நோய்டா (Noida) வைச் சேர்ந்த திரு. மணிஷ் திரிபாதி (Mr. Manish Tripathi) மற்றும் திரு.ஹிமான்ஷு அதிகாரி (Mr.Himanshu Adhikar) இருவரும் இணைந்து "ஆர்கலோவ்" (Orgolove) என்ற வணிக நிறுவனத்தினை கொரோனா ஊரடங்கின்போது July 2020 துவங்கியுள்ளார். நிறுவனத்தில் நல வாழ்க்கைக்கான (Healthier Lifestyle) மற்றும் நீண்ட நாள் உழைக்கக்கூடிய பல்வேறு உபகரணங்களான மண் பானைகள், மண் பாட்டில்கள், மண் தவாக்கள் (Clay pan) ஆகியவற்றை வடிவமைத்து உருவாக்கி சந்தைப் படுத்தி வருகின்றனர்.
Photo Source: Orgolove
இந்த வரிசையில் தற்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த நலன் பயக்கும் களிமண் குக்கர்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
களிமண்குக்கரின் சிறப்புகள்:
- நிதானமாக வேகவைக்கும் அதனால் அனைத்து சத்துக்களும் பாதுகாக்கப்படுகிறது.
- களி மண்ணாலான குக்கர் சமைக்கும் உணவிற்கு ஒரு நல்ல மணத்தைக் கொடுக்கிறது. (Flavour)
- உணவின் இயற்கையான காரத்தன்மை (Alkaline) பாதுகாக்கப்பட்டு அமிலத்தன்மை (Acidity) ஏற்படாமல் தடுக்கிறது. அதனால் உணவின் PH நிலை நிறுத்தப்படுகிறது.
- களிமண் குக்கர்களின் உள் எந்தவிதமான ரசாயன பூச்சுகளும் இடப்படுவது இல்லை எனவே உணவின் தரம் (Quality) பாதுகாக்கப்படுகிறது.
- சுத்தப்படுத்த டிட்டெர்ஜன்ட் மற்றும் சோப்பு போன்ற சுத்திகரிப்பான்கள் பயன்படுத்தத் தேவையில்லை.
- நவீன உலோக குக்கர் களைப் போல் விசில் சத்தம் அதிகம் இல்லை குறைந்த அளவிலேயே விசில் சத்தமிடுகிறது..
- நவீன உலோக குக்கர்கள் பெரும்பாலும் நிக்கல், அலுமினியம் இரும்பு மற்றும் செம்பு கலவைகளைக் கொண்டு தயாரிக்கப் படுவதால் அவை உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியது. களிமண் குக்கர்கள் அத்தகைய எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
- களிமண்குக்கர்கள் ஒன்றின் விலை ரூ 1399 /- மட்டுமே. இலவசமாக வீட்டிற்கே கொண்டுவந்து கொடுக்கப்படுகிறது.
Photo Source: Orgolove
தற்சமயம் இந்தியா முழுவதிலும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னை, கல்கத்தா, குஜராத், மற்றும் பல நகரங்களும் உள்ளடங்கியது. வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் வருவதால் தற்போது உரிமம் (Licence) பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று திரு. ஹிமான்ஷு (Mr.Himanshu) கூறுகிறார்.
தொடர்புக்கு: 8178154210
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.