April 02, 2021

ஊறுகாய் புல் (SILAGE )

ஊறுகாய் புல் என்றால் என்ன ?

வறட்சி காலத்தில் மாட்டிற்கு பசுந்தீவனம் கொடுப்பதென்பது பெரிய சவாலாகவே உள்ளது. ஆகையால் அச்சிக்கலை போக்க கொண்டுவரப்பட்ட ஒரு மாற்று முயற்சியே இந்த சைலேஜ் .

சைலேஜ் தயாரிப்பது எப்படி ?

பசுந்தீவன புற்களை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கோணி பையிலோ அல்லது துணி பையிலோ காற்று புகாதவாறு நன்கு அடைத்து  கட்டி, சூரிய ஒளி படாதவாறு 21 முதல் 45 நாட்கள் வரை பாதுகாப்பாக  வைத்திட வேண்டும். எலிகள் அதை தீண்டாதவாறு பார்த்துக்கொள்வது மிக அவசியம்.

45 நாட்களுக்கு பிறகு  அந்த புல்லில் நல்ல நொதிப்புத்தன்மை ஏற்பட்டுவிடும். அதன் பிறகு அதை மாட்டிற்கு தீவனமாக கொடுத்தால் மாடு நான்கு உண்ணும்.சைலேஜால் ஏற்படும் நன்மைகள்

ஒரு மாட்டிற்கு பசுமை காலத்தில் ஒரு வகை தீவனமும் வறட்சி காலத்தில் ஒரு தீவனமும் கொடுக்கும்போது மாட்டிற்கு உடல் உபாதைகள், உடல் எடை குறைதல் மற்றும் பால் உற்பத்தியில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சைலேஜ் கொடுப்பதன்மூலம் 365 நாட்களும் மாடு ஒரே மாதிரியான தீவனத்தை உட்கொள்ளும். இதனால் மாடு நல்ல ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுகிறது.

சைலேஜ்  கொடுப்பதினால் நமக்கு வேலை பழு கணிசமாக குறைகிறது.

அதுமட்டுமில்லாமல் வைக்காப்பிலோடு ஒப்பிடுகையில் எது மிகவும் மலிவானது மட்டுமின்றி சத்தானதும்கூட.

சைலேஜ் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.

சைலேஜில் புரதம் (ப்ரோடீன்) 8%, நார் சத்து  (FIBER ) - 23 % உள்ளது.

குறிப்பு

மேலே குறிப்பிட்ட செய்முறை குறைந்த அளவில் சைலேஜ்  தயாரிப்பதற்கானது. டன் கணக்கில் உற்பத்தி செய்ய பங்கர் முறை மற்றும் பிட் முறையே சிறந்தது..

அதை பற்றிய முழு விவரங்களும் எங்கள் COUNTRY FARMS YOUTUBE சேனலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
நிச்சயம்  உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதற்கான லிங் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

சைலேஜ் எந்த தீவணங்களில் செய்வது ?

கோ 4, கோ 5, சூப்பர் நேப்பியர் , மக்கா சோளம் ஆகியவற்றில் செய்வது சிறந்தது. அதிலும் குறிப்பாக மக்கா சோளம் நல்ல பயனை தருகிறது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சைலேஜ் உற்பத்தி செய்யா இயலாதவர்கள் எப்படி இதை பெறுவது ?

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஞான சேகரன் அவர்கள் சைலேஜ் தயாரித்து தங்கள் மாட்டிற்கு கொடுப்பதோடு  விற்பனையும் செய்துவருகிறார்.

தமிழ்நாட்டில் தற்போது 3000 டன் எடை சைலேஜ்  உற்பத்தி செய்து வருகிறார்.

இவர் பங்கர் முறையில் தயாரித்து வருகிறார்.

இவரை பற்றிய மேலும் விவரங்களும் சைலேஜ் தயாரிக்கும் முறையும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . இதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாடுகள் சைலேஜ் சாப்பிட பழக்க வேண்டுமா ?

தேவையே இல்லை. எல்லா மாடுகளும் கொடுத்த உடனே நன்கு சாப்பிடும். ஒரு சில மாடுகளுக்கு இது பழக ஒரு நாள் பிடிக்கும்.

சிலாஜ் கொடுப்பதால் பால் உற்பத்தியில் ஏதும் பாதிப்பு வருமா?

நிச்சயம்  இல்லை. இன்னும் சொல்ல போனால் பால் உற்பத்தி கணிசமான அளவில் அதிகரிப்பதை நீங்களே உணரலாம்.

பால் தரத்தில் ஏதும் வேறுபாடு வருமா ?

நிச்சயம் வரும். அது உங்கள் லாபத்தை பேருக்கும். காரணம் பாலின் தரம் சற்று நிச்சயமாக உயர்ந்துள்ளது என்பது பயன்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

சைலேஜ்  எதனை நாட்கள் சேமித்து வைக்கலாம் ?

இது வருட கணக்கில் கூட சேமித்து வைக்கலாம். அனால் ஒரு முறை அந்த பையை திறந்து விட்டால் அதை அன்றோ அல்லது மறு நாளைக்குள்ளோ அதை மாட்டிற்கு கொடுத்துவிட வேண்டும். இல்லையேல் அதில் பூசணம் (FUNGUS ) பற்றிவிடும்.

பூசணம் பிடித்த சைலேஜை  வெயிலில் காய வைத்து பயன்படுத்தலாமா ?

நிச்சயம் கூடாது.

மேலும் சைலேஜ்  பற்றிய தகவல்களுக்கு நமது YOUTUBE சேனலை காணவும். 

You Tube Link:

https://youtu.be/xd_ig7BraaM

3000 Ton Silage:

https://youtu.be/u15aickM-nk

Silage Full Video:

https://youtu.be/y0QCUZFb33M

Silage Bags:

https://youtu.be/gy_OVQ1PhG8

Contact: 9488410405

 

எழுத்து

மகுடேஸ்வர்

 

Stories