September 08, 2020

ஹைட்ரோபோனிக்ஸ் மாடித்தோட்டம் 20 வகை காய்கறிகள் மற்றும் பழங்கள் வளர்க்கும் நகர விவசாயி

தூங்கா நகரம் மதுரையை சேர்ந்த 70 வயது இளைஞர்  திரு.ராஜேஸ்வரன் ஒரு தன்னார்வ நகர விவசாயி. இவர் எலக்ட்ரிக்கல் பொருட்கள் மற்றும் சூரியசக்தி உபகரணங்கள் வியாபாரம் செய்யும் நிறுவனம் நடத்தி வருபவர் விவசாயத்தின் மீது அதீத விருப்பம் கொண்டு தானாகவே முன்வந்து மண்ணில்லாமல் நீரில் செடிகளை வளர்த்தல் செய்து சாதனை புரிந்து வருகிறார். செடிகள் வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தால் எதையும் வளர்க்க முடியும் என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டு அனைத்து வகையான கீரைகள் காய்கறிகள் மற்றும் பழங்களை வளர்த்து வருகிறார். 

2016 -ஆம் ஆண்டிலிருந்து மண்ணில்லா நீர் விவசாயம் செய்யும் திரு. ராஜேஸ்வரன், நம் வீட்டுத் தேவைக்கு நம்முடைய தோட்டத்திலிருந்து காய்கறி பழங்கள் பறித்து உணவு செய்து உண்ணும் போது அதன் திருப்தி அலாதியானது என்று கூறுகிறார். 

எதிர்கால  விவசாய முறையாக கருதப்படும் மண்ணில்லா நீர் விவசாயம் போதுமான நிலம் இல்லாத சூழ்நிலையில் ஒரு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது. நான்கு ஆண்டுக்கு முன்னர் மண்ணில்லா நீர் விவசாயத்தினை முன்னெடுத்து வீட்டு மாடியில் சுமார் 800 சதுரஅடி அளவில் ஒரு பசுமைக்குடில் அமைத்து தனது மனைவி கிரேஸ் ராஜேஷ் உதவியுடன் கீரைகள், காய்கறிகள் வளர்க்கத் தொடங்கினார். தற்போது 20 வகை க்கும் மேலான பழவகைகள் மற்றும் காய்கறிகளை மண்ணில்லாது குழாய்களில் சலசலத்து ஓடும்  சத்து நீரின் மூலமாகவே வளர்த்து வருகிறார்.  எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சூரியசக்தி உபகரணங்கள் விற்பனை செய்து வந்த திரு ராஜேஷ்வரன் தனது கனவு திட்டமான நகரம் முழுவதும் தொடர் உணவக தொழிலுக்கு விரிவாக்கம் செய்தார். இருப்பினும் விவசாயம் அவரது மனதுக்கு நெறுக்கமான பகுதியாகவே இருந்து வந்ததாக கூறுகிறார். எந்த தொழில் எடுத்தாலும் அதில் நூறு சதவிகித பங்களிப்பு அளிப்பதில் நாட்டமுள்ள திரு. ராஜேஸ்வரன் விவசாயம் பற்றிய தகவல்களை சேகரித்து தனது விவசாய அறிவை வளர்த்துக் கொண்டதாக கூறுகிறார். 

இருந்தாலும் மண்ணில்லா விவசாயம் என்பது ( ஹைட்ரோபோனிக்ஸ்) தற்செயலாக அமைந்ததே என்று கூறுகிறார்.

தனது வீட்டிற்கு ஆழ்துளை கிணறு அமைக்கும்போது தண்ணீரின் தரம் மோசமாகவும் மற்றும் குறைவான அளவே இருந்ததாலும் மண்ணில்லா நீர் விவசாயம் செய்ய நான் தூங்கிட்டேன் என்று கூறும் ராஜேஸ்வரன் 

Hydroponics - மண்ணில்லா நீர் விவசாயம் 

மேலும் இதேபோல் கால்நடைகளுக்கு ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவனங்களை வளர்த்து எப்படி கொடுப்பது என்பதை பற்றி நமது (Country farms) சேனலில் பதிவிட்டுள்ளேன் அதன் லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.

https://youtu.be/evj9eNcLQBk

Aquaponics - மண்ணில்லா நீரோட்ட விவசாயம்

மேலும் இதேபோல் அக்வாபோனிக்ஸ் (Aquaponics) முறை பற்றி நமது (Country farms) சேனலில் பதிவிட்டுள்ளேன் அதன் லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.

https://youtu.be/95lAh_xr5jU

https://youtu.be/evj9eNcLQBk

Aeroponics - காற்று மற்றும் நீர்துகள் விவசாயம்

ஆகியவற்றின் செயல்முறைகளை அறிந்தபின் மண்ணில்லா நீர் விவசாயத்தினை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் சாதாரணமாக இருந்தாலும் இந்தியாவில் இந்த முறையை ஒரு நேர்மறை பார்வையாக கொண்டுவர முயற்சிக்கிறேன் என்று உற்சாகமாக கூறும் திரு. ராஜேஸ்வரன் அவருடைய இடத்திற்கு 

“ சதர்ன் ஸ்பிரிங்ஸ் ஹைட்ரோபோனிக்ஸ்” (Southern Springs Hydroponics)  என்று பெயரிட்டுள்ளார். 


மண்ணில்லா நீர் விவசாயத்தில் சுலபமான பேலோ பக்கெட் சிஸ்டம் (Balo Bucket System), டச் பக்கெட் சிஸ்டம் (Dutch Bucket System) ,சிங்கிள் பக்கெட் சிஸ்டம்(Single Bucket system) இருந்தாலும் சிறிது சிக்கலான முறையான நியூட்ரியன்ட் ஃபிலிம் டெக்னிக் ( Nutrient Film Technique) முறையை தேர்வு செய்துள்ளனர். இந்த முறையில் 16 வகை  சத்துக்களுக்கு மேலான பல அளவுகளில் செடிகளின் வளர்ச்சிக்கு தண்ணீரின் மூலமாக அளிக்க முடியும் என்று கூறும் திரு.ராஜேஸ்வரன் ஆரம்பத்தில் கீரைகள், மூலிகைகள் மற்றும் தக்காளியை மட்டும் வளர்க்க துவங்கினர்.

முதல் அறுவடையை பற்றி நிச்சயம் இல்லாத சூழ்நிலையில் திரு.ராஜேஸ்வரன் மற்றும் அவரது மனைவியும் சில மாதங்கள் செடிகளை பராமரிப்புக்காகவே தங்களை முழுமையாக அர்ப்பணித்துச் செயல்பட்டனர். அவர்களுடைய உழைப்பு வீண்போகவில்லை. நான்கு மாதத்தில் கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் பிரகாசமான பச்சையும்  சிவப்புமாக பலன் கொடுக்கத் துவங்கினர்.

முதல் வெற்றியால் உந்தப்பட்ட திரு.ராஜேஸ்வரன் முதலில் உள்நாட்டு வகைகளையும் சிறிது வெளிநாட்டு வகைகளான பசலைக்கீரை (spinach) புதினா (Mint) தோட்டக் கீரை (Asperagus) தண்டுக்கீரை (Celery), சிவப்பு பச்சையும்மான லேட்டூஸ் (Red and green lettuce), தண்டு செடி (Parsley),வாசனை செடி (Bok Choy), வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி,பீன்ஸ், தர்பூசணி, மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை பயிர் செய்கிறார்.

மேலும் இத்தாலியில் புகழ்பெற்ற "சான் மர்ஜானோ"
(San Marzano) என்ற தக்காளி வகையும் இங்கிலாந்தின் "பிக் பாய்" (Big Boy) என்ற தக்காளி வகைகளையும் பயிர் செய்கிறார்.

தற்சமயம் நெதர்லாந்தின் புகழ்பெற்ற லாபம் தரும் வெள்ளரிக்காய் அறுவடை செய்கிறோம் என்று கூறுகிறார்.

 

இந்த விவசாய முறையால் வழக்கமாக பயன்படும் நீரின் அளவில் 90% சதவீதம் மிச்சப்படுகிறது என்று கூறும் ராஜேஷ்வரன் மண்ணில்லா நீர் விவசாயத்தில் செடிகள் வேகமாக வளர்வதாகவும் பூச்சி,வண்டு, நோய் தாக்குதல் இல்லாமலும் களை எடுத்தல் என்ற பெரியதொரு வேலை

முழுவதுமாக தவிர்க்கப்படுகிறது என்றும் சரியான திட்டமிடுதல் இருந்தால் மிகக் குறைந்த இடத்தில் நூற்றுக்கணக்கான செடிகளை உருவாக்கி பயன்பெற முடியும் என்கிறார்.

இப்போது வெற்றிகரமாக இயங்கும் திரு.ராஜேஸ்வரன்னுடைய "சதர்ன் ஸ்பிரிங்ஸ் ஹைட்ரோபோனிக்ஸ்" 
(Southern Springs Hydroponics) திட்டம் ஆரம்பத்தில் பல சவால்களை சந்தித்திருக்கிறது.

முதலாவதாக வெப்பநிலை கட்டுப்பாடு என்பது நீர் விவசாய முறைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. அதுவும் சாதாரணமாக வெப்பம் அதிகமான மதுரையில் பசுமை குடிலில் உள்ளே வெப்பநிலை சமம் செய்ய "தேர்மல் இன்சுலேஷன் சிஸ்டம்" (Thermal Insulation System) பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாவதாக 24 மணி நேரமும் தண்ணீர் சுழற்சி அவசியம். இல்லை எனில் சில மணி நேரங்களிலேயே அனைத்து செடிகளும் அழியும் நிலை உருவாகும். அடிக்கடி மின்தடை ஏற்படும் நிலையிலும் தண்ணீர் பம்புகள் செயல்படுதல் நிச்சயம் படுத்துவது அவசியம். எனவே நாங்கள் இந்த விவசாய திட்டத்திற்கு முழுக்க முழுக்க சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்துகிறோம். சூரிய ஒளி இல்லாத நிலையில் தானியங்கி (Ups) மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கும் படியும் இதுவரை பாதுகாப்பு ஒலிப்பான்கள் மற்றும் ஸ்மார்ட்போன் வசதியையும் இணைத்து உள்ளோம் என்று கூறுகிறார்.

இந்தத் திட்டத்திற்கு 600 watt உற்பத்தி திறன் கொண்ட ஒரு சூரிய ஒளி இயந்திரம் (Solar plant) நிறுவப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 4 லட்சம் செலவில் வெப்பக் கட்டுப்பாடு ஈரப்பதம் சமன்பாடு, செடிகளுக்கான ஊட்டச்சத்து அளிக்க கரியமிலவாயு அளிக்க, வெளிச்சம் மற்றும் செடிகளின் வளர்ச்சிக்கு உண்டான அனைத்து சூழ்நிலைகளையும் அளிக்க பல்வேறு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

பொதுவாக பெரும்பாலானவர்கள் நினைப்பது போல் மண்ணில்லா நீர் விவசாயம் என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. தொடர்ந்து மின்சாரம், நல்ல தண்ணீர், சரியான அளவு சத்துக்கள், சரியாக தேர்வு செய்யப்பட்ட விதைகள், வெப்ப நிலை வெளிச்சம், ஈரப்பதம் அனைத்தும் அவசியம்.மேலும் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் அனைத்து உபகரணங்களும் சுத்தம் செய்யப்படவேண்டும் என்று கூறும் திரு.ராஜேஸ்வரன் இதுவரை 15 நகர விவசாயிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

மண்ணில்லா நீர் விவசாயம் செய்ய து வாங்குபவர்களுக்கு
ஸ்டாட்டர் கிட் (Starter Kit) Rs.3800 -/- க்கும் அடுத்த நிலை ஜூனியர் கிட் (Junior Kit)  Rs.10000 க்கும் தயாரித்து வழங்குகிறார்.

இவற்றில்

1. 20 லிட்டர் பிளாஸ்டிக் கூடை

2 ஒரு காற்றுப் பம்பு தண்ணீரில் ஆக்சிஜன் அளிக்க

3. TDS மீட்டர்

4. விதைகள்

5. சிறிய தொட்டிகள்

6. சிறிய தண்ணீர் சுழற்சி உபகரணம்

ஆகியவை அடங்கும்

இதுவரையில் நண்பர்கள், குடும்ப சொந்தங்கள் இடையே 60 கிட்ஸ் வழங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டம் துவங்கி நான்கு வருடங்கள் கடந்தும் கற்றுக் கொண்டிருக்கும் நான் மண்ணில்லா நீர் விவசாயம்தான் எதிர்கால விவசாயம் முறையாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறுகிறார்.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories