April 25, 2021

சோலார் இட்லி Solar Idli

இந்தியா போன்ற நாடுகளில் சூரிய சக்தியின் ஆற்றல் மிகவும் அபரிமிதமானது. இதனை சரியாக, திறமையாக பயன்படுத்தினால் சூரிய ஒளியைப் பயன்படுத்தும் துறைகள் புதைபடிவ எரிபொருள் (Fossil Fuel) எனப்படும் பெட்ரோல், டிசல், எரிவாயு ஆகியவற்றின் பயன்பாட்டை பெருமளவு குறைக்க முடியும். மேலும் இதன் விளைவாக சுற்றுச்சூழலை பாதிக்கும் கழிவுகள் கட்டுக்குள் வைக்கப்படும்.



அதிகமான அரச நிறுவனங்கள், மத நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகள் கூட தங்கள் அன்றாட எரிசக்தி தேவைகளை நிறைவு செய்ய சூரிய சக்தியை நோக்கி திரும்பி வருவதால் சூரிய ஆற்றலின் எதிர்காலம் ஒரே முக்கியமான மற்றும் நிலையான எரிசக்தி ஆதாரமாக இருப்பது உண்மையில் வரவேற்கத் தக்கதாக உள்ளது.

உதாரணமாக இந்தியாவின் மத சம்பந்தமான புனித சுற்றுலாத் தலங்களான திருப்பதி, ம்வுண்ட் அபு, மற்றும் ஷிர்டி போன்ற இடங்களில் அனைத்து உணவு தயாரிப்புகளும் சூரிய நீராவி சமையல் முறைகளை செயல்படுத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கான  யாத்ரீகர்களுக்கும், தினமும் வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கும் உணவளிக்க உதவுகிறது.



அதைப்பற்றி யோசித்து, சூரியனால் வேகவைக்கப்பட்ட சூடான, பஞ்சு போன்ற இட்லிகளை கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த "கிராஃப்ட் ஒர்க் சோலர்" (Kraft Work Solar) நிறுவனம் உற்பத்தி செய்து வழங்குகிறது.

கொச்சியை மையமாகக்கொண்ட இந்த நிறுவனம் சோலார் வாட்டர் ஹீட்டர்கள், உலர்த்திகள் (Dryers) இட்லி குக்கர்கள், மற்றும் ஒளி மின் அழுத்த பி.வி (Photovoltaic P.V) போன்ற பல்வேறு வகையான சூரிய சக்தியால் இயங்கும் பொருட்களை கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.



திருவனந்தபுரத்தில் வழக்கத்திற்கு மாறான எரிசக்தி மற்றும் கிராமிய தொழில்நுட்ப நிறுவனம். (Non Conventional Energy and Rural Technology (ANERT) சற்றுமுன் நடத்திய "அக்ஷய் உர்ஜா உத்சவ்” (Akshay Urja Utsav)  நிகழ்ச்சியின்போது இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துக்கு (Ministry of New and Renewable Energy (MNRE) ) குறைந்த மானியத்தில் கிடைக்க (ANRD) ஏ.என், ஆர்.டி மற்றும் எம்.என்.ஆர்.இ (MNRE)  மூலமாக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

Office address:
29/2862. Adithya, Near Gandhi Sq.
Poonithura, Kochi 682 038.
Tel: +91-484-2707228, 2112777 
e Mail: info@kraftworksolar.com     

Website Address: http://www.kraftworksolar.com/

Stories