“சக்தி ஏழ்மை தான் உண்மையான ஏழ்மை (Energy Poverty is real poverty)” என்று மென்பொருள் அரசன் பில்கேட்ஸ் ஒருமுறை கூறியுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டு (Principle of a Circular Economy) பழைய கழிவு பேட்டரிகளைக் கொண்டு பயன்பாட்டுக்கு உகந்த புதிய பேட்டரிகள் உற்பத்தி செய்து “நூனம்” (Nunam) நிறுவனம் சாதனை படைத்துள்ளது "நூனம்" என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு “எதிர்காலத்துக்காக” (For the Future) என்று பொருள்.
"நூனம்" நிறுவனத்தின் ஸ்தாபகர்கள் (Founders) திரு.தர்ஷின் விருப்பாக்ஷா (Mr.Dharshan Virupaksha) என்ற சிங்கப்பூர் வாழ் இந்திய மின்னணுவியல் (Electronics) பொறியாளர் மற்றும் திரு.பிரதீப் சாட்டர்ஜி (Mr.Prodip Chatterjee) என்ற ஜெர்மனி வாழ் இந்தியராவர். "நூனம்" நிறுவனம் தற்சமயம் பெங்களூருவில் உள்ளது.
பொதுவாக கம்ப்யூட்டர்கள் மின்னணுவியல் சாதனங்கள், மடிக்கணினிகளில் உள்ள பேட்டரிகள் பயன்பாடு முடிந்த பின்னரும் கூட 80% மின் சக்தி தொண்டுகள்ளது. ஒரு கம்ப்யூட்டரையோ, மடிக்கணினியையோ இயக்காமல் போனாலும் அந்த லித்தியம் அயான் (Lithium Ion) பாட்டரிகள் சிறிய விளக்குகள் மற்றும் செல் போன்களை சார்ஜ் செய்ய இயலும்.
கழிவு செய்யப்பட்ட பழைய எலக்ட்ரானிக் சாதனங்களை கையாளும் டிலர்களிடமிருந்து. (E - Waste Dealers) இத்தகைய செல்களை சேகரித்து அதை பிரத்யேக முறையில் மறு பயன்பாட்டிற்கு (Re purposed) தயார் செய்து சாலை வியாபாரிகள் மற்றும் சிறு கடைகளுக்கு (Street Vendors and Small Shop Keepers) விளக்குடன் இலவசமாக கொடுத்து உதவி வருகிறது "நூனம்".
"நூனம்" நிறுவனத்தின் முதல் கண்டுபிடிப்பாக மிகச்சிறிய அளவிலான சாம்பல் நிறப் பெட்டி (Sleek Grey Box) 28 லித்தியம் அயான் செல்கள் பிரத்தியேகமான தொழில்நுட்ப முறையில் இணைக்கப்பட்டு 12 வோல்ட், 18 Ah பாட்டரியாக விளக்கு ஒளிரவும் மொபைல் போன்கள் சார்ஜ் செய்யவும் மற்றும் குறைந்த வாட்டேஜ் மின்சாரம் தேவையான உபகரணங்களுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2020- அக்டோபர் மாதத்தில் (Selco வுடன் இணைந்து) பயன்பாட்டுக்கு வந்துள்ளது அடுத்தநிலை மறுபயன்பாட்டு பேட்டரிகள் (TERI) கூட்டணியுடன் பயன்பாட்டில் உள்ளது.
இரண்டு ஆண்டிற்கு முன்னர் "நூனம்" நிறுவனத்தின் இந்த கண்டுபிடிப்பிற்காக EDF - ன் பல்ஸ் இண்டியா போட்டியில் முதல் பரிசினை வழங்கி கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Contact: Brigade MM, C-23, 2nd Floor, Krishna Rajendra Rd, 7th Block, Jayanagar, Bengaluru, Karnataka 560082
Website: www.nunam.com
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.