October 09, 2020

நகர கழிவு மேலாண்மையில் இளம் பெண்ணின் சாதனை

செல்வி.நிவேதா. 25 வயதே ஆன, பெங்களூரு ஆர்.வி. பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்தபோது ரசாயன பொறியியல் மாணவியின் ஒரு மகத்தான கண்டுபிடிப்பும் வடிவமைப்பும் செய்துள்ள ஒரு திடக்கழிவுகளை  பிரிக்கும் இயந்திரம் நகர சுத்திகரிப்பில் பெரும் பங்கினை ஆற்றுகிறது.

"டிராஷ்போட்" (Trashbot) என்று பெயரிட்ப்பட்டுள்ள திடக்கழிவு இயந்திரம் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல விருதுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.


தான் கல்வி கற்கும் பொறியியல் கல்லூரியின் அருகிலேயே கொட்டப்பட்டு சேர்மானமாகும் குப்பைகளினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள்
"டிராஷ் போட்" இயந்திரம் கண்டு பிடிப்பதற்கான ஒரு தூண்டுகோலாக இருந்தது என்று செல்வி. நிவேதா கூறுகிறார். கல்லூரிப் படிப்பு மற்றும் மற்ற பொருளாதார நெருக்கடிகளையும் கடந்து "டிராஷ் போட்" இயந்திர கண்டுபிடிப்பு ஒரு சிறந்த தொழில்நுட்பமாக (Technology) கருதப்படுகிறது. இதுநாள் வரையில் வேறு எந்த விதமான ஆக்கமான தொழில் நுட்பமும் உலக அளவில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது." டிராஷ்போட்" இயந்திரம் ஒரு பகுதி தானியங்கி (Semi Automatic) இயந்திரமாக செயல்பட்டு சில நிமிடங்களில் திடக் கழிவுகளை பிரித்து எடுக்கிறது. இதனால் பிரிக்கப்படும் அங்கக கழிவுகள் (Organic Waste) விவசாயத்திற்கு பயன்படும் கம்போஸ்ட் எருவாகவும், எரிவாயுவாகவும் மாற்றப் படுகிறது. அனங்ககக் கழிவுகள் (In organic waste) மறுசுழற்சி முறையில் செயற்கை பலகைகளாக (Slabs) மாற்றப்படுகிறது.

"டிராஷ்போட்" இயந்திரம் கழிவுகளை பிரிக்கும் முறை:

- முதல்கட்டமாக இயந்திரத்தில் மூட்டைகளாக போடப் படும் திடக் கழிவுகள் மூட்டைகளை கிழித்து வெளிக் கொண்டு வரப்பட்டு இயந்திரத்தில் உள்ள சக்தி வாய்ந்த காந்த அமைப்புகள் பெரும்பான்மையான உலோகங்கள் மற்றும் பேட்டரிகளை பிரிக்கிறது.

- இரண்டாம் கட்டமாக உணவுப் பொருட்கள் மற்றும் அழியக்கூடிய (Bio degradable) அங்கக பொருட்கள் சிறிய துகள்களாக (Shredded) ஆக்கப் படுகின்றது.

- மூன்றாம் கட்டமாக அழிக்க முடியாத (Non bio degradable) பொருட்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக்குகள் தனியாக சேர்மானம் செய்யப்படுகின்றன.

பிரித் தெடுக்கப்பட்டுள்ள பொருட்களில் அழியக்கூடிய (Bio - degradable) கழிவுகள் பயோ கேஸ் தயாரிக்கவும் இயற்கை அங்கக எரு (Organic Compost and manure) தயாரிக்கவும் அனுப்பப்படுகின்றன.

அழிக்கமுடியாத பொருட்கள்(Non bio degradable) மறுசுழற்சி செய்து நாற்காலிகள், மேஜைகள், கூறை ஓடுகள், தரை ஓடுகள் மற்றும் இன்ன பிற பொருட்கள் தயாரிப்பு செய்யப்படுகின்றது.

தற்சமயம் "டிராஷ் போட்" இயந்திரம் 500 கிலோ, இரண்டுடன், ஐந்து டன் மற்றும் 10 டன் கழிவுகளை பிரிக்கும் அளவில் விற்பனை செய்யப் படுகிறது. இயந்திரத்தின் விலை ரூ 9 லட்சத்திருந்து தேவைக்கேற்ப விலை மாறுபடுகிறது.

"டிராஷ்போட்" விற்பனை செய்ய "டிராஷ் கான்" நிறுவனம் மூன்று திட்டத்தில் விற்பனை செய்கிறது.

1. கழிவுகளை பிரிப்பது மட்டும் செய்யும் நிறுவனங்களுக்காக மட்டும்

2. கழிவுகளை பிரிப்பது மற்றும் மறுசுழற்சிக்கு திரும்ப பெறும் நிறுவனம் (Buy Back)

3. கழிவுகளை பிரிப்பது முதல் மறுசுழற்சி செய்யும் முறையில் அனைத்தையும் செயல்படுத்தும் நிறுவனம்.
(End to End Zero Waste)

தற்சமயம் "பிடிலைட்" (Pidilite) கம்பெனியுடன் இணைந்து மறுசுழற்சி முறையில் மாற்று பிளைவுட் தயாரிப்பில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது குஜராத்தின் அதானி துறைமுகத்திலும், சென்னை விமான நிலையத்திலும் திடக்கழிவு மேலாண்மை நடத்திவருகிறது மேலும் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க நாடுகள் இந்த அமைப்பை செயல்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் என்னை “குப்பைக்காரி” (Waste - Picker) என்று அழைத்த சிலர் தற்போது எனது கண்டுபிடிப்பிற்கு உலக அளவில் அங்கீகாரம் (Recognition) அளித்து வாழ்த்துக்கள் (Blessings) தெரிவிக்கின்றனர். பெரும்பாலும் குப்பை பிரிக்கும் தொழிலினை பெண்கேளே செய்து வரும் நிலையில் அவர்களுக்கான விடுதலையாக எனது கண்டுபிடிப்பு பயன்படுவதில் பெரு மகிழ்ச்சி அடைவதாக செல்வி. நிவேதா கூறுகிறார்.

நிச்சயமாக செல்வி. நிவேதா ஒரு பெண்சாதனையாளரே !

பொது நலன் கருதி செயலாற்றப்படும் அனைத்து செயலும் தர்மகாரியமாக கருதப்படும்

- பகவத்கீதை

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories