December 14, 2020

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் புகைக்கரி ஓடுகள் (Environment Safe Soot Carbon Tiles)

உலகெங்கும் காற்று மாசு ஏற்படுவதில் தொழிற்சாலை புகை, வாகன புகை, மற்ற பொருட்கள் எரிக்கப்படுவதால் வெளியிடப்படு புகை ஆகியவை பெரும் பங்கு வகிக்கிறது. இதில் கட்டுமானங்கள் தொடர்பாக  (Construction Industry) உள்ள தொழிற்சாலை புகை மட்டும் 25 லிருந்து 40 சதவீதம் ஏற்படுத்தப்படுகிறது என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

Photo Source: Carbon Craft Design

திரு.தேஜாஸ் சிட்னல் (Mr.Tejas Sidnal), மும்பையைச் சேர்ந்த 32 வயது கட்டிட வடிவமைப்பு (Architecture) பொறியாளர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புகையில் உள்ள கரியைக் கொண்டு (Soot Carbon) கரி ஓடுகள் தயாரித்து அதனை பயனுள்ள வகையில் கட்டிட கட்டுமானத்தில் பயன்படுத்தும் விதமான ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளார். அதனை கார்பன் கிராஃப்ட் டிசைன் (Carbon Craft Design) என்ற நிறுவனத்தின் பெயரில் சந்தைப்படுத்தி வருகிறார். ஜனவரி 2019 முதல் ஏர் இங்க் (Air - Ink) என்ற நிறுவனத்துடன் இணைந்து இதற்கான வழிமுறையை ஏற்படுத்தி உள்ளார். (Air-Ink) என்ற நிறுவனம் ஏற்கெனவே கரிப்புகையின் மூலமாக இங்க் (Ink) தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Photo Source: Carbon Craft Design

முதன் முதலில் திரு. தேஜஸ் அவர்கள் புகைக் கரித்துகள்களை கொண்டு செங்கற்களைதான் (Brick) வெற்றிகரமாக உற்பத்தி செய்தார். ஆனால் கரி செங்கற்களை (Carbon Brick) செய்ய ஆகும் நேரம், உழைப்பு மற்றும் விலை அதிகமாக இருந்தால் அதற்கு மாற்றாக புகை கரியை கொண்டு புகைக்கரி ஓடுகள் தயாரித்து சந்தைப்படுத்தி உள்ளதாக திரு.தேஜஸ் கூறுகிறார்.


Photo Source: Carbon Craft Design

திரு.தேஜஸ் அவர்கள் லண்டனில் உள்ள கட்டிட வடிவமைப்பு பள்ளியில் (School of Architecture, London) பட்ட மேற்படிப்பில் இயற்கை உயிரி அங்கக மாற்று (Natural Bio Mimicry) துறையில் ஈடுபாடு கொண்டு பயின்றதன் காரணமாக மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் வகையில் மாசு ஏற்ப்டுத்தும் பொருட்களை மாற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டு ஓடுகள் (Carbon Tile) வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளார் என்பது பாராட்டத்தக்கது.

புகைக்கரி ஓடு தயாரிப்பு முறை:

1. புகையிலுள்ள கரித்துகள்கள் பிரிக்கப்படுகிறது.

2. அதிலுள்ள உலோகங்கள் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள் நீக்கப்படுகிறது.

3. சுத்தமான கரித்துகள்களுடன், பளிங்கு கற்கள் (Broken Marble Chips) பளிங்கு கல் தூள் (Marble Powder), சிறிதளவு சிமெண்ட் சேர்க்கப்படுகிறது.

4. இந்த கலவையுடன் ஒட்டுச் சேர்மானம் (Binder) சேர்க்கப்பட்டு பின்னர்  அழுத்த முறையில் (Compressor Compressed) ஓடுகள் தயாரிக்கப்படுகிறது.

5.  8" * 8", 10" * 10" மற்றும் 12" * 12" அளவுகளில் தற்போது உற்பத்தி     செய்யப்படுகிறது.

6. தேவையான வடிவமைப்பில் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் கரி ஓடுகள்   உள்ளது.
அந்த வகையில் தற்போது 15 வடிவத்தில் (15 Design) கிடைக்கும்.

இந்தியாவில் பெரிய நிறுவனங்களான லார்ஸன் & ட்யூப்ரோ (Larsen & Tubro) மற்றும் JSW மற்றும் வேறு சில நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையில் வெளியிடப்படும் மாசு ஏற்படுத்தும் புகை கரியினை பயன்படுத்தி புகைக் கரி ஓடுகளை உற்பத்தி செய்து அந்தந்த நிறுவனங்களுக்கே கொடுக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கார்பன் கிராப்ட் நிறுவன ஸ்தாபகர் திரு.தேஜஸ் தெரிவிக்கிறார்.

சுற்றுச்சூழல் மாசு ஏற்ப் படுத்தும் புகைக்கரியைக் உண்டு மனித குலத்துக்கு பயன்படும் வகையில் புகைக் கரி ஓடுகள் தயாரிக்கப்படுவது மிகவும் பாராட்டத்தக்கது. இத்தகைய அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து வெற்றி வேண்டும்!

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories