ஐடியானோமிக்ஸ் (Ideanomics) என்பது ஒரு உலகளாவிய நிறுவனமாகும். இது நிதி சேவைகள் மற்றும் தொழில் நுட்ப அடிப்படையில் இயங்கும் தொழில்களின் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துகிறது. இதனுடைய ஒரு துணை நிறுவனமான "சோலெக்ட்ராக், இன்க" (Solactrac Inc) வடக்கு கலிபோர்னியா (North California) வில் அமைந்துள்ளது. விவசாயம் மற்றும் பயன்பாட்டு நடவடிக்கைகளுக்காக 100% பேட்டரி மூலம் இயங்கும், அனைத்து வகை மின்சார ட்ராக்டர் களையும் உருவாக்கியுள்ளது.
மின்சார டிராக்டரை பற்றி நமது சேனலில் காணொளி பதிவு செய்துள்ளேன் கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
https://youtu.be/XuhAUFh_PO4
சோலக்கட்ராக் டிராக்டர்கள் சூரிய ஒளி, காற்று முதலியவற்றை கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்தி உலகமெங்கிலும் உள்ள விவசாயிகளுக்கு தங்கள் சோலார் பேட்டரி மின்சார டிராக்டர்களை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு, உள்கட்டமைப்பு மற்றும் புதைபடிவ எரி பொருட்களுடன் (Fossil Fuel) தொடர்புடைய விலை ஏற்ற இறக்கம் ஆகியவற்றிலிருந்து விவசாயிகளுக்கு சுதந்திரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட குறுகிய மாதிரி (Narrow Model) சுலபமாக கையாளுதல் (Easy Handling) மற்றும் எளிமையாக சுழன்று செயலாற்ற (Maneuverabillity) வல்ல தாகவும் பண்ணை நடவடிக்கைகளுக்கு குறிப்பாக அங்குள்ள திராட்சைத் தோட்டங்களுக்காக பயன்படும் வகையில் சோலார் மின்சார டிராக்டர் உருவாக்கியுள்ளது.
அமைப்பு மற்றும் செயல்பாடு
(Design and Function):-
- சோலெக்ட்ராக் e70N மின்சார டிராக்டர் 4WD, 70 HP (குதிரைத்திறன்) வாகனமாகும்.
- இது பண்ணைகள் திராட்சை தோட்டங்கள் மற்றும் பல தோட்டங்கள் உள்ளிட்ட சிறிய பெரிய விவசாய பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பாட்டரி தொகுப்பை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் செயல்படும். மற்றும் மாற்றக்கூடிய பேட்டரி பேக்குகள் மூலம் அதன் நேரத்தை நீட்டிக்கும் திறன் கொண்டது.
- பேட்டரிகள் சூரிய வரிசை பேனல்கள் மூலம் சார்ஜ் செய்கிறது.
- சோலக்டாக்கின் மின்சார டிராக்டர்கள் அமைதியாகவும் டீசல் இல்லாததாகவும் இருப்பதால் உமிழ்வுகள் ஏதுமில்லை.
- திராட்சை தோட்டத்தில், பண்ணையில் வேலை செய்யும் மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்கிறது.
- டிராக்டர் பராமரிப்பு செலவுகள் கணிசமாக குறைக்கப்படுகிறது டீசல் டிராக்டரின் இயங்கு இயந்திர பகுதிகளை ஒப்பிடும்போது மின்சார டிராக்டர் ஒரு இயங்கு பகுதியை மட்டுமே கொண்டுள்ளது.
- சோலார் பேனல் இன்வெர்ட்டர்கள் மூலமோ, காற்றாலை மின்சாரம் மூலமோ, வீட்டு மின்சாரம் மூலமோ, சுலபமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.
பெரும்பாலான உலக நாடுகளில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான, விவசாயிகளுக்கு பொருளாதார நிலையை மேம்படுத்தக்கூடிய மின்சார டிராக்டர்களுக்கு பெருமளவு மாணியம் வழங்கப்படுவதன் உலகளாவிய பயன்பாடு பெருகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.