கர்நாடகா மாநிலத்தின் கோலார் மாவட்டம் பெருமளவில் தக்காளி உற்பத்தி செய்வதில் பெருமை கொள்கிறது. நாம் தினமும் பயன்படுத்தும் தக்காளியை சுமார் 9000 ஏக்கரில் கோலார் மாவட்டம் பயிர் செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 4 லட்சம் டன் தக்காளி இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
COVID - 19 என்ற கொரோன நோய் பரவியதால் நடைமுறை படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து தடைகளால் உற்பத்தி செய்த தக்காளியை சந்தை படுத்த முடியாமல் வேதனைப்படும் தக்காளி விவசாயிகளை சற்று கற்பனை செய்து பாருங்கள்.
அறுவடை செய்த தக்காளியை அவர்கள் என்ன செய்ய முடியும்? இத்தகைய பேரிழப்பை எவ்வாறு தாங்குவது?
சகஜமான நிலை திரும்ப சொற்ப வாய்ப்பே உள்ள இந்த நிலையில் 49 விவசாய குடும்பங்களுக்கு உதவும் வகையில் கோலார் மாவட்டத்தை சேர்ந்த "கிராம விகாஸ்" என்ற கிராம முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு அதற்கான திட்டத்தை முன்னெடுக்கிறது.
அதன்படி பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் தக்காளியை மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றி விற்பனை செய்ய உதவி செய்கிறது. மேலும் இந்த திட்டமானது 49 விவசாயக் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கிறது.
அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் கோலார் மாவட்டமும் ஒன்று. இங்கு பலவகையான தக்காளி ஏற்றுமதி செய்து வணிகச் சந்தையில் ஒரு இடத்தினை ஏற்படுத்தி உள்ளது. இது வரையில் இந்த வியாபாரத்தில் விவசாயிகள் நல்லதொரு லாபத்தையும் பெற்று வந்தனர்.
இந்த ஆண்டும் மார்ச் 23ஆம் தேதி வரையில் 2619 கிவின்டால் (1 கிவின்டால் - 100 கிலோ) மாதம் தோறும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அதுவரையில் ஒரு கிவிண்டால் Rs.1133 க்கு விற்பனை செய்யப்பட்டது அடுத்த நாளே அதிர்ச்சி அளிக்கும் வகையில் கிவின்டால் Rs.133 -/- க்கு சரிந்தது.
கோலாரில் உள்ள முல்பகல் தாலுகாவில் மட்டும் 340 க்கும்
மேல் கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக 5 தக்காளி விவசாயிகள் உள்ளன. இத்தனை கிராமங்களிலிருந்தும் உற்பத்தியாகும் தக்காளி கேரளம், தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு போக்குவரத்து பிரச்சனையால் தேக்கமடைந்து அழிகிறது.
தக்காளியை அறுவடை செய்த ஒரு சில நாட்களில் உபயோகப்படுத்த விட்டால் அனைத்தும் அழுகிவிடும் இத்தகைய பேர் இழப்புகளை தவிர்க்க அரசாங்கம் உணவு பதப்படுத்தும் யூனிட்டுகளை அமைத்தாலும் விவசாயிகள் பல இடர்ப்பாடுகளை சந்திக்கின்றனர்.
தோட்டக்கலைத் துறை இயக்குனர் திரு.B வெங்கடேஷ் ஆங்கில பத்திரிக்கை "இந்தியன் எக்ஸ்பிரஸ்" க்கு அளித்துள்ள செய்தியின்படி தினசரி உற்பத்தியாகும் 1500 டன் தக்காளியில் 250 டன்கள் உணவு பதப்படுத்தப்படும் யூனிட்டுகளில் பதபடுத்தியும் மிக அதிக அளவில் உபரி தக்காளி உள்ளதாக தெரிவிக்கிறார் சென்னை , கேரளம் ஆந்திர மாநிலங்களுக்கு போக்குவரத்து காரணங்களால் மிகக்குறைந்த அளவிலே அனுப்பப்படுவதாக கூறுகிறார் "கிராம விகாஸ்" அரசு துறையில் பணிபுரியும் MS. கிரிஜா அவர்கள் "டெக்கன் ஹெரால்ட்" பத்திரிக்கைக்கு கூறும்போது நம் விவசாயிகள் பெருமளவில் சரிந்துள்ளன. தக்காளியின் பயன்பாட்டினால் பொருளாதார சிக்கலில் போராடிக் கொண்டுள்ளனர் என்று கூறுகிறார்..
தக்காளியின் ஆயுளை நீடிக்க பதப்படுத்துதல்:
தற்போது அதிக அளவில் கிடைக்கும் சூரிய வெப்பம் மற்றும் நேரத்தைக் கொண்டு விவசாயிகளுக்கு உதவியாக இருக்க எண்ணியதன் அடிப்படையில் முல்பாகல் தாலுகாவில் உள்ள 49 குடும்பங்களில் பெண்களுக்கு உலர் தக்காளியும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக ஒரு கிலோ 5 -/-க்கு கோலார் கிராமத்திலிருந்து ஒரு டன் தக்காளி வாங்கி பயன்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டமானது இதுவரையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. வரும் ஆண்டுகளிலும் இந்த திட்டம் சிறப்பாக பெண்களால் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட தக்காளி வற்றலும் ஊறுகாயும் நியாயமான விலையில் விற்கப்படுவதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
"கிராம விகாஸ்" நிறுவனத்தில் பணிபுரியும் திருமதி.ராதா அவர்கள் தக்காளி ஊறுகாய் மற்றும் தக்காளி வற்றல் ஆகியவற்றிற்கு அவர் பயன்படுத்திய பொருட்கள்
தக்காளி ஊறுகாய்
பயன்படுத்தப்பட்ட பொருட்கள்:
- சிறு துண்டுகளாக வெட்டிய தக்காளி
- வரமிளகாய்த்தூள்
- மஞ்சள் தூள்
- சுத்தப்படுத்திய புளி
- வெந்தயம்
- கடுகு
- உப்பு
- சூரியகாந்தி எண்ணெய்
- பெருங்காயம்
- விதை நீக்கிய வரமிளகாய்
- பூண்டு
- கருவேப்பிலை
தக்காளி வற்றல் (Sundried Tomato flakes)
தக்காளி வற்றலும் அதே பொருட்களை தேவைக்கேற்றபடி கலந்து நன்றாக சூரிய ஒளியில் உலர வைத்து பாட்டில்களில் அடைத்து விற்கப்பட்டது.
இவ்வாறாக தயாரிக்கப்பட்ட தக்காளி ஊறுகாய் ஒரு ஆண்டு வரையிலும், தக்காளி வற்றல் 6 மாதம் வரையிலும் கெடாமல் பயன்படுத்த முடியும் என்கிறார் நிறுவனத்தின் இயக்குனர்.
மேலும் அவர் கூறுகையில் தக்காளி விவசாயிகள் சிறு சிறு குழுக்களாக அமைத்து தக்காளியை பதப்படுத்துதல் மூலம் தங்களின் எதிர்காலத்தை வளப்படுத்த முடியும் என்று நம்புகிறார்.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.