October 14, 2021

சீனித்துளசி விவசாயம் ("stevia Cultivation")

பெருமளவில் வளர்க்கப்பட்டு இப்போது உலகின் பல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது.பஞ்சாப் மாநிலத்தின் பங்கா பகுதியை சேர்ந்த மென் பொறியாளர் திரு. ராஜ்பால் சிங் காந்தி ஒரு விவசாயியாக  மாறி சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் "சீனித்துளசி" (Stevia) விவசாயம் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.சீனித்துளசி/ இனிப்புத்துளசி / தேன்துளசி (Steviariboudiana) பற்றி :-

சீனித்துளசி தென்அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது 1887-ல் அண்டோனியோ பரோனி (Antonio Baroni)  என்பவரால் அடையாளம் காணப்பட்டது பராகுவே (Paraguay) பிரேசில் (Brazil), மற்றும் மெக்ஸிகோ (Mexico) பகுதிகளில் இந்தியாவில் தற்சமயம் பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் உத்திர பிரதேச பகுதிகளில் விவசாயம் செய்யப்படுகிறது.2 முதல் 3 அடி வரையில் வளர்க்கக்கூடிய செடியின் இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகள் கரும்பு சர்க்கரையை விட 30 மடங்கு இனிப்பு சுவையை கொண்டுள்ளது. ஆனால் உடலுக்கு கலோரிகளை கொடுப்பதில்லை. எனவே கரும்புச்சக்கரை  க்கு மாற்றவும், இனிப்பு சுவையை கொடுக்கும் சாக்கரின் போன்ற ரசாயண பொருட்களுக்கு மாற்றாகவும் அமைந்துள்ளது. எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாதது. சர்க்கரை வியாதிகாரர்களுக்கு ஒரு வர பிரசாதம் .இந்தியாவில் கரும்பு சக்கரை அளவுக்கு பிரபலம் அடையவில்லை என்றாலும் ஜப்பான் சீனா உட்பட உலக நாடுகள் பெரும்பான்மையாக பயன்படுத்துகின்றன.ஸ்டிவியா விவசாய முறை (Stevia Cultivation)

இது ஒரு எளிய கணக்கீட்டு செயல்முறை. ஒவ்வொரு வருடமும் கோதுமை அல்லது நெல் போன்ற பயிர்களை நடவு செய்வது போல் நடவு செய்தால் போதுமானது. ஸ்டீவியா ஒரு தொடர் விளைவு செடி  (Perenial Crop) யாக உள்ளதால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என ஐந்து வருடங்களுக்கு அறுவடை செய்யலாம். அதாவது ஒவ்வொரு செடியும் 15 அறுவடை கொடுக்கிறது. பொதுவாக நெல் சாகுபடியில் நிகர வருமானம் ஏக்கருக்கு ரூ 30,000 என்றால் ஸ்டீவியாவால் ஏக்கருக்கு ரூ 1,20,000 /- சம்பாதிக்க முடியும். சீனி துளசி (Stevia) இயல்பாக ஒரு கரிம தாவரமாகும். மற்றும் இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் பெருமளவு செலவினை தவிர்க்க முடிகிறது சீனித்துளசி சுற்றுச்சூழலுக்கு உகந்தது. மேலும் ஒரு ஏக்கரில் 30,000 செடிகளை நடமுடியும்.

திரு.ராஜ்பால் சிங் காந்தி. தனது "கிரீன்வேலி ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் செயலாக்க ஆலை மூலமாக (Processing Plant) நாளொன்றுக்கு 5 டன் ஸ்டீவியா உலர் இலைத்தூள், இனிப்பு மாத்திரைகள் (Tablet Sweetner), சீனி கம் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து உள்நாட்டுப் பயன்பாட்டுக்கும் பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார். மேலும் 500 விவசாயிகளுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் சீனித்துளசி (Stevia) அடிப்படையிலான தயாரிப்புகளை வணிக நீரோட்டத்தில் கொண்டு வரவும் திரு. ராஜ்பால் சிங் காந்தி அவர்களின் முயற்சிகள் மற்றும் செயலாக்கம் 2018 -ல் இந்திய உணவு மற்றும் விவசாய கவுன்சில் (Indian Food and Agriculture Council) மாநில அரசின் "பார்ம் பத்ரா - 2014, 2015 (Parman Patra) மற்றும் டாக்டர் எம். எஸ் சுவாமிநாதன் தேசிய வேளாண்மைக் தலைமை விருது (National Farming Leadership) ஆகியவற்றை பெற்றுத் தந்துள்ளது.

வளமான மற்றும் ரசாயனம் இல்லாத புதிய தலைமுறை விவசாயிகள் விவசாயம் செய்தால் விவசாயத்தில் ஈர்கக்கூடிய லாபத்தை ஈட்ட முடியும் பயிரிடக்கூடிய நிலத்தில் முதலீடு செய்வது லாபகரமானது என்பதற்கு திரு.ராஜ்பால் சிங் காந்தி ஒரு உதாரணமாக உள்ளார்.  

CONTACT GREEN VALLEY STEVIA IN INDIA
 
For information on stevia in india pleae visit on the below address or call us on the given numbers

Near Hotel City Inn ,
Garshankar Road , Banga ,
District Nawanshahr , Punjab

Mobile :080-9900-9901

Email : info@greenvalleystevia.com.

Thank you for your interest in Green Valley Stevia in India.

Please drop us a line at info@greenvalleystevia.com.

Our Website: www.greenvalleystevia.com

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

Stories