September 30, 2020

குறைந்த செலவில் சப்ஜி குளிர் பதனப் பெட்டி (Subjee Cooler)

விவசாயிகள் காய்கறிகள் வைக்க குறைந்த செலவில் குளிர்பதனப் பெட்டியினை வடிவமைத்துள்ளனர் IIT- ஐ சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள்.

"ரூ கார்ட் டெக்கனலஜீஸ்" (Rukart Technologies) என்ற நிறுவனத்தின் ஸ்தாபகர்கள் திரு. விகாஸ் ஜா (Vikash Jha), திரு.ஷ்ராயு குல்கர்னி (Sharayu Kulkarni) மற்றும் திரு. குணவந்த் நெஹாதே (Gunavanth Nehate) சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் அறுவடை செய்த காய்கள் மற்றும் பழங்களை  பாதுகாக்க மிகவும் விலை குறைந்த குளிர்பதனப் பெட்டியை வடிவமைத்துள்ளனர்.

பொதுவாக பெரும்பாலான விவசாய விளைபொருட்கள் நீர் சத்து அதிகம் உள்ளதால் குறைந்த வாழ்நாளை கொண்டுள்ளது. காய் மற்றும் பழங்களின் வாழ்நாளை நீடிக்க குளிர்பதன கிடங்குகளை அணுக வேண்டியுள்ளது. சிறிய விவசாயிகள் அதிக செலவாகும் குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்த முடிவதில்லை இந்த குறையை போக்கும் வகையில் 100 கிலோ வரையில் காய்கள் மற்றும் பழங்களை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள குளிர்பதனப் பெட்டி விவசாயிகள் தங்கள் பண்ணையிலேயே குறைந்த இடத்தில் குறைந்த செலவில் நிர்மாணித்துக் கொள்ளும்படியாக உள்ளது.



" சப்ஜி குளிர் பதனப் பெட்டி" யின் தாத்பரியம்: (Principle):

மிகவும் எளிமையான ஆவியாகி குளுமை படுத்துதல் முறை. பானையில் ஊற்றப்படும் தண்ணீர் வெளியில் சிறிதளவு கசிந்து நீர் ஆவியாவதற்கு பானையின் உள்ளே உள்ள நீரின் வெப்பத்தை எடுத்து குளிர்விப்பதைப் போலவே செயல்படுகிறது. இதற்கு மின்சாரமோ, மோட்டார்களோ எதையும் பயன்படுத்த தேவையில்லை என்பது "சப்ஜி குளிர் பதனப் பெட்டியின் " சிறப்பு

"சப்ஜி குளிர்பதனப் பெட்டி" வடிவமைப்பு:

சுமார் 100 கிலோ காய்கள், பழங்கள் வைக்கக்கூடிய அளவில் செங்கல் மற்றும் சிமெண்ட் கலவையை பயன்படுத்தி ஒரு தொட்டியை கட்டி உட்பகுதியையும் மூடியையும் இரும்பு தகட்டினால் (Galvanized Iron) கவர் செய்ய வேண்டும். இவற்றுக்கு இடையில் நைட்ரஜன் உருண்டைகள் இட்டு விட்டால் " சப்ஜி கூலர் பதனப் பெட்டி" தயார். பெட்டிக்குள்ளே வெளி வெப்பத்தை விட 15°C குறைவாக இருக்கும். மேலும் ஈரப்பதம் (Humidity)  85 - 90 சதவீதம் இருக்கும். இதற்கு மின்சாரம் போன்ற எந்தவிதமான அமைப்புகளும் தேவை இல்லை ஆனாலும் நாளுக்கு ஒருமுறை தண்ணீரிட வேண்டியது அவசியம். இதன் மூலம் 7 நாட்கள் வரையில் காய்கள், பழங்களின் வாழ்நாளை நீட்சி செய்யமுடியும்.

" சப்ஜி குளிர் பதனப் பெட்டி" யை உற்பத்தி செய்யவும் பராமரிக்கவும் "ரூக்கார்ட் டெக்னாலஜி" (Rukart Technologies) நிறுவனம் பெண்களை மட்டுமே தெரிவு செய்து பயிற்சி அளிக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

மூன்று வார பயிற்சிக்குப் பின்னர் இதுவரையில் மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சப்ஜி குளிர்பதன பெட்டிகளை விவசாயிகளின் இடத்திலேயே பெண்கள் நிர்மாணித்துள்ளனர்.

" ருக்கார்ட் டெக்னாலஜி " யின் வல்லுனர்குழு விவசாயிகளுக்காக " பீக் ரக்ஷக்" (Peek Rakshak) என்ற மனித விலங்கு எதிர்ப்பை (animal human conflict) குறைக்கும் பாதுகாப்பு உப காரணத்தையும், ட்ரிடில் பம்ப் (Treadle pump) என்னும் காலால் இயங்கும் தண்ணீர் பம்பையும் பயன்பாட்டிற்கு அளித்துள்ளது.

விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் குறைந்த செலவில் தொடர் செலவுகள் ( recurring Cost ) இல்லாமலும் வலுவான (Robust) உபகரணங்களை உற்பத்தி செய்ய உறுதியுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

" இம்மண்ணில் அனைவரும் மகிழ்வுடன் வாழ இயற்கை நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது அதை கொஞ்சம் புத்திசாலிதனத்துடன் பயன்படுத்தினால் நல்ல வண்ணம் வாழ முடியும்"

Contact:

B301,Mangeshi Elite Phase 1,Rambag Lane No. 4 end,Kalyan(west) Thane, India PIN-421301

088790 49787

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories