October 08, 2020

மண்ணில்லா விவசாய முறை (Aeroponics)

பொதுவாக விவசாய நிலத்திலோ, தொட்டிகளில் மண்ணிட்டோ செடிகளை வளர்ப்பதை பார்த்திருக்கிறோம். சில இடங்களில் தண்ணீரில் செடிகள் வளர்க்கிறார்கள் (Hydroponics) ஆனால் மண்ணில்லாமல் காற்றிலேயே செடி வளர்ப்பது சாத்தியம் என்று ஒரு வித்தியாசமான தொழில்நுட்பத்தினை (Aeroponics Technology) கோவையைச் சேர்ந்த 47 வயது, பொறியாளர் திரு. பிரபுசங்கர் அறிமுகப்படுத்தி விவசாயம் செய்கிறார்.

திரு.பிரபுசங்கர் மகாராஷ்டிராவின் அகமது நகரில் உள்ள மஹாத்மா பூலே கிரிஷி வித்யாபீத் (Mahatma Phule Krishi Vidyapeeth) கல்லூரியில் விவசாய பொறியியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். 1995 - ல் பொறியியல் பட்டம் பெற்றபின் துறை சார்ந்த நீர்பாசன நிறுவனமொன்றில் பணியாற்றி அனுபவங்களை பெற்றுள்ளார்.



2019 -ல் "நீயோ போனிக்ஸ்" (Neophonics) என்ற நிறுவனத்தைத் துவக்கி சில
விவசாயிகளுக்கு “ஏரோபோனிக்ஸ்” என்ற மண்ணில்லா விவசாய தொழில் நுட்பத்தினை அமைத்துக் கொடுத்துக் கொண்டுள்ளார். இத்தகைய நிலமில்லா விவசாயத்தின் மூலமாக தக்காளி, உருளைக் கிழங்கு, கத்தரிக்காய், பீட்ரூட், கேரட், வெங்காயம் உட்பட பதினைந்து வகை காய்கறிகள் மற்றும் பச்சை செடிகள் மற்றும் கீரை வகைகள் வளர்த்து வருகிறார்.


மண்ணில்லா விவசாய முறையின் பலன்கள்:

- நிலம் தேவையில்லை

- மழை, வறட்சி போன்ற தட்ப வெப்ப மாறுதல்களைப் பற்றி கவலை கொள்ள தேவையில்லை

- பூச்சி, புழக்கள் தாக்குதல் இல்லை

- வருடம் முழுவதும் விவசாயம் செய்ய சீசன் இயலும் கிடையாது .
மண்ணில்லா தொழில்நுட்பம் ஒரு புதிய முறை என்பதால் தற்சமயம் ஒரு சில இடங்களிலேயே நடைபெற்று வருகிறது என்றாலும் எதிர்வரும் காலங்களில் பெருமளவு பின்பற்றப்படும் என்பதில் ஐயமில்லை.

Contact: 9344459599

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 
Stories