செல்வி. பூஜா ஆப்தே (Miss. Pooja Apthe) வயது 28 பூனே வைச் சேர்ந்த முதுகலைப் பட்டம் பெற்ற தொழில்முனைவர் (Entrepreneur) பெருமளவில் மாசு ஏற்படுத்தும் வாகன டயர்களின் கழிவுகளுக்கு ஒரு தனித்துவமான தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு கண்டுள்ளார்.
பயன்பாட்டுக்குப் பிறகு கழிவு செய்யப்படும் டயர்களை இதுவரையில் பைரோலைஸிஸ் (Pyrolysis) என்ற முறையில் தக்க வெப்பத்தின் மூலம் கரி (Carbon Black) இயந்திரத் தொழிலுக்கான காண எண்னை (Industrial Oil) கட்டுமானத்திற்கு பயன்படும் சில பொருட்களைப் பிரித்தெடுத்து பயன்படுத்துகிறது. ஆனால் இந்த முறையில் வெளியேற்றப்படும் கரியமில வாயு (Carbon Di Oxide) பெரிய அளவில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்து வதால் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டன்கள் கணக்கில் சேர்மானமாகும் இத்தகைய வாகன டயர்களை பயனுள்ள வகையில் மாற்றம் செய்து காலணிகள் உற்பத்தி செய்யும் முறையினை பூஜா ஆப்தே செயலாற்றி வருகிறார். இந்த கண்டுபிடிப்பிற்காக 2018 - ஆம் ஆண்டு "முன்னேரும் தொழில்முனைவர்" (Upcoming women Entrepreneur) என்ற விருதினை " மகாராஷ்டிரா மாநில கண்டுபிடிப்பாளர் முகமை (Maharashtra State Innovation Society) அளித்து கௌரவப்படுத்தி உள்ளது. 2019 - ஆண்டில் தொழில் ரீதியாக "நிமித்தல்" காலனி வணிகத்தை" பிளிங்க் கிரீன்" என்ற நிறுவனத்தின் மூலமாக துவக்கி உள்ளார் பூஜா ஆப்தே!
சுமார் 400 கிலோ கழிவு செய்யப்பட்ட வாகன டயர்களைப் பயன்படுத்தி 1000 ஜோடி டயர் காலணிகளை சந்தைப்படுத்தி உள்ளார். சற்று எடை அதிகமாக இருந்த காலணிகளை தற்போது எடை குறைந்த காலனிகளாக வடிவமைத்தது மட்டும் இல்லாமல் பல வகையான கவர்ச்சியான காலணிகளை வழங்கி சாதனை நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில் குதிக்கால் உயர்ந்த காலணிகளையும் (High Heals Chappels) அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறார். கோலாப்பூரிஸ் (Kohlapuris) மேஜ் ரிஸ். சேண்டல்கள் (Sandals) வகைகளும் தற்சமயம் தயாரித்து மும்பை, தானே, புனே மற்றும் ஆந்திராவிலும் தடம் பதித்துள்ள வணிகம் விரைவில் இந்தியா முழுவதும் விரிவு படுத்த உள்ளது. அடுத்த ஆண்டில் உலக சந்தைக்கும் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாக நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் பூஜா ஆப்தே.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.