ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரை சேர்ந்த 32 வயது முன்னாள் பத்திரிக்கையாளர் திரு. அங்கித் அரோரா (Mr.Ankit Arora) இந்தியாவில் 15 மாநிலங்கள் முழுவதும் கிராமம் கிராமமாக 2017 - ஆம் ஆண்டிலிருந்து சைக்கிளிலேயே பயணம் செய்து சமூக மற்றும் கலாச்சார அம்சங்களைப் புரிந்துகொள்ளும் வகையில் சுமார் 600 குடும்பங்களுடன் வாழ்ந்து அனைத்து பாரம்பரிய அறிவையும் பயன்படுத்தி தனது மாதிரி கிராமத்தின் மூலம் நிலையான மற்றும் இயற்கையான வாழ்க்கை முறையை மேம்படுத்த முயற்சித்து வருகிறார்.
அவருடைய சைக்கிள் பயணத்தில் ராணுவ வீரர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், பலதரப்பட்ட விவசாயிகள், கைவினை கலைஞர்கள், மருத்துவர்கள் சரணடைந்த நக்சல்கள், பழங்குடியினர் என எண்ணற்ற மக்களுடன் வாழ்ந்து சில சமயங்களில் அவர்களுடன் வேலை செய்துள்ளார். அந்த பயணத்தில் இந்தியாவின் பழங்குடி பகுதிகளுக்கும் சென்றதிலிருந்து வடமொழி, கட்டிடக்கலை ஆகியவற்றை அறிந்துள்ளார். தொலைதூர குக்கிராம வாசிகளிடமிருந்து மண் வீடுகளை உருவாக்கும் கலையையும் கற்நரிந்தார் புல்லாங்குழல் வீணை இசை கருவிகள் செய்யும் முறை, தஞ்சாவூர் மதுபானி கோண்ட் போன்ற கலை வடிவங்களில் 400 ஆண்டுகள் பழமையான மர பொம்மைகள் செய்முறை அறிந்துகொண்டார்.
அவரது தன்னிறைவு கிராமம் அமைக்க பெங்களூருவைச் சேர்ந்த ஓவியர் .ஸ்ரீதேவி (Sri Devi) அவரது கணவர் ராணுவ அதிகாரி தம்பதியினர் உதவியுடன் பெங்களூரு அருகே கிருஷ்ணகிரியில் உள்ள அஞ்செட்டியில் 2 ஏக்கர் நிலத்தை வாங்கி "இன்னிஸ் ஃபரீ பார்ம்ஸ்" (Innisfree Farms) என்ற தன்னார்வ தன்னிறைவு கிராமத்தை உருவாக்கினர். அது கரிமப் பொருட்களாலான மண் வீடுகளைக் கொண்டுள்ளது. மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறைக்கு எடுத்துக்காட்டாக செயல்படுகிறது. வீடு கட்ட அங்குள்ள சிவப்பு மற்றும் பழுப்பு மண் ஜவ்வரிசி, தேன் கடுக்காய், சுண்ணாம்பு, முட்டை போன்றவை வீடு கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன.
அப்பகுதி மக்களுக்கு இயற்கை விவசாயத்தின் நன்மைகளை காட்ட இயற்கை எருவை பயன்படுத்தி கீரை, தக்காளி, மா, புளி, பலா போன்ற அனைத்துவித பழசெடிகள், மரங்கள் பயிர் செய்து சிறிது சிறிதாக கிராம மக்கள் பின்பற்றத் துவங்கியுள்ளனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பயனுள்ள கழிவு மேலாண்மையும் ஊக்குவித்து நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியா முழுவதும் இது போன்ற தற்சார்பு சுய நிலையான கிராமங்கள் பிரதி பலித்தால் நாடே உணவு தேவை தன்னிறைவு பெற்றதாக அமையும்.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.