நகரமயமாக்கல் என்பது உலகம் முழுவதும் தவிர்க்க முடியாத நிலையாக உள்ளது. ஆனால் இயற்கை சூழலுக்கு ஆபத்து இல்லாமல் நகரமயமாக்கல் என்பது அவசியம். மேலும் விவசாய பயன்பாட்டில் இல்லாத பகுதியை தெரிவு செய்து அதனை நகர விரிவாக்கத்திற்கு உட்படுத்துவது குறித்து சுற்றுச்சூழல் உலக அமைப்பு தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.
இந்தவகையில் இத்தாலியின் மிலன் நகரை தளமாக கொண்ட கட்டிட கலை நிறுவனமான ஸ்டெஃபானோ பூரி ஆர்க்கிடெக்ட் (Stefano Boeri Architetti) மெக்ஸி கோவின் கான்கூனில் (Cancun in Mexico) இயற்கை ஊடுருவிய ஸ்மார் நகரத்திற்கான (Nature Infused Smart City) புதுமையான வடிவமைப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது. இது நெகிழ்ச்சியான (Resilient) மற்றும் நிலையான (Sustainable) நகரப்புற திட்டமிடலுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது. இது ஹோண்டுராஸை (Houndoros) தலைமையிடமாக கொண்ட ஜவுளி நிறுவனமான குருபோ கரீம (Groupokarim) காக உருவாக்கப்பட்டது. இதற்கு "ஸ்மார்ட் ஃபாரஸ்ட் சிட்டிகான் கூன் (Smart Forest City - Concun) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
சுமார் 550 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலம் தற்போது மணல் குவாரியாக பயன்படுத்தப்படுகிறது இந்த நிலம் கலப்பு பயன்பாட்டு வளர்ச்சியை உருவாக்கி முற்றிலும் உணவு மற்றும் ஆற்றல் (Food 2 Energy) தன