கடவுளின் சொந்த நாடு (Gods own country) என்று அழைக்கப்படும் கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் முக்கம் (Mukkam) வசிப்பவர் திரு.தச்சோலத் கோபாலன் (Thacholath Gopalan) 67 வயதான முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தனது நீண்ட நாள் கனவான நீர் நிலையின் மீது குளிர்ந்த வீட்டினை நிர்மானித்துள்ளார்.
திரு.சப்புணி நாயர் (Mr.Chappuni Nayar) ஒரு சுற்றுச் சூழலியலாளர் (Environmentalist) தனது மகன் கோபாலன் அவர்களுக்கு அளித்த 10 செண்ட் நிலத்தில் 4 சென்ட்டில் ஒரு குளத்தை அமைத்து அதில் பதினைந்து கான்கிரீட் தூண்களை எழுப்பி அதன் மீது ஸ்லாப்புகள், களிமண்கற்கள் மற்றும் மரங்களைக் கொண்டு வீட்டினை கட்டியுள்ளார். அவர் கட்டியுள்ள வீட்டிற்கு மொத்த செலவு ரூ 75,000 -/ - மட்டுமே.
எந்தவிதமான குளிர்விப்பான்களும் பொருத்தப்படாத இந்த வீடு வருடம் முழுவதும் குளுமையாகவே உள்ளது. வீட்டின் கீழே உள்ள குளத்தில் பல வகையான மீன்கள், தவளைகள், பாம்புகள் மற்றும் பலவகையான மருத்துவ குணமுள்ள செடி கொடிகளையும் வளர்த்து வருகிறார். இதுவரையில் தவளைகளோ பாம்புகளோ தனது வீட்டிற்கு உள்ள வந்தது இல்லை என்று கோபாலன் கூறுகிறார்.
மீதமுள்ள நிலத்தில் நான்கு வேக்சுர் (Vechur Cows) பசு மாடுகள், பல்வேறு பறவைகள், காய்கறிகள் ஆகியவற்றை இயற்கை முறையில் வளர்ப்பதோடு பசு மாடுகளின் பாலைக் கறக்காமல் அதன் கன்றுக் குட்டிகளுக்கே ஒதுக்கி உள்ளார். பசுக்களின் பால் அதனதன் கன்றுக்குட்டிக்கானதே என்று மனிதநேயத்துடன் கூறுகிறார்.
2017 - ஆம் ஆண்டு கேரள அரசாங்கத்தின் "வனமித்ரா" (Vanamitra Award) விருதினை வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது. தனது வீடு எந்தவிதமான விதி மீரல்களும் இல்லாமல் அரசு அங்கீகாரத்துடனேயே கட்டப்பட்டுள்ளதாகவும், இது போன்ற வீடு கட்ட விரும்பும் அனைவருக்கும் இலவசமாக உதவ தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
திரு.கோபாலன் தொடர்புக்கு
9447660347
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.