குஜராத் மாநிலத்தின் சூரத்தைச் சேர்ந்த திரு.அபிமன்யு (Mr.Abimanyu) மற்றும் சகோதரர் வர்தான் ரதி (Mr.Vardan Rathi) ஆகியோர் கிராபின் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட செல்போன் திரைகளை பயன்படுத்தி நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வடிவமைத்து அதனை விற்பனை செய்ய நிலையான வாழ்வாதாரம் முன்முயற்சி இந்தியா " (Sustainable Livelihood Initiative India ( SLII) என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளனர்.
உலகவங்கியின் கூற்றுப்படி கிராமப்புற இந்தியாவின் 85% குடிநீர்த் தேவைகள் நிலத்தடி நீர் ஆதாரங்களால் பூர்த்தி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக முக்கிய வளங்கள் குறைந்து வருகின்றன. மேலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மாசுபாட்டிற்கு உள்ளாகின்றனர்.
சுத்தமான மற்றும் அழிவு குடிநீருக்கான அணுகல் இந்தியாவில் ஒரு ஆடம்பரமாகவே கருதப்படுகிறது 50% க்கும் அதிகமான மக்கள் நுகர்வுக்கு பாதுகாப்பான நீரை பெறவில்லை என்பதே நிதர்சனம். சுகாதார திணிப்பைத் தவிர சுத்தமான நீர் பற்றாக்குறை அரசாங்க திருக்கு பல பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
R.O (Reverse Osmosis) நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் மற்றும் பிற வடிப்பான்கள் போன்ற தீர்வுகள் பார்வைக்கு மாற்று வழிகளாக தோன்றலாம் ஆனால் இவை விலை உயர்ந்தவை அல்லது சுற்றுச்சூழலை எதிர்மறையாக பாதிக்கின்றன மேலும் இத்தகைய நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உண்மையில் சுத்திகரிக்கப்பட்ட நீரை விட அதிக அளவில் நீரை அடிக்கின்றன.
இத்தகைய நெருக்கடியை தீர்க்க சகோதரர்கள் தனித்துவமான ஒரு நீர் சுத்திகரிப்புக்கு இயந்திரத்தை வடிவமைத்து தயாரித்துள்ளனர்.
"வர்தான்" நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் சிறப்புகள்:
1. இது மாசுபட்ட நீரை சில நிமிடங்களில் பிடிக்கக் கூடியதாக இருக்கிறது.
2. ஆசையும் பாகங்கள் எதுவும் இல்லை
3. ஏந்திரம் மலிவானது
4. ஒரு லிட்டர் நீரை சுத்திகரிக்க 8 பைசா மட்டும் செலவாகிறது.
5. தண்ணீரில் இருந்தால் மற்ற அசுத்தங்களை அகற்ற சூரிய சக்தியில் இயங்கும் புற ஊதா ஒளி நுட்பம் உள்ளது.
6. இதற்கான உபகரணம் மின் கழிவுகளிலிருந்து தயாரிக்கப் படுகிறது.
7. தண்ணீருக்கு மின்சாரம் பம்ப் (Electric Motor) தேவையில்லை புவி ஈர்ப்பு உதவியுடன் பாய்கிறது எனவே மின்சார செலவு இல்லை.
8. முதல் 10 ஆண்டுகளுக்கு மிகக் குறைந்த பராமரிப்பு செலவு மட்டுமே.
9. இயந்திர தயாரிப்பு செலவு ரூ 5000 மட்டுமே.
10. இயந்திரம் அதனது வாழ்நாளில் 1 லட்சம் லிட்டர் தண்ணீரை எந்த பாகங்களையும் மாற்றாமல் சுத்திகரிக்கிறது.
11. ஒரு நாளைக்கு சராசரியாக 40 லிட்டர் சுத்திகரிப்புடன் 10 ஆண்டுகள் நீடிக்கும்.
12. நீர் சுத்திகரிப்பு செயல்பாட்டில் ஒரு சொட்டு நீர் கூட வீணாக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
13. ஒட்டுமொத்த வடிகட்டுதல் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகள், நுண்ணுயிரிகள் மற்றும் வைரஸ்களை 99.99 % அகற்றுகிறது.
14. ஆர்சனிக், ஈயம், காட்மியம், பாதரஸம், நிக்கல் மற்றும் கோபால் போன்ற கன உலோகங்களை அகற்றுகிறது.
இயந்திரங்கள் தயாரிப்புகள் 1.5 லிட்டர் மற்றும் 2.5 லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பான் களாக இரண்டு வகையில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பெற திரு.அபிமன்யுவை. 9925629000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.