October 03, 2021

திரவ உயிரி உரம் - விரைவு கம்போஸ்ட் உரம் Liquid Bio Fertilizer - Speed Compost Fertilizer

உலகளாவிய வேளாண்மையில் பரவலாக ரசாயண உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அபரிமிதமான பயன்பாட்டின் காரணமாக விவசாய நிலங்கள் பெருமளவில் சீரழிந்துவிட்டது. 2019 - 20 இந்திய மண் சுகாதார கணக்கெடுப்பு அறிக்கையின் படி இந்திய விவசாய நில மண்ணில் 55 சதவீதம் நைட்ரஜன் குறைபாடும் 42 சதவீதம் பாஸ்பரஸ் சத்து குறைபாடும் 44% சதவீத கரிம கார்பன்சத்து குறைபாடும் உள்ளது.



இதற்கு ஒரு பெருமளவு தீர்வாக புனே- வைச் சேர்ந்த “கான் பயோசிஸ்” (Kan Biosis) என்ற நிறுவனத்தின் ஸ்தாபகர் சந்தீபா கனித்கர் (Sandeepa Kanitkar) என்ற நுண்ணுயிரியல் வல்லுநர் (Microbiologist) விவசாயிகளுக்கு மண்ணின் வளத்தை மேம்படுத்தவும் பூச்சிகளை கட்டுப்படுத்தவும், விவசாய நிலத்தின் குப்பைகளை (Stubble) எரிக்காமல் உரமாக பயன்படுத்தவும் நுண்ணுயிர்களை பயன்படுத்தி 16 வகையான தயாரிப்புகளை உருவாக்கியுள்ளார்.

2005 ஆண்டுமுதல் “கான் பயோசிஸ் ” (Kan Biosis) மில்லியன் கணக்கான விவசாயிகளுடன் இணைந்து கரிம மாற்றத்தை ஏற்படுத்தி விவசாயத்தில் நச்சு ரசாயனங்கள் பெரும் அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை மாற்ற இயற்கை முறைகளை பயன்படுத்துவதை ஊக்குவித்தது.



1993 ஆண்டிலேயே விவசாய உற்பத்தியை அதிகரிக்க உதவும் ஒரு திரவ உயிர்உரத்தை (Liquid Bio Fertilizer) கண்டுபிடித்து. பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாலும் உள்நாட்டு விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தவில்லை. எனவே "கான் பயோசிஸ்" (Kan Biosis) நிறுவனம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சந்தைப்படுத்தி வெற்றி கண்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சர்க்கரை ஆலைகள் மற்றும் கரும்பு விவசாயிகளை அணுகி விநியோக சங்கிலியை உருவாக்கி சாத்தியமான சந்தையை உருவாக்கியுள்ளனர். இந்த இயற்கை உரங்கள் விதைகளின் முளைப்பு விகிதத்தை மேம்படுத்தவும், மண்ணில் கார்பன் செறிவூட்டலை அதிகரிக்கவும், நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களை சேர்க்கவும் பயிர்களில் பூச்சிகளை தடுக்கவும், பயிர் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை பயன்படுத்தி தயாரிக்கப் பட்டுள்ளதால் நீடித்ததாகவும் (Sustainable) சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது என்பது வரவேற்கத்தக்கது.

விவசாயநில கழிவுக் குச்சி எரியும் சூழல் நட்பு மாற்று:-

(Eco -Friendly Alternative to Stubble Burning) :-

2016 - ஆம் ஆண்டில் "கான் பயோசிஸ்" (Kan Biosis) நிறுவனம் விவசாய நில கழிவுகள் எரியும் சிக்கல்களை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் மற்றொரு தனித்துவமான தீர்வை கொண்டு வந்துள்ளது.

நிறுவனத்தின் தயாரிப்பான "ஸ்பீட் கம்போஸ்ட்"   (Speed Compost) விவசாய ஸ்டபிள் எரியும் சிக்கலைத் தீர்ப்பதற்கான முதல் தயாரிப்பாக மாறியது என்று நிறுவனர் சந்திபா கணித்கர் கூறுகிறார்.

உயிரி உரம் தயாரிப்பில் நுண்ணுயிரிகள் உள்ளன அவை மண்ணில் உள்ள குப்பைகளின் சிதைவை துரிதப்படுத்தி மண்ணின் வளத்தை அதிகரிக்கும் சந்தையில் உள்ள வேறுசில தயாரிப்புகள் குப்பைகளை சிதைப்பதற்கு 30 முதல் 40 நாட்கள் ஆகும் ஆனால் "கான் பயோசிஸ்" தயாரிப்பு 15 நாட்களில் அதே வேலையை செய்கிறது இது 50% அதிக செயல் திறன் கொண்டுள்ளது.

இந்த தயாரிப்பு ஒரு ஏக்கருக்கு ரூ: 600 செலவாகும் இதன் நன்மைகளாக விளைச்சல் அதிகரிப்பு, மண்ணின் ஆரோக்கியத்தை சரி செய்தல் மற்றும் உற்பத்தி செலவுகளை சேமித்தல், போன்ற வடிவங்களில் ரூபாய் 8000 க்கும் அதிகமாக வருமானத்தை ஈட்டித்தருகிறது.

இந்த தயாரிப்பு பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஹரியானா வேளாண் பல்கலைக் கழகங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 30,000 ஏக்கர் நிலத்தில் குப்பை எரியும் பிரச்சனையை தவிர்த்து தணித்துள்ளது.

எதிர்காலத்தில் இந்நிறுவனம் கார்பன் கடன் பரிமாற்றத் திற்கான (Carbon Credit Exchange) மாதிரியை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளதாக நிறுவன ஸ்தாபகர் கூறுகிறார். இது சுத்தமான காற்று, நீர் மற்றும் பாதுகாப்பான உணவை உறுதி செய்யும். 

Website: www.kanbiosys.com

OFFICE ADDRESS
917/17, Raveedeep, Ganeshwadi,Off F.C.Road,Prin.K.R.Kanitkar Path, Pune-411004,Maharashtra, India
Phone: + 91-20 25676670 / 71, 25650196

PRODUCTION FACILITY 1
S No.179/2, Garmal, Dhayari,Sinhagad Road, Pune - 411041,Maharashtra, India

PRODUCTION FACILITY 2
S No.143, Lagad Mala, Dhayari,Sinhagad Road, Pune - 411041,Maharashtra, India
Phone: + 91 20 24393876
Phone: +91-2024391779 / 4772

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

Stories