நல்ல வருமானம் தரும் அலங்கார பூக்கள் குருகிராமைச் சேர்ந்த (Gurugram) திரு.அமீத்திரிபாதி - 42 (Mr.Amit Tripathi) திருமதி. பூஜா (Mrs. pooja) தம்பதியினர் "பிரிங்மை பிளவர்" (Bring my Flower) என்ற மலர் சந்தாக்கள் (Flower Subscriptions) மற்றும் மலர் செண்டுகள் (Flower Bouquet) நிறுவனத்தை வணிகரீதியில் 2016 ஆண்டு துவக்கி கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
நகரத்தில் பல வீடுகள் மற்றும் பல அலுவலங்களில் மலர் கொத்து அலங்காரங்களில் ஆர்வம் உள்ளவர்களாகவே உள்ளனர். ஆனால் பலவகையான மலர்களை வாங்கி வருவதில் சிரமம் இருப்பதை அறிந்துள்ளனர். இவர்களின் அன்றாட தேவைகளை BMF (Bring My Flower) நிறுவனம் தினம், வார, மாத சந்தாதாரர்களை ஒன்றிணைத்து அவர்களிடத்திலேயே அமைத்துத் தருவதன் மூலம் லாபகரமான வணிகச் சந்தையை ஏற்படுத்தியுள்ளது.
திரு. அமீத் திரிபாதியின் விற்பனை அனுபவமும் திருமதி. பூஜா வின் வணிக அனுபவ தொழில்நுட்பமும் நிறுவனத்தின் வளர்ச்சியை உறுதி செய்கிறது. தற்போது 19 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு சேவையை செய்து வருகின்றனர்.
நுகர்வோரின் தேவைக்கேற்ப 6 வகையான சந்தா திட்ட அமைப்புகள் (Subscription Plans) ரூ 650/- மாதத் திட்டம் முதல் ரூ. 3250 மாதத் திட்டம் வரையிலும் உள்நாட்டு மலர்கள் தவிர பல வெளிநாட்டு மலர்களும் கொண்டு மலர்ச் செண்டுகள் மற்றும் மலர் தொட்டி அலங்காரம் அமைத்து கொடுக்கப்படுகின்றன.
மாதம் ரூ. 650/- திட்டம் "மகிழ்ச்சி" (Delight) என்ற பெயரிலும் RS. 3250/- திட்டம் "மலர்மந்திரம்" (Enchantment) என்ற பெயரிலும் செயலாற்றப் படுகிறது.
ரூ 10 லட்சம் முதலீட்டில் 2016-ல் துவங்கப்பட்ட "பிரிங் மை பிளவர் " (Bring my Flower) என்ற நிறுவனம் 21 வாடிக்கையாளர்களில் இருந்து தற்போது 40000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டதாகவும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பது பாராட்டத்தக்கது.
Address:
A-116, First Floor, Nirvana Courtyard Gurugram, Haryana, India 122018
Call: 097171 73327
bloom@bringmyflowers.com
Our Website: http://bringmyflowers.com/
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.