திரிபுரா மாநிலத்தின் கோமதி மாவட்டத்திலுள்ள காட்ஜி கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான திரு.சமீர் ஜமாஷியா (Mr.Samir Kamatia) ஒரு மூங்கில் தொழில்நுட்பவியலாளர் (Bamboo Technologist). இப்போது அவர் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிற்கு மூங்கில் இலை தேநீர் வழங்குவதிலிருந்து ஒரு வணிகத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.
திரு.சமீர் சிறுவனாக இருந்தபோது அவரின் தாத்தா குளிர், இருமல், தலைவலி மற்றும் உடல் வலிகள் போன்ற பொதுவான நோய்களுக்கு பல்வேறு மூலிகைகளுடன் மூங்கில் நிலையும் பெரும் பங்கு வகித்துள்ளது. அந்த வயதில் மூங்கில் இலைகளின் முக்கியத்துவம் என்னவென்று தெரியாவிட்டாலும் பின்னாளில் மூங்கிலில் உள்ள நற்பண்புகளை உலகம் கவனிக்கும் போதுதான் அது மதிப்புக்குறியது என்பதை உணர்ந்த திரு.சமீர் 2008 ஆம் ஆண்டில் சீனாவின் நாஞ்சிங் பல்கலைக்கழகத்துக்கு (Nanjing University) மூங்கில் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படிக்கச் சென்றார். மூங்கில் ஆராய்ச்சியின் தொடர்பாக கம்போடியா, வியட்நாம் லாவோஸ் போன்ற இலைபற்றி ஆராய மேற்கொண்டு ஆய்வு செய்துள்ளார்.
திரு.அப்துல் கலாம் எழுதிய “பச்சைத் தங்கம்” பற்றிய குறிப்பைப் படித்த போதுதான் மூங்கில் இலைபற்றி ஆராய ஒரு உந்துதலாக அமைந்தது என்று திரு.சமீர் கூறுகிறார்.
மூங்கில் இலை தேநீர் சிறப்புகள்:
மூங்கில் இலை தேனீர் ஆக்ஸிஜனேந்திகள் (Antioxidents) மற்றும் ஆண்டிபயாடிக் (Antibiotics) பண்புகள் நிறைந்துள்ளது. மற்றும் மூங்கில் இலைகளில் அதிக அளவு சிலிக்கான் இருப்பதால் முடி, தோல் மற்றும் நகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் எலும்புகள், பற்களை வலுப்படுத்த உதவுகிறது. திரிபுராவில் மட்டும் சுமார் 30க்கும் மேற்பட்ட மூங்கில் வகைகள் வளர்க்கப்படுகின்றன. தேனீர் தயாரிக்கும் நோக்கத்திற்காக இளம் மற்றும் மென்மையான இலைகள் மட்டுமே பறித்து பயன் படுத்தப்படுகிறது.
கிலோ 120 ரூபாய் விலையிலுள்ள மூங்கில் இலைகளுடன் சுவையை அதிகரிக்க இஞ்சி சாறுகள் மற்றும் எலுமிச்சைச்சாறு உட் செலுத்தப்படுகிறது. திரு. சமீரின் மூங்கில் இலை தேனீர் சாதனைக்காக 2012 - ஆம் ஆண்டு விஸ்வகர்மா விருது (Viswakarma award for achievement Best Project on Bamboo base in north eastern region) வழங்கப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 600 கிலோ அளவில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திரு.சமீர், மூங்கில் இலை தேனீருக்கான ஆய்வகச் சோதனை சான்றிதழ் மற்றும் வர்த்தக முத்திரையையும் (Lab Test Certificates and Trademark) பெற்றபின்னர் விரைவில் பெரிய அளவிலான உற்பத்தியை தொடங்க உள்ளதாக கூறுகிறார்.
மின்னஞ்சல் முகவரி – jamatia.samir13@gmail.com
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.