கோவை மாநகரைச் சேர்ந்த திரு.R. நித்தியானந்தம் 14 நண்பர்களை இணைத்து "காசி பசுமை யாத்திரை" என்ற ஒரு புதுமை அமைப்பினை ஏற்படுத்தி செயலாற்றி வருகிறார்.
ஹிந்துக்கள் காசியில் மரணித்து கங்கை ஆற்றங்கரையில் எரிக்கப்பட்டால் அவர்களின் ஆன்மா இறைவனின் காலடியை அடையும் என்பதும் மறுபிறப்பு கிடையாது என்பதும் ஐதீகம் (நம்பிக்கை). இது பலநூறு ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.
ஒரு புள்ளி விவரத்தின்படி தினந்தோறும் சுமார் 400 மனித உடல்கள் கங்கை நதியின் கரையில் எரிக்கப்படுகிறது. பிணங்கள் எரிபூட்டப்படும் கங்கைக்கரை படித்துறை (Ghat) காட்கள் சுமார் 59 உள்ளன.
படித்துறை பட்டியல்
படித்துறைகள் ("காட்" கள் - Ghat) வடக்கிலிருந்து தெற்காக
(வரிசையில்). கீழ் உள்ள பெயர்கள் பக்கத்தில் "காட்"
சேர்த்து வாசிக்கவும்
1. ராஜ்
2. ராணி
3. பிரகலாத்
4. நயா
5. இந்திராகாந்தி
6. சக்கா
7. நந்தேஸ்வர்
8. கோலா
9. பத்ரி நாராயண்
10. கை
11. ஸ்ரீ அனுமான் கர்ஹி
12. லால்
13. பிரம்மா
14. துர்க்கா
15. பஞ்சகங்கா
16. ராம்
17. சங்கட்
18. பவுன்ஸ்லா
19. மணிகர்ணிகா
20. கங்கா மஹால்
21. சிந்தியா
22. லலிதா
23. மீர்
24. த்ரிபுரபைரவி
25. மன்மந்திர்
26. ராஜேந்திர பிரசாத்
27. தசா அஸ்வமேத்
28. சீத்லா
29. அகல்யாபாய்
30. ராணாமஹால்
31. கவுன் சாதி
32. பாண்டே
33. ராஜா
34. பேஷ்வா - ராஜா
35. நாரத்
36. க்ஷேமேஸ்வர்
37. சௌகி
38. கேதார்
39. லாலி
40. ஹாரிச்சந்திரா
41. ஹனுமான்
42. ஷீவாலா
43. மஹாநிர்வான்
44. நிரஞ்சனி
45. செத் சிங்
46. பிரபு
47. பஞ்ச் கோட்
48. ஜெயின்
49. பச்ச ஹராஜ்
50. ஆனந்தமயி
51. ஜானகி
52. துளசி
53. அஸ்ஸி
54. நாக்வா
55. பக்வான் ராம்
56. சமானே
57. மதர்வா
58. கபீர்மட்
59. ராம் நகர் (இது கங்கை அடுத்த கரையில் ராம்நகர் கோட்டையில் உள்ளது)
இதில் ஹரிச்சந்திராகாட் மற்றும் மணிகர்ணிகாகாட் இரண்டிலும் பெருமளவு பிணங்கள் எரிக்கப்படுகின்றன. அதற்காக ஒரு சிதைக்கு 300 கிலோ மரங்கள் எரிக்கப்படுகின்றன. வருடத்திற்கு சுமார் 5 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு எரியூட்ட படுகின்றன என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
மரங்கள் வெட்டப் படுவதை ஒரளவேனும் குறைக்கும் பொருட்டு நித்தியானந்தன் மற்றும் 14 அங்கத்தினர்கள் "காசி பசுமை யாத்ரா" வின் மூலம் மரத்திற்கு மாற்றாக ஏறத்தாழ 140 டன் தேங்காய் ஓடுகளை அனுப்பி ஒரு புதுமைப் புண்ணிய காரியம் செய்துள்ளனர். இதனால் கிட்டத்தட்ட 840 ton மரங்கள் எரிப்பதை தவிர்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு தேங்காய் ஓடுகளை வீடுகள், கல்யாண மண்டபங்கள், ஓட்டல்கள், பள்ளிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து சேமித்துள்ளனர்.
இந்த ஆண்டின் இருதிக்குள் 2400 டன் தேங்காய் ஓடுகளை
"காசி பசுமை யாத்திரை" மூலமாக முடிவெடுத்து அதற்கான தொடர் பணிகளை செய்துவருவதாக திரு. நித்தியானந்தம் கூறுகிறார். இதற்காக ரூ 35 லட்சம் சொந்த பணத்தை செலவழித்திருக்கிறார் என்பது அவரது பெருந்தன்மையையும், பரோபகாரத்தையும் பாராட்டியே ஆகவேண்டும்.
திரு. நித்தியானந்தம் மற்றும் "காசி பசுமை யாத்திரை" Team-ன் புதுமைப் புண்ணியப் பணி தொடர்ந்து வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
மனிதன் எரிக்க எரிக்க திருநீராகவும் படிக்கப் படிக்க வரலாறாகவும் இருக்க வேண்டும்!
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.