High Power Density) தரவல்லது.
10. அனைத்து கூறுகளிலும் (Parts) 25 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது.
11. பேட்டரி ஆயுளை நீட்டிகிறது.
12. குறைந்த இடத்தை ஆக்கிரமிக்கிறது.
13. பயனரின் ஆற்றல் உற்பத்தி திறனை அதிகரிக்க அலகுகளை ஒன்றோடென்று இணைக்க முடியும்.
14. தனித்துவமான கலப்பின மின் உற்பத்தி நிலையம் காற்று மற்றும் சூரிய ஆற்றல் மின் உற்பத்தியை ஒரே அலகுடன் ஒருங்கிணைக்கிறது. இது சந்தைகளில் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.
"ஐசர்ட் எனர்ஜி ரிசர்ச் பிரைவேட் லிமிட்டெட் கம்பெனியின் (IYSERT Energy Research Private Limited Company) -ன் பிற தயாரிப்புகள்:
1. ஆன்கிரிட்/ஆஃப் கிரிட் சோலார் கூரை சூரிய சக்தி அமைப்புகள்.
2. சோலார் கூலர் / சோலார் விசிறிகள்/ மற்றும் சோலார் பேட்டரிகள்.
3. சூரிய நிறுத்தம் (Solar Parking) மற்றும் சூரிய வீட்டுவசதி (Housing Projects) திட்டங்கள்.
4. சூரிய மரம் (Solar Tree) மற்றும் கட்டம் (Grid) இணைப்பு அமைப்பு.
5. பயோ தூய தொழில்நுட்பம் (Bio - Pure Technology) மின்சாரம், எரிவாயு மற்றும் உயிர் எருவை (Bio manure) உருவாக்குதல்.
6. செங்குத்து அச்சு காற்று விசையாழிகள் (Vertical Axis wind Turbines)
ஐசர்ட்டால் பெறப்பட்ட விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:
- 2019-2020 ஆண்டுக்கான ஒரு சிறந்த சுத்தமான நிறுவனமாக- சிலிக்கான் இந்தியா (Silicon India) அங்கீகரித்துள்ளது.
- 2020- ஆண்டில் வேகமாக வளர்ந்து வரும் 25 நிறுவனங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் சிறந்த 10 சூரிய தொகுதி உற்பத்திகளில் ஒன்றாக இந்திய அரசின் MNRE அங்கீகரித்துள்ளது.
- 2019-ல் ராஜஸ்தான் அரசால் "ராஜஸ்தான் பசுமை எதிர்கால தொழில்நுட்ப விருது (Rajasthan Green Future Tech Award 2019) பெற்றுள்ளது.
- சிங்கப்பூரின் "ஆசிய வர்த்தக தலைமை விருது"
(Asian Business Leadership Awards) 2017 - ல் பெற்றுள்ளது.
- மலேசியாவின் (International Economic Institute of Malaysia) சிறந்த நிறுவனத் துக்கான விருதை 2017-ல் வழங்கி கவுரவித்துள்ளது.
உலகில் காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கத்தை முழுமையாக தவிர்க்க இயலாது. ஆனால் நமது எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து வளங்களை வழங்குவது உறுதி செய்வோம்.
IYSERT ENERGY RESEARCH PRIVATE LIMITED IYSERT TOWER, 31, 32, GURUKRIPANAGAR, KALWAR ROAD, JAIPUR - 302012, RAJASTHAN ( INDIA )
+91-9116622214
+91-7014500740
+91-9001077222
iysertsales@gmail.com
www.iysertenergy.com
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.