“ப்ருஹத் பெங்களூரு மஹாநகர பாலிக்கே” (Bruhat Bengaluru Mahanagar Palike) BBMP அதிகாரிகள் கணக்கின்படி பெங்களூரு நகராட்சிப் பகுதியில் மட்டும் ஒரு நாளில் 4000 டன் கழிவுகள் சேர்மானம் ஆகிறது. அதில் 20% சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள். அதாவது 800 டன் பிளாஸ்டிக் கழிவுகள். இவை அனைத்தையும் ஒரு அரசு சாரா அமைப்பு (NGO) பிளாஸ்டிக் நடைபாதை கற்களாகவும் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் குழாய்களாகவும் மறுசுழற்சி செய்து காட்டியுள்ளது.
BBMP யும் ஸ்வாச்சா என்ற அரசு சாரா அமைப்பு இணைந்து "ரீடைல்" (Re-Tile) என்ற பெயரில் கழிவு பிளாஸ்டிக்குகளை கொண்டு தயாரிக்கப்பட்ட கற்கைளப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
"ரீ டைல்" (Re-Tile) தயாரிப்பு:
- தினமும் சேர்மானம் ஆகும் திடக்கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் பிரித்தெடுக்கபடுகிறது.
- பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் சிறிய துகள்களாக அரவை இயந்திரத்தால் அரைக்கப் படுகிறது.
- அரைக்கப்பட்ட
பிளாஸ்டிக்துகள்களுடன் இணைப்பு சேர்மானங்களைக் கலந்து பலவகையான பிளாஸ்டிக் கற்களும் தண்ணீர்க் குழாய்களும் பிரக்யேகமான
இயந்திரங்களைக் கொண்டு தயாரிக்கப் படுகின்றன.
"ரீ-டைல்" (Re - Tile) சிறப்புகள்:
- வீட்டுத் தோட்ட நடைபானதகள், சாலை ஓரங்களில் உள்ள நடைபாதைகள், சுவர் அலங்கரிப்புகள், நீச்சல் குளதரைகள் அமைக்கப்படுகிறது..
- மிகக்குறைவான எடையுள்ளது.
- அதிகமான வெப்பத்தைத் தாங்க வல்லது 150°C வரையிலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
- பல ஆண்டுகளுக்கு பிறகும் "ரீ - டைல்" மறுசுழற்சி செய்ய முடியும்.
- கற்களின் பிரத்தியேகமான வடிவமைப்பினால் பாதை அமைக்க கற்களின் இடையே எந்த விதமான இணைப்புப் பசையும் (Plasters) தேவையில்லை.
- பெரும்பாலான இரசாயணங்கள் இவ்வகை கற்களை எந்த விதத்திலும் சிறிது அளவு பாதிப்பு கூட ஏற்படுத்துவதில்லை.
- தேவையான நிறங்கள், உருவங்களில் தயாரிக்கப் படுகிறது.
- நுண்கிருமிகள் எதிர்ப்புச்சக்தி (Anti - Microbial) கொண்டது.
- கலை ரசனைக்கு ஏற்ப "ரீ-டைல்" கற்களை உருவாக்கப் படுகிறது.
உற்பத்தி அளவு கணக்கு:
15 - கழிவு செய்யும் பிளாஸ்டிக் உணவு கப்புகள் கோண்டு (Disposable Food Containers) ஒரு "Retile" தயார் செய்யப்படுகிறது.
150 - பாலிதின் பைகளைக் கொண்டு ஒரு "Re-title" தயார் செய்யலாம்.
4 - டன் கழிவுகளை கொண்டு ஒரு நாளைக்கு 10,000 "ரீடைல்" (Re-Tile) கற்களை உற்பத்தி செய்யப்படுகிறது.
பெங்களூருவில் மட்டும் 800 டன் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு 2500x800 "ரீடைல்" கற்களை உற்பத்தி செய்யலாம்.
"ஸ்வாச்சா" அரசு சாரா அமைப்பின் தலைமை திட்ட அலுவலர் (Chief Project Lead)
திரு.V.ராம் பிரசாத் கூறுகையில் தற்சமயம் ஒரு சதுர அடி "ரீ - டைல்" கல்லின் விலை ரூ 70/- ஆக இருந்தாலும் பெருகிவரும் பயன்பாட்டு அளவினால் மேலும் விலை குறையும் என்கிறார்.
Contact:07795571650
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.