1. எக்கோ ப்ராஸ்ட் (Eco Frost) என்றால் என்ன?
எக்கோ ப்ராஸ்ட் (Eco Frost) சூரிய தகட்டின் மூலமாக தன் மின் சக்தியை எடுத்துக் கொண்டு Compressor க்கு அனுப்பப்பட்டு Program செய்யப்பட்ட Algorithm வழியாக செயலாக்கப்படுகிறது.
இதனுடன் ஒரு சின்ன பேட்டரி (Battery) பொருத்தப்பட்டு அதுவும் சூரிய தகட்டின் உதவியால் தானாகவே சார்ஜ் (Charge) செய்து கொள்ளும் படி அமைக்கப்பட்டுள்ளது.
2. அந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற எவ்வளவு நேரம் ஆகும்?
ஒரு நாள்
3. கிரிட் (Grid) பொருத்தப்பட்டுள்ளதா?
ஆம் Hybrid சோலார் உடன் சேர்ந்து Grid அமைக்கப்பட்டுள்ளது.
4. Chemical Battery (பேட்டரி) டீசல் பேட்டரி உள்ளதா?
இல்லை,ஒரு சின்ன பேட்டரி தவிர வேற எதுவும் இல்லை.
5. மின்சாரம் இல்லாத போது எவ்வளவு நேரம் குளிர்சாதனப்பெட்டி இயங்கும்?
24 - 30 மணி நேரம் வரை.
6. வெப்ப அளவு கோல் உள்ளே எவ்வளவு இருக்கும்?
4-10 டிகிரி (Degree)
7. எக்கோ ப்ராஸ்ட் (Eco Frost)
ஏதேனும் கைத்தொலைபேசி (Mobile) மூலமாக இயக்க முடியுமா?
ஆம் Mobile App Install செய்யப்பட்டுள்ளது அதன் மூலமாக வெப்பநிலையை கண்காணித்து கொள்ளலாம்.
8. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்தி செல்ல முடியுமா?
ஆம் இதை எங்க வேணாலும் நகர்த்தி செல்ல முடியும்.
9. இதில் உள்ள சோலார் பேனல் (Solar Panel) எத்தனை
K.W?
5.2 K.W
10. இதன் ஈரப்பதம் எவ்வளவு?
65-95%
11. வாடிக்கையாளர்களுக்கு ஏற்றபடி அளவு செய்து கொடுக்கப்படுமா?
ஆம் ஆனால் நீளம் மட்டும் குறிப்பிடத்தக்கவை.
12. இன்வெர்ட்டர் (Inverter) ஏதும் உள்ளதா?
ஆம் அலைவரிசையின் தடங்களை சரி செய்ய இன்வெர்ட்டர் (Inverter) பொருத்தப்பட்டுள்ளது.
13. இதுவரை எவ்வளவு குளிர்பதனப் பெட்டிகள் (Cold Storage) விற்பனையாகியுள்ளது ?
200 க்கும் மேலாக
14. இதன் சேமிப்பு திறன் எவ்வளவு?
2MT (Metric Ton)
15. வழக்கமான குளிர்பதனப் பெட்டியை ஒப்பிடுகையில் இது எவ்வாறு சிறந்தது?
Chemical பேட்டரி பயன்படுத்த படததினால் பராமரிப்பு மிகவும் எளிது.
17. ஈகோ ஜென் (Eco Zen) இதுவரை எவ்வளவு டீசல் மிச்சப் படுத்தி உள்ளது?
100000 Litre
18. இதன் பராமரிப்பிற்கு எவ்வளவு செலவாகும்?
மானியத்தில் வாங்கியவர்களுக்கு 5 வருடம் இலவச பராமரிப்பு. (Free Maintenance)
Cash and Carry மூலம் வாங்கியவர்களுக்கு ஒரு வருடம் இலவச பராமரிப்பு அளிக்கப்படுகிறது.
குறிப்பு: பேனல் மற்றும் சேமிப்புக் கிடங்கை (Flush water) தண்ணி மூலம் சுத்தம் செய்தால் போதுமானது.
