உலகெங்கிலும் உள்ள பெருமளவிலான கழிவு உயிரிகளை சந்தைப்படுத்தக்கூடிய பொருட்களாக மாற்றுவதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் பணியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 120 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பயிர்கள் மற்றும் காடுகளின் எச்சங்கள் திறந்தவெளியில் எதிர்க்கப் படுகின்றனர். இவை அனைத்தையும் உற்பத்தி ரீதியாக பயன்படுத்தினால் இந்த எச்சங்கள் உலக அளவில் 10 பில்லியன் டாலர்கள் சந்தையை ஏற்ப்படுத்தும், காற்று மாசுபாட்டை குறைக்கும்.
இந்தியாவிலும் காற்று மாசுபாட்டிற்கு குறிப்பாக டில்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசங்களில் விவசாய நிலங்களில் அறுவடைக்கு பிறகு உள்ள கழிவுகளை (Stubble) எரிப்பது ஒரு முக்கிய காரணமாகும். ஆண்டாண்டாக எரியும் காலங்களில் டெல்லியில் மட்டுமே காற்று மாசுபாடு பாதுகாப்பான வரம்பைவிட 14 மடங்கு அதிகமாகிறது இது வளிமண்டலத்தில் நச்சு மூட்டத்தை ஏற்படுத்தி பல விதமான உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
2018 - ஆம் ஆண்டில் டெல்லியில் வசிக்கும் திரு.வித்யூத்மோகன் 29 வயதான இளைஞர் டக்காச்சார் (Takachar) என்ற சமூக நிறுவனத்தை துவக்கி அதன் மூலம் விவசாய கழிவுகள் எரிக்கப் படுவதைக் தடுப்பதற்கான தீர்வை தொடங்கினார். அதே நேரத்தில் விவசாயிகளுக்கு வருமான வாய்ப்பையும் உருவாக்கியுள்ளார்.
திரு- வித்யூத் மோகன் விவசாய கழிவுகளை வறுக்கும் ஒரு சிறிய சாதனத்தை கண்டுபிடித்து வடிவமைத்துள்ளார் இச்சாதனம் அனைத்து விவசாய கழிவுகளையும் வெப்பத்தின் மூலம் வறுத்து கரி, உரங்கள் மற்றும் நீர் வடிகட்டுதல் (Water Filter) அமைப்புகளில் பயன்படுத்தப்படும் செயல்படுத்தப்பட்ட கார்பனாக (Activated Charcoal) மாற்றுகிறது.
தொழில்நுட்பம்:
இந்த குறைந்த விலை நடமாடும் சாதனம் "ஆக்ஸிஜன் லீன் டோரிபேக்ஷன்" (Oxygen Lean Torrefaction) முறையில் வேலை செய்கிறது. அதன்படி விவசாயக் கழிவுகள் 250 degree C லிருந்து
300 degree C வரையில் குறைந்த அளவு பிராணவாயு சூழலில் (Low Oxygen Atmosphere) ல் வைத்திருப்பதன் மூலம் திடமான அடுப்புக்கரி மற்றும் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
திரு. வித்யூத் மோகனின் இந்த கண்டுபிடிப்பு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் 2020 ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மற்றும் வித்யுத் மோகன் (Young Champion Of Earth) "பூமியின் இளம் சாம்பியன்" என்றும் பெயரிடப்பட்டார். சமீபத்தில் தகாச்சார் நிறுவனம் சுற்றுச்சூழல் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் இளவரசர் வில்லியமின் தொடக்க “எர்த்ஷாட” (Earth Shot) பரிசையும் வென்றுள்ளார். மேலும் "க்ளின் அவர்ஏர்" (Clean Our Air) என்ற பரிசையும் 1.2 மில்லியன் பரிசுத் தொகையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Website: http://takachar.com/
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.