September 29, 2020

மாடியில் 50 வகை மாமரங்கள்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 63 வயது திரு. ஜோசப் பிரான்சிஸ் (Mr. Joseph Francis) தொழில்ரீதியாக அறைகுளிர்விப்பான் தொழில்நுட்ப (AC Mechanic) வல்லுனர்.

தனது 5 சென்ட் நிலத்தில் 1800 சதுர அடி வீட்டினனக்கட்டி குடி புகுந்தபின் மாடித் தோட்டத்தை மொட்டை மாடியிலும் மீதமுள்ள நிலத்தில் சிறிய அளவில் மீன் வளர்ப்பிலும் ஈடுபட முடிவு செய்தார். முன்னோர்கள் விவசாய குடும்பமாக இருந்ததினால் இயல்பாகவே விவசாயம் செய்ய விரும்பி ஆரம்பத்தில் மாடியில் ரோஜா வளர்ப்பு, காளான் வளர்ப்பு என்று ஈடுபட்டவர் மா மரங்களை வளர்க்கத் துவங்கியுள்ளார். வழக்கமாக பெரும்பாலானோர் பயன்படுத்தும் தொட்டிகள் மற்றும் குரோ பேக்ஸ் (Grow Bags) பயன்படுத்தாமல் பெரிய அளவு PVC டிரம்களை பயன்படுத்தியுள்ளார் என்பது ஒரு புதுமை, டிரம்களை எளிதாக நகர்த்திக் கொள்ளும் வகையில் உலோக ஸ்டாண்டுகள் மீது PVC டிரம்களை வைத்துள்ளார்.



சிறிது சிறிதாக இந்தியா முழுவதும் உள்ள மரங்களின் எண்ணிக்கையை 50க்கு மேல் உயர்த்தி பராமரித்து வருகிறார். அதற்கான ஒட்டு மா மரங்களை (Grafting) தானே உருவாக்கியுள்ளார் தற்சமயம் அல்போன்ஸோ (Alphonso), சந்திரகாரன் (Chandrakaran), நீலம் (Neelam), மல்கோவா (Malgova) உட்பட அவரே உருவாக்கிய புதிதான ஒட்டு மாமரம் தன் மனைவியின் பெயருடைய “பெட்ரீசியா” (Patricia) வும் அடங்கும்.



மாமரங்களைத் தவிர பலாமரம், ரம்பூடான் (Rambutan) பப்பாளி, சப்போட்டா, பாகற்காய், வெண்டைக்காய் மற்றும் தக்காளி செடிகளும் மாடியில் வளர்த்து வருகிறார். அவருடைய மாடி தோட்டத்தினை லாப நோக்கத்தில் இல்லாமல் அறுவடையாகும் காய்கறிகள் மற்றும் பழங்களை தனது சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கிறார் என்பது பாராட்டத்தக்கது. விவசாயத்தின் மகிழ்ச்சி என்பது மற்றவர்களுடன் பலனை பகிரும்போது தான் ஏற்படுகிறது என்று திரு. ஜோசப் பிரான்சிஸ் அவர்கள் கூறுகிறார். மேலும் யாரும், எங்கும் விவசாய செய்ய முடியும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories