May 16, 2022

"கிரெயின் புரோ" நடமாடும் சூரிய உலர்த்தி( "Grain Pro" Post Harvest Management)

உணவு தானிய வீணடிப்பு என்பது உலகளாவிய பரவலாக உள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பது பலருக்கு தெரியாது. குறைந்த வருமானம் கொண்ட வளர்ந்து வரும் நாடுகளில் உணவு தானிய மற்றும் உணவு விநியோகச் சங்கிலியில் பெருமளவு விரயமாகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டத்தின் படி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவில் 40 சதவீதம் வரையில்  வீணடிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 92,000 கோடி ரூபாய் மதிப்பிலான 67 மில்லியன் டன் உணவுகள் வீணடிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகை பீஹார் மாநிலம் முழுவதற்கும் ஒரு வருடத்திற்கு உணவளிக்க வல்லது.

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் டன் கோதுமை தானியம் வீணாகிறது. இது ஆஸ்திரேலியாவின் மொத்த ஆண்டு உற்பத்திக்கு சமம்.

2021 - ஆம் ஆண்டிற்கான ஐ.நா குறியீட்டு அறிக்கையின் படி 2019 - ஆம் ஆண்டில், உலகில் 930 மில்லயன் டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டன.

இத்தகைய இழப்புகளை பெருமளவு குறைத்திட 1992 - ல் மாச சூசெட்ஸின், கான்காட்டில் நிறுவப்பட்ட "க்ரெயின் ப்ரோ" (Grain Pro) என்ற நிறுவனம் உணவு தானிய அறுவடைக்கு பிந்தைய மேலாண்மையின் நிலையான முன்னெடுப்பை 115 நாடுகளில் செயலாற்றி வருகிறது.

"கிரைய்ன் புரோ" நிறுவனம் அல்ட்ரா வெறர்மீடிக் தொழில்நுட்பத்தை உருவாக்கி அனைத்து விவசாயிகளுக்கும் மலிவு விலையில் அறுவடைக்கு பிந்தைய இழப்புகளிலிருந்து  பாதுகாத்து அவர்களின் உணவு மற்றும் பணத்தின் ஆரோக்கியம் மற்றும் சிறந்த தரத்தை உறுதி செய்து உலக பசி மற்றும் வறுமையை நிலையாக குறைக்கும் வகையில் செயலாற்றி வருகிறது.


ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் (SDGS) படி "கிரெயின் புரோ" வின் செயல்பாடுகள்

1. வறுமை இல்லை

2. பூஜ்ஜிய பசி

3. பாலின சமத்தும்

4. பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி

5. கால நிலை நடவடிக்கை.

"கிரெயின் புரோ" விண் அறுவடைக்கு பிந்தய தீர்வுகள்:-

1. ஹெர்மீடிக் கொக்கூன் (Hermetic Cocoon) இது ஒரு மடிக்கக்கூடிய உலர்த்தி பெட்டி. இரண்டு நாட்களில் 18 மூட்டை நெல்லை, அரிசியை போக்குவரத்து தேவையில்லாமல் காய வைக்க உதவுகிறது.

2. "க்ரெயின்புரோ  குமிழி உலர்த்தி": சூரியக் கதிர்வீச்சு மற்றும் சுற்றுப்புற காற்றை பயன்படுத்தி பொருட்களை உலர்த்தும் ஒரு சுரங்கப்பாதை வகை உலர்த்தியாகும்.


3. க்ரெயின் புரோ மடிக்கக்கூடிய உலர்த்திப் பெட்டி: பல்வேறு விவசாயப் பொருட்களை பாதுகாப்பாக மற்றும் வசதியாக உலர்த்துவதற்கான மலிவு விலை கையடக்க பெட்டிகள்.



4. "க்ரெயின் புரோ கொக்கூன் லைட்" (Grain Pro Cocoon lite): நிறுவனத்தின் நம்பகமான PVC கொக்கூன்களின் இலகுவான மற்றும் மலிவான பதிப்பு.



5. "க்ரெயின் புரோ" கொக்கூன் சாக்கு:- ஒரு அல்ட்ரா ஹெர்மெடிக் தீர்வு பொதுவாக ஏற்படும் பூச்சிக்கொல்லியின் அபாயத்தை நீக்குகிறது.

6. க்ரெயின் புரோ க்ரையின் சேஃப பேக் "(Grain Pro Grain Safe Bag):- உலர் பொருட்களுக்கான கையடக்க சேமிப்பு அமைப்பு, இது தானியங்கள் மற்றும் விதைகளுக்கானது.



7. க்ரெயின் புரோ ஹெர்பீடிக் பை:- பச்சை அல்லது வறுத்த காப்பி மாதிரிகளுக்கு ஏற்றவாது மறுசீரமைப்பு செய்யக்கூடிய பை.



8. க்ரெயின் புரோ ஹெர் மெடிக்பேக் பிரீமியம் ஜிப்பர்



9. க்ரெய்ன் புரோ ஹெர் மேடிக் பேக் பிரிமியம் டிவிஸ்ட மற்றும் டை

10. க்ரைய்ன்புரோ  ஹெர்மீடிக் பேக் பண்ணை

11. க்ரைய்ன் புரோ FIBC ஹெர் மெடிக்லைனர் இவை அனைத்தும் மலிவானது, எளிமையானது ஈரப்பதம் மற்றும் பூச்சிகளின் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.



இவற்றைத் தவிர

1. கிரெய்ன்புரோ டிரான்சேஃப்லைனர்


2. கிரெய்ன்புரோ  ஈரப்பதமீட்டர்

3. கிரெய்ன்புரோஆக்சிஜன் உறிஞ்சி பேக்



4. கிரெய்ன்புரோ ஐ ஆர் ஆர்ஜ அரிசி சோதனை கிட்



5. கிரைய்ன்புரோ ஆக்ஸிஜன் அனலைசர்.



6.  கிரைய்ன்புரோ  எக்கோ ஒயிஸ் (Eco wise)

இது வயர்லெஸ் உணர்திறன் அமைப்பு மூலம் சுற்றுச்சூழலை தொலைதூரத்திலிருந்து கண்காணிக்க வல்லது.

க்ரெயின் புரோவில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆர்வத்தின் மூலம் அறுவடைக்கு பிந்தைய மேலாண்மையின் நிலையான அமைப்பை அடைவதன் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்பது திண்ணம்.

Our Website: https://www.grainpro.com/en

Address: 18A109, WeWork Berger Tower, 18th Floor, Sector 16B, Noida, Uttar Pradesh 201301
Hours: 
Open ⋅ Closes 5:30 PM
Phone: +91 8056099333

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories