June 20, 2022

தேனீக்கள் இல்லா தேன் உற்பத்தி (Honey without Honey Bees)

தேன் என்பது ஒரு விந்தையான பொருள். தேனீக்கள் மற்றும் தாவரங்கள் இணணப்பில் உற்பத்தியாகிறது தாவரங்களில் உள்ளது அமிர்தம் (Nectar). அமிர்தம் தாவரங்களின் மலர்களிலும் மற்ற தாவரங்கள் பகுதிகளிலும் உள்ள இனிப்பு சுவை மிகுந்த ஒரு திரவம் அடிப்படையில் சுக்ரோஸ், குளுக்கோஸ், மற்றும் ஃப்ரக்ரோஸ் ஆகிய ஒரு சர்க்கரை கலவை. தேன் தற்போது நான்கு படிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.



1. மலர்களிலிருந்து அமிர்தம் (Nector) தேனீக்களால் உறிஞ்சப்படுகிறது.

2. அமிர்தம் தேனீக்களின் வயிற்றில் சில ஜீரண நீரால் (Enzymes) தேனாக மாற்றப்படுகிறது.

3. மாற்றப்பட்ட தேன் தேனீக்களால் தேன் கூட்டினில் (Honey Comb) சேமித்து வைக்கப்படுகிறது.

4. தேன் கூட்டிலிருந்து தேன் எடுக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது.

5. பயன்படும் தேன் உணவு சந்தைப்படுத்தப் படுகிறது.



பல தசாப்த காலங்களாக இத்தகைய முறையில் தான் தேன் தயாரிக்கப்படுகிறது. இந்த சிக்கலான வழிமுறையில் பலவகையான எதிர்பாராத தடைகளை கடக்க வேண்டியுள்ளது அவை

1. பொருளாதார (Economical)

2. சுற்றுச்சூழல் (Environmental)

3. பாரம்பரிய முறை (Ethical)

அதாவது தேனின் பயன்பாடு உற்பத்தி அளவைவிட வேகமாக அதிகரித்து வருகிறது தட்ப வெப்பநிலை மாற்றம் மற்றும் நோய் தாக்குதல் காரணமாக தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது உற்பத்தி குறைவதால் தேனின் விலை உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக தேனீக்கள் இல்லாமல் அதிக அளவில் தேன் உற்பத்தி செய்யும் முறையினை Bee 10 செயல்படுத்தி வருகிறது. தேனீக்களின் வயிற்றில் நிகழும் மாற்றங்களை ஒரு இயந்திரம் பயோ சிந்தஸிஸ் (Bio Synthesis) செயலாற்றி இயற்கை தேனுக்கு நிகரான சுத்தமான தேனை உற்பத்தி செய்கிறது.

வழிமுறை:

1. மலர்களிலிருந்து, தாவரங்களிலிருந்து இனிப்பான திரவம், அமிர்தம் (Nector) பெறப்படுகிறது.

2. பெறப்பட்ட அமிர்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

3. Bee-10 இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட அமிர்தம் ப்ரத்தியேகமான
பயோசிந்தஸிஸ் முறையில் தேனாக மாற்றப்படுகிறது.

4. இயற்கைத் தேனுக்கு நிகராக உலர்த்தப் படுகிறது.

5. இயற்கைத் தேனுக்கு நிகராக அனைத்து குணங்களையும் கொண்ட தேன் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தாவரங்கள், மலர்களிலிருந்து அமிர்தம் (Nector) தயாரிப்பில் பல நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ளன.

அமிர்த்ததிலிருந்து தேன் தயாரிக்கும் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன அவைகளில் சில:

1. டாபர் (Dabur)

2. காம்விடா (Comvita)

3. பார்க்மேன் தேன் (Barkman Honey)

4. பில்லி பீ (Billy Bee)

5. பீ மெய்ட் (Bee Maid)

6. மில்லர்ஸ் (Millers)

7. டச் கோல்ட் (Dutch Gold)

8 ரவ் சே தேன் (Rowse Honey)

9. தி வெயிஸ் மேன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்

(The Weizman Institute of science)

10. எம். ஐ. டி (Massachusetts Institute of technology)

தேன் பல வகையான சத்துக்கள், வைட்டமின்கள், தாது சத்துக்கள் மற்றும் கால்சியம் கொண்டது. மேலும் மருத்துவ குணங்கள் கொண்டது பெருமளவில் உணவாகும் மருத்துவ தயாரிப்புகள் மற்றும் அழகு சாதன பொருட்களிலும் அங்கமாக உள்ளதால் தேவைகள் பல மடங்கு அதிகரித்து வருகிறது அதற்கு தீர்வாக தேன் இல்லாத தேன் உற்பத்தி ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்றால் மிகையல்ல.

Website:https://bee-io.com/

Bee-io Honey Ltd. Oppenheimer 4 St, Rehovot Israel
phone
+972-86131198
e-mail
Info@bee-io.com

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories