கடவுளின் சொந்த நாடு (Gods own country) என்று அழைக்கப்படும் கேரளாவின் கொச்சியிலுள்ள செல்லாணம் என்ற கிராமத்தின் திரு.கே.ஜே ஆண்டோஜி (K.J.Antogi) மழைநீர் சேமிக்கும் உறிஞ்சு குழல் தொழில்நுட்பத்தினை கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறார்.
பெரும்பாலும் கடற்கரை நிலங்களில் உப்புநீரே இருப்பதாலும் மழைநீர் விரைவில் கடலில் கலந்து விடுவதாலும் பயிர் செய்ய இயலாததாகும் குடியிருப்புகளுக்கு நிலத்தடி நன்னீர் கிடைப்பதில்லை. குடியிருப்புப் பகுதிகள் நன்னீருக்கு அரசு சார்ந்த நிறுவனங்களையே (Kerala water Authority) நம்பியிருக்க வேண்டும் இத்தகைய சிரமங்களுக்கு ஒரு விடிவாக திரு.ஆண்டோஜி கண்டுபிடித்துள்ள மழைநீர் சேமிக்கும் உறிஞ்சுகுழல் தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கடற்கரை கிராமங்கள் பெரிய அளவில் தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெற்றுள்ளது.
உறிஞ்சுகுழல் தொழில்நுட்பம்:
- கடல் மட்டத்துக்கு பல மீட்டர் ஆழத்தில் மழைநீரை சேமித்து வைத்த பின்னர் தேவைப்படும்போது பிரத்தியேகமான மோட்டார் களின் மூலம் மழை நன்னீரை உறிஞ்சி எடுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.
- சேமிக்கப்பட்ட மழைநீர் உப்புநீர் ஆவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது
- 6 மீட்டர் ஆழத்திற்கு பல இடங்களில் குழாய்கள் அமைத்து மழைநீரை சேமித்து வைத்துத் தேவையானபோது பிரத்தியேக மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுத்து பயன்படுத்த முடிகிறது.
- மழைநீரை வடிகட்டும் விதமாக ஆற்று மணல் அடுக்கு வழியாக வடிகட்டி சேமிக்கப்படுவதால் ஆண்டு முழுவதும் நன்னீராகவே ஆகவே பெற முடிகிறது.
திரு.ஆண்டோஜி அவர்களின் உறிஞ்சு குழல் தொழில்நுட்பம் கடற்கரை மாவட்டங்கள் அனைத்திற்கும் ஏற்றதாகவே உள்ளது. கேரளாவைப் போல் குஜராத் மாநிலத்திலும் அந்தமான் தீவுகளிலும் பெருமளவு பயன்பாட்டில் உள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள தங்கும் விடுதிகள் (Resorts) இத்தகைய உறிஞ்சு குழல் தொழில்நுட்பத்தின் மூலம் வருடம் முழுவதும் நன்னீர் பெற்று பயன் பெறுகிறது. இதுவரையில் கேரளம், குஜராத் மற்றும் அந்தமான் நிக்கோபார் போன்ற இடங்களில் 400 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு உறிஞ்சு குழல் தொழில்நுட்பம் நிர்மாணிக்கப்பட்டு செயல்படுத்தப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.