19. மின்சாரம் இல்லாத நேரத்தில் தேர்மல் எனர்ஜி (Thermal Energy) மூலமாக இயங்கும் போது எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கும்?
25 - 30 மணி நேரம்
20. இதன் Refrigeration Capacity எவ்வளவு?
2.7 TR
21. சோலார் பேனல் தனியாக வாங்க வேண்டுமா?
இல்லை இதனுடன் சேர்ந்து இணைக்கப்பட்டிருக்கும்.
22. எந்த மாதிரியான இடங்களுக்கு இது உகந்தது?
சந்தை மற்றும் FPO போன்ற இடங்களில் உகந்தது.
23. என்னென்ன அளவுகளில் இப்போது விற்பனையில் உள்ளது?
15*10*10
16.3*8*8
12.5*8*10
24. குத்தகைக்கு கொடுக்கப்படுமா?
கொடுக்கப்படும் மாதம் 25000 க்கு. குத்தகை ஒப்பந்தம் குறைந்தது 3 மாதம்.
25. இதுவரை எத்தனை யூனிட்டுகள் (Units) குத்தகைக்கு விடப்பட்டுள்ளது?
மகாராஷ்டிராவில் மட்டும் 30 யூனிட்டுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
26. குளிர்சாதனப் பெட்டியின் குறைந்தபட்ச தொகை எவ்வளவு?
6 முதல் 15 லட்சம் வரை (அளவுகளைப் பொறுத்து) மானியங்களை பொருத்து விலை மாற்றம் இருக்கலாம்.
27. இதன் ஆயுட்காலம் எவ்வளவு?
10 ஆண்டு, அதன்பின் சில சிறிய உபகரணங்களை மட்டும் மாற்றினால் போதுமானது.
28. முதலீட்டுத்தொகையை திரும்ப சம்பாதிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
நாம் தேர்ந்தெடுக்கும் பொருட்களை பொருத்து, அதன் கால அளவைப் பொருத்தும், பொருட்களின் விலை ஏற்ற தாழ்வுகளை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
எக்கோ ப்ராஸ்ட்(Eco Frost) பற்றி ஒரு சிறிய காணொளி நமது சேனலில் பதிவு செய்துள்ளோம் லிங்கை கிளிக் செய்து நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
https://youtu.be/0oKW4aj-oWA
எப்படிப் பார்த்தாலும் 3-4 வருடத்தில் எடுத்துவிடலாம்.
இந்திய விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் விவசாய உற்பத்திப் பொருட்களில் 30 சதவீதத்திற்குமேல சரியான சேமிப்பு வசதிகள் இல்லாமல் இழக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. விவசாய விளை பொருட்கள் அனைத்தும் குறைந்த காலத்துக்குள் பயன்படுத்த படாவிட்டால் அழியக் கூடியது என்று அனைவரும் அறிந்ததே, பழங்கள் காய்கறிகள் வாழ்நாளை நீட்சி செய்வதன்மூலம் அவைகளின் அழிவினை தடுக்கலாம். அதற்கான ஒரே வழி குளிர்பதன கிடங்குகளில் சேமிப்பு தான். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு குளிர்பதன கிடங்குகள் எட்டாக்கனியாகவே உள்ளது.
இதற்கான தீர்வாக ஐ.ஐ.டி கரக்பூர் (IIT Kharagpur) பொறியாளர்கள் மூன்று பேர் திரு.தேவேந்திர குப்தா (Devendra Gupta), திரு.பிரதீக் சிங்கால் (Prateck Singhal) மற்றும் திரு.விவேக் பாண்டே (Vivek Pandey) "எக்கோ ப்ராஸ்ட்" (Eco Frost) என்ற சூரிய ஒளியினால் இயங்கும் ஒரு குளிர்பதனப் பெட்டி வடிவமைத்துள்ளனர். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான " எக்கோ ஃபிராஸ்ட் குளிர்பதனப் பெட்டியின் மூலம் 21 நாள் வரையில் காய்கள் மற்றும் பழங்களின் வாழ்நாளை நீட்சி செய்ய முடிவதால் சரியான விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் இழப்புகளை தவிர்க்க முடிகிறது.
புகைப்பட ஆதாரம்: Facebook
இத்தகைய குளிர்பதன பெட்டிகள் மூலம் 21 நாட்கள் வரையில் விவசாய பொருட்கள் தரம் குன்றாமலும் பசுமை மாறாமலும் இருப்பதால் சிறு குறு விவசாயிகள் இழப்பினை தவிர்த்து பொருளாதார நிலை முன்னேற்றம் அடைகிறார்கள்.
"எக்கோ ஃப்ராஸ்ட் (Eco Frost) சாதனைப்பெட்டியின் சிறப்புகள்:
- தேவையான அளவில் குளிர்சாதனப் பெட்டிகளை வடிவமைத்து கொள்ளலாம்.
- சூரிய ஒளி குறையும் நேரங்களில் தானாகவே மின்கல (Battery)
மின்சாரத்திற்கு மாறி தொடர்ந்து குளிர்விக்கிறது. முப்பது மணி நேரம் வரையில் குளிர்வு செய்யும் வகையில் பாட்டரிகள் பக்கபலமாக உள்ளது.
- வழக்கமான மின்சார கிரிட் (GRID) உடனும் இணைக்க முடியும், அதிகப்படியான சூரிய ஒளி உற்பத்தி கிரிட்க்கு தானாகவே மாற்றி மின்சார செலவுகளை குறைக்கிறது.
- குளிர்பதனப் பெட்டியின் வெப்பநிலை 4 °C வரையில் தொடர்ந்து பராமரிக்க முடியும்.
- இவை அனைத்தும் செல்போன் மூலம் ரிமோட் கண்ட்ரோல் செய்ய முடியும்.
- மிகக் குறைந்த பராமரிப்புச் செலவில் இயங்கக்கூடியது.
" எக்கோ ஃப்ராஸ்ட்" குளிர்சாதன பெட்டி கண்டுபிடிப்பாளர்களின் "எக்கோஜென்" (Ecozen) நிறுவனத்தின் மூலமாகவே நிர்மாணித்துக் கொடுக்கிறது, எக்கோஜென் நிறுவனம் சூரிய ஒளி குளிர்சாதனப்பெட்டி அல்லாமல் சூரிய ஒளி நீரேற்றும் பம்புகள், நீர் பாசன உபகரணங்கள், விவசாயிகள், விற்பனையாளர் நுகர்வோர் அனைவரையும் விற்பனை ஆப்ஸ் (Apps) செல்போன் மற்றும் கணினிகள் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தும் பணியையும் செய்கிறது. மேலும் தொடர்ந்து விவசாயிகள் பயன்பெறும் வகையிலான கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இன்று வரையில் நூற்றுக்கும் மேற்பட்ட "சூரிய ஒளி குளிர்பதன பெட்டிகளை நிர்மாணித்து தொடர்ந்து முன்னேறி வருகிறது.
விவசாயிகளின் தோழனாக செயல்படும் "எக்கோஜென்" (Ecozen) நிறுவனம் வளர்க!
"புதுப்பிக்க இயலாத நிலக்கரி, எண்ணெய் போன்ற வளங்களை மிக அவசியமான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி அக்கறையுடன் சேமித்து பாதுகாத்தும் புதுப்பிக்கத்தக்க இயற்கையின் சூரிய ஒளி, காற்று, நீரின் வேகம் போன்றவற்றைப் பயன்படுத்தி தேவையான உற்பத்தியை பெருக்குவது தான் சிறந்தது"
Our Office Locations:
H.O. Pune, Maharashtra
Survey No. 134/1, 134/2, 130/3, Dehu Road, Katraj Bypass, Tathawade, Pune - 411 033, Maharashtra, India
Raipur, Chhattisgarh
VIP Road, Ajuba Park Campus, Near Hotel Grand Neelam, Raipur – 492 006, Chattisgarh, India
Our Toll-Free Number
1800 121 7515