இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி மாவட்டத்தின் (Mandi District) கர்சாக் (Karsog) பள்ளத்தாக்கில் உரங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையை அமல்படுத்தி கொண்டிருந்தபோது திரு.நெக்ராம் சர்மா (Mr.Nekram Sharma) தனது பதின் பருவத்தில் (Teen Age) இருந்தார். 1980 களில் மானியங்கள் மூலம் உரங்கள் மற்றும் ஒற்றைப் பயிர் விவசாயத்தை ஊக்குவிப்பது நெக்ராமின் தந்தை உள்ளிட்ட விவசாயிகளுக்கு வழிவகுத்தது. உரங்களின் அதிகப்படியான பயன்பாட்டுக்கு மாறியது மற்றும் தினை பயிர்களில் இருந்து பணப்பயிர்களுக்கு அதிக லாபத்திற்காக மாறியது என்பது நிகழ்ந்து கொண்டிருந்தது.
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் நெக்ராமின் மற்றும் விவசாயிகளின் மண்ணும் நிலவளமும் மந்தமான நிலைக்கு தள்ளப்பட்டது. பொதுவாக நிலம் தீங்கு விளைவிக்கும் இரசாயணங்களுக்கு அடிமையாகிப் போனது. ஒரே இரவில் கரிம வேளான்மைக்கு (Organic Farming). மாறுவது சாத்தியமில்லை என்பதால் உரத்தின் அளவை படிப்படியாக திரு. நெக்ராம் ஷர்மா குறைத்து 2005 ஆண்டில் ரசாயன உரங்களை முழுவதுமாக அகற்றி அவரது நிலத்தை சீரழிவிலிருந்து காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் நுகர்வோருக்கு ஆரோக்கியமான உணவையும் வழங்குகிறார்.
100 ஆண்டுகளுக்கு மேலுள்ள வயதான விவசாயிகளிடமிருந்து பண்டைய விவசாய தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவை பெறுவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று "நவ் அனாஜ்" என்ற (நவ் - ஒன்பது அனாஜ் - பயிர்) என்ற ஒரு பழங்குடி விவசாய தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். இது ஒரே நிலத்தில் ஒன்பது உணவு தானியங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் புல்லின் கலப்பு விவசாயமாகும்.
2010 - ம் ஆண்டில் நெக்ரம் ஷர்மா "நவ் அனாஜ்" நடை முறைப்படுத்திய போது ஆச்சரியமூட்டும் முடிவுகளை தந்ததால் அந்த பிராந்தியத்தின் இருந்து மற்ற விவசாயிகளையும் பின்பற்றத் தூண்டியது. இது விவசாயிகளின் கூட்டுறவு நிறுவனமான "பார்வதியே டிக்காவ் கெட்டி அபியின் (பி.டி.கே.ஏ) (Paravatiye Tikau Kheti Abhiyan (PTKA) உருவாக்குவதற்கு வழி வகுத்தது.
"நவ் அனாஜ்" - ஒன்பது பயிர் முறையின் நன்மைகள்:
1. மிகக் குறைந்த நீர் பயன்பாடு.
2. மிகக் குறைந்த நீரை பயன்படுத்தும் பயிர்களை தேர்ந் தெடுக்கமுடிகிறது.
3. பயிரின் நைட்ரஜன் தேவைகளை சரி செய்ய முடிகிறது.
4. மண்ணின் வளம் அதிகரிக்கிறது.
5. மஞ்சள் போன்ற பயிர்களை தெரிவு செய்வதன் மூலம் பூச்சிகளை விரட்டமுடிகிறது.
6. சிறிய அளவு நிலங்களில் பல பயிர்கள் வேகமாக வளர்வதை செயலாற்ற முடிகிறது.
7. வைட்டமின் B12 நிறைந்த ஃபோக்ஸ்டைல் தினை (Fox Tail Millet) வறட்சி மற்றும் வெள்ளத்தில் விளைச்சலை உறுதி செய்கிறது.
8. திணைகள் மானாவாரி பயிர்கள் எனவே அவற்றின் வேர்கள் நீரை உறிஞ்சி வெள்ளத்தைத் தடுக்கும்.
9. தாவர பன்முகத்தன்மை மண்ணின் வளத்தை மேம்படுத்துகிறது மற்றும் பண்ணை விலங்குகளுக்கு பல வகையான தீவனங்களை வழங்குகிறது.
10. இந்த வகை விவசாய அமைப்பு பூச்சிகள் மற்றும் நோய்களைத் தடுக்கும்.
நமது சேனலில் சுபாஷ் பாலேக்கர் பயன்படுத்தும் ஐந்து அடுக்கு முறை பற்றி ஒரு விரிவான பதிவை போட்டுள்ளோம் கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
https://youtu.be/HwFAnaZgQnc
மக்காச்சோளம், மூங் (Moong), பீன்ஸ், ராஜ்மா, உளுத்தம் பருப்பு, ராம் தானா (Amaranthus) ஃபாக்ஸ் டெயில் திணை (Fox tail Millet), விரல் திணை (Finger Millet), பக் வீட் (Buck Wheat) ஓரங்களில் மா, மாதுளை மற்றும் லிச்சி போன்ற மரங்கள் நடப்படும் அவை இயற்கை வேலிகள் ஆக செயல்படுகின்றன.
தற்சமயம் 58 வயதான விவசாயி நெக்ராம் ஷர்மா அடுத்த பகுதியில் பெரும்பாலான விவசாயிகளை 9 பயிர் விவசாயத்திற்கு மாற்றியதோடு மட்டுமல்லாமல் தரமான விதைகளை விவசாயிகளுக்கு பகிர்கிறார் என்பது பாராட்டத்தக்கது.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.