மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒஸ்மானாபாரத் (Osamanabath) மாவட்டத்திலுள்ள நிப்பானி (Nipani) கிராமத்தைச் சேர்ந்த திரு.ராஜசேகர் பாடில் (Rajasekar Patil) மூங்கில் விவசாயத்தை முன்னெடுத்து ஆண்டுக்கு சுமார் ரூ.1 கோடி வரையில் ஈட்டி வருகிறார். தனது 23 வயதில் விவசாய. பட்டப் படிப்பினை (B.sc, Agri) முடித்த திரு.பாடில் பெருத்த கடன்சுமையுடன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தையையும் பராமரிக்கும் பொறுப்பினை ஏற்றார். நிப்பானி கிராமத்தில் உள்ள 16 ஏக்கர் நீர்வளம் குறைந்த விவசாய நிலத்தில் பல இன்னல்கனுடன் காய்கறிகள் மற்றும் பழங்கள் பயிரிட்டு சொற்ப வருமானத்தை ஈட்டி வந்தார்.
2002- ஆம் ஆண்டில் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயி சுமார் 40,000 மூங்கில் நாற்றுகளை (Sapplings) விலையில்லாமல் அளித்ததை தன்னுடைய 16 ஏக்கர் நிலத்தில் பயிராக முதலீடு செய்து கடினமான உழைப்பின் மூலம் படிப்படியாக முன்னேறினார் அதுவரையில் மூங்கில் விவசாயம் பற்றி அறியாத திரு.பாடில் வேறு பணிகளில் இருந்து கொண்டே இந்தியாவின் பல இடங்களுக்கு பயணித்து மூங்கில் வளர்ப்பு பற்றி அறிந்து 50க்கும் மேற்பட்ட மூங்கில் வகைகளைத் தெரிவு செய்து தன்னுடைய நிலத்தில் பயிர் செய்துள்ளார். சுமார் மூன்று லட்சம் மூங்கில் வேர் தண்டுகள் (Bamboo Root Stems) மற்றும் மூங்கில் நாற்றுகள் (Bamboo Sappling) விற்பனையின் மூலம் ஒரு சிறந்த வருமானத்தை தொடர்ந்து ஈட்டியுள்ளார்.
2017 - ஆம் ஆண்டு மத்திய அரசு இந்திய வனச் சட்டத்தின் மூலம் (Indian Forest Act 1927 - 2017) மூங்கில் வளர்ப்பு சட்டப்பூர்வமானது (Legal to grow) மேலும் எந்தவிதமான அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்யலாம் என்று மாற்றியமைத்தது - இந்த சாதகமான சட்டத்தின் காரணமாக திரு. பாட்டில் மூங்கில் பயிரினை விரிவாக்கம் செய்துள்ளார் தற்போது 16- ஏக்கரிலிருந்து 54 ஏக்கர் வரையில் மூங்கில் பயிரினை விரிவாக்கம் செய்து வருடத்திற்கு ரூ. 1 கோடி வரையில் வருமானம் ஈட்டுகிறார்.
மூங்கில் பயிரிடுவதில் உள்ள அனுகூலங்கள் (Advantage)
1 வளர்ப்பதற்கு மிகவும் எளிது எந்தவிதமான பராமரிப்பும் தேவையில்லை.
2. நோய் தாக்குதல்களோ அதற்கான மருந்தை பயன்படுத்துதலும் இது இல்லை.
3. மிகக் குறைந்த அளவு நீர் போதுமானது.
4. மூங்கில் நடவு களுக்கு ஊடுபயிராக பயிர்கள் வளர்த்து கலப்பு விவசாயம் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம்.
5. இந்தியா முழுவதும் ஊதுவத்தி, பல்குச்சி, கரி தயாரிக்க, ஆல்கஹால் (எத்தனால், மெத்தனால்) தயாரிக்க ப்ளை உட் தயாரிக்க மரச்சாமான்கள் மற்றும் மூங்கில் பர்னிச்சர்கள் தயாரிக்க, என்று பயன்பாடு பெருமளவு உள்ளதால் எளிதாக வணிகப் படுத்த முடிகிறது.
6. காய்கள், பழங்கள் போல் கெடுவதில்லை (Non Perishable) என்பதால் மூங்கில் விற்பனை அழுத்தம் (Selling Pressure) இல்லை.
திரு. பாட்டில் 23 வயதில் துவங்கிய மூங்கில் விவசாயம் தனது 50 வயதிலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இது வரையில் 40க்கும் மேற்பட்ட மாநில மத்திய விருதுகளைப் பெற்றுள்ளார்.
23 வயதில் துவங்கிய திரு. பாட்டில் அவர்களின் போராட்ட வாழ்க்கையை மூங்கில் விவசாயம் வெற்றி வாழ்க்கையாக மாற்றி உள்ளது என்றால் அது மிகையல்ல.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.