கரிம எரிவாயு என்பது ஒரு நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பம். இது கரிமக் கழிவுகளை காற்றில்லா செரிமான செயல் முறையுடன் சுத்தமான ஆற்றல் வளமாக பயன் தருகிறது உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரை பூர்வீகமாகக் கொண்ட டெல்லியின் ஐஐடி ஐச் சேர்ந்த பொறியாளர் ரத்னேஷ்திவாரி அனைத்து வகையான கரிமக் கழிவுகளையும் ஜீரணிக்க்க கூடிய திறமையான உயிர் எரிவாயு அமைப்பை உருவாக்கி உள்ளார். இது ஏராளமான தொழில்களுக்கு வழங்குவதன் மூலம் அதன் பயன்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.
பொறியாளர் திரு. ரத்னேஷ் திவாரி கிராமப்புற வாழ்க்கை முறையில் வளர்ந்ததினால் நேர் அனுபவமும் விவசாயிகளின் அவல நிலையும் வாழ்க்கையில் முன்னேற அவர்கள் படும் போராட்டங்களையும் புரிந்துகொண்டு சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளுக்கு பங்களிக்கும் வகையில் குறைந்த முதலீட்டில் அவர்களுக்கு அதிகபட்ச வருவாய் வழங்குவதற்கான ஒரே தீர்வாக மூன்று பேர் கொண்ட குடும்பத்திற்கு தினசரி எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய சிறிய உயிரி எரிவாயு ஆலையை உருவாக்கி வழங்கியுள்ளார் விலை உயர்ந்த எல்பிஜி சிலிண்டர்களை வாங்குவதற்கான செலவினை முழுவதுமாக இது தடுக்கிறது.
தொழில்நுட்பம்:-
செயல் முறைக்கு மாட்டுச் சாணத்தை மட்டுமே கோரும் பிற உயிர் வாயு ஆலைகளைப் போலல்லாமல் புதுமையான டைஜஸ்டர் சமையலறைக் கழிவுகள், கோழி கழிவுகள், விவசாயக்கழிவுகள், காகிதக் கழிவுகள் மற்றும் பிற கரிம கழிவுகளை சிதைத்து எரிவாயுவை அளிக்கிறது இது தொட்டியின் உள்ளே அடைப்பையும் கரையும் உருவாக்குவதை தடுக்கிறது.
வழக்கமான உயிர் வாயு அமைப்புகளில் லேசான எஃகு மூலம் தயாரிக்கப்பட்ட எரிவாயு ஹோல்டர்கள் உள்ளன. அவை அரிப்புக்கு ஆளாகின்றன மற்றும் சில ஆண்டுகளில் மோசம் அடைகின்றன. இத்தகைய சிக்கலைத் தீர்க்கும் வகையில் எஃகுக்கு பதிலாக ஃபைபர் ரீ இன்ஃபோர்ஸ்டு (Fibre Reinforced Plastic) FRB பிளாஸ்டிக்காக மாற்றிய மைக்ககப்பட்டு உயிர்வாயு ஆலையின் ஒட்டுமொத்த ஆயுளை அதிகரிக்கிறது.
அதன் உள்ளே அசுத்தங்களை அகற்ற துப்புரவுப்பிரிவையும்
கொண்டுள்ளது. இதனால் 95 சதவீதம் வரையில் தூய்மை அடைகிறது.
துணைப் பொருளாக பெறப்படும் குழம்பு (Slurry) செடிகளுக்கு வளமான உரமாக செல்கிறது.
இந்த தொடக்க நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயிர் வாயு ஆலைகளை நிறுவியுள்ளதன் மூலம் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் எல் பிஜி வாயு செலவுகளை மிச்சப்படுத்த உதவியுள்ளது. இவை விவசாயிகளின் கோழி தொழில், குடியிருப்பு சங்கங்கள், பள்ளிகள், உணவு மற்றும் குளிர்பான தொழில் ஆலைகள், கோயில்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்ற பொது மற்றும் தனியார் இடங்களிலும் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரான திரு. ராஜ் கோஹைன் கூறுகையில் தனது கால்நடை பால் பண்ணையின் கழிவுகளை நிர்வகிக்க இந்த ஸ்டார்ட அப்பின் பயோ கேஸ் பொருத்தி ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரம் சுத்தமான எரிபொருளை பயன்படுத்தி
ஜென் செட்டை இயக்குவதால் பாராட்டத்தக்க பலனை பெற்றுள்ளார். உயிர் வாயிலிருந்து பெறப்படும் மின்சாரம் நீர் குழாய்கள், குளிரூட்டிகள் மற்றும் பிற கனரக உபகரணங்களை இயக்க உதவுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
வீட்டு உபயோகத்திற்கான சிறிய உபகரணம் ஒன்று சுமார் ரூ 60,000/- வரையிலும், பெரிய அளவு மின் உற்பத்தி உபகரணம் ரூ 10 லட்சம் முதல் ரூ 1 கோடி வரையிலும் உள்ளது.
ஒவ்வொரு விளிம்பு நிலை விவசாயிகளையும் கிராம மற்றும் நகர பயனர்களையும் இதன் மூலம் பயனடையச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு டாக்டர் திரு. ரத்னேஷ் திவாரி (32) அவர்களன் துவக்க நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.
புதுக்குறள்:
"பொன்னே விளைந்தாலும் மண் மட்டும் மிஞ்சும்
துன்பியல் ஹிரோ விவசாயி"
Our Website: www.koshishindia.in