July 20, 2020

வாழைத்தண்டு நார் புடவைகள்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் அருகாமையில் உள்ள அனகாபுத்தூர் என்ற புறநகரில் நெசவாளர்கள் சுமார் 50 ஆண்டுகளாக நயமான புடவைகள் செய்து விற்று வருகின்றனர். கிட்டத்தட்ட மூன்று தலைமுறையாக நெய்தல் தொழிலை பிரதானமாக செய்து வருகின்றனர்.

"அனகாபுத்தூர் சணல் நெசவாளர் கூட்டமைப்பு" தலைவர் C.சேகர் கூறுகையில் சுமார் 100 விவசாய குடும்பங்களை கொண்ட கூட்டமைப்பு 1970 களிலிருந்து "சென்னை துணிகள்" என்ற பெயரில் அதிக அளவில் நைஜீரியா என்ற நாட்டுக்கு அனுப்பி வந்தனர். பின்னாளில் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் அங்கு இறக்குமதி நிறுத்தப்பட்டு அனகாபுத்தூர் நெசவாளர்கள் பெருமளவில் இழப்புகளை சந்திக்க நேர்ந்தது.ஆரம்பத்தில் 5000க்கும் மேலாக கைத்தறிகள் இருந்த கிராமத்தில் தற்போது ஒரு நெசவாளர் குடும்பத்திற்கு ஒரு கைத்தறி நெசவு இருந்தாலே பெரிது என்ற அளவுக்கு குறைந்து விட்டது என்று பழைய நினைவுகளை கூறுகிறார். மேலும் கூறுகையில் மிகுந்த திறமைமிக்க நெசவாளர்கள் பாரம்பரிய நெசவு தொழிலை விட்டு விலக மனமில்லாமல் எவ்வாறு மீண்டு எழ முடியும் என்ற சிந்தனையின் வெளிப்பாடே இந்தவாழைநார் புடவைகள் தயாரிப்பு என்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழைநார் புடவை தயாரிக்கும் எண்ணம் வருவதற்கு காரணமாக இருந்தது,திரேதா யுகத்தில் நடந்ததாக சொல்லப்படும் ராமாயண நிகழ்வுதான். ராவணனால் இலங்கைக்கு கடத்த பட்ட சீதை ராவணன் கொடுத்த ஆடைகளை அணிய விரும்பாமல் அனுமனால் கொண்டுவரப்பட்ட வாழை நாரை கொண்ட வாழைநார் ஆடையை தானே நெய்து அணிந்ததாக விளக்கப்படுகிறது.அடிப்படை நெசவாளியான என்னை இது தொடர்பான பல கேள்விகளையும் எழுப்பி சிந்திக்க தூண்டியது.எந்தவிதமான தொழில்நுட்பங்கள் இல்லாத அந்த காலத்தில் வாழைநார் ஆடைகள் தயாரிக்க முடிந்தால் இப்போதைய தொழில் நுட்பம் முன்னேறிய இந்த காலத்தில் ஏன் செய்ய முடியாது?என்று முயற்சி செய்ததன் விளைவுதான் வாழை நார் ஆடைகள் என்கிறார் திரு.C.சேகர்.
தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் பிரதான விளை பொருள் வாழை மிக எளிதாக அதிக அளவில் கிடைக்கும் வாழை தண்டுகளை எடுத்து

சுத்தப்படுத்தி அதனை ஆடைகள் செய்வதற்கான நூல் இழைகளாக பயன்படுத்தப்படுகிறது.

வாழைநார் இலைகளுக்கு சாயப்பட்டறை மூலமாக பலவகையான வண்ணங்கள் கொடுக்கப்படுகின்றன வண்ணங்களும் ரசாயனம் இல்லாத இயற்கை வண்ணங்களே.இயற்கை சாயம் மஞ்சள் மற்றும் அவுரி செடியிலிருந்து பெறப்படுகிறது (நீலநிறம்). மேலும் பல இயற்கை கிருமிநாசினிகளும், மருத்துவ குணமுள்ள, துளசி புதினா சாறுகளும் சேர்க்கப்பட்டு தோல்களின் ஒவ்வாமையை (Allergy) தடுத்தப்படுகிறது.
சாதாரணமாக இரண்டு நெசவாளர்கள் இணைந்து இரண்டு நாளில் ஒரு புடவையை நெய்கிறார்கள்.

கிட்டத்தட்ட 25 வகையான வாழைத்தண்டு நார் இழைகள் பயன்படுத்தப்படுகின்றன.இதற்கான சான்றிதழை 2011-ல் லிம்கா சாதனை புத்தகத்தின் மூலமாக அளித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விற்கப்படும் புடவைகள் விலை ரூபாய் 1800 முதல் 7000 வரையிலும் உள்ளது கடின உழைப்புடன் கூடிய அனகாபுத்தூர் நெசவாளர்களின் வாழைநார் சேலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திரு. சேகர் அவர்கள் தற்போது சென்னையில் ஒரு சில்லறை சேலை அங்காடியை திறந்துள்ளார்.
"Make in India" இந்திய தயாரிப்புகள் என்ற மந்திரத்தை இந்தியாவோடு மட்டுமில்லாமல் உலக அளவில் செல்ல மத்திய மாநில அரசுகள்உதவி நல்கி நெசவாளர்களின் தகுதிக்கு நல்லதொரு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பது அனைவரது வேண்டுகோள்.
திரு.சேகர். PH.No: 91-9841541883.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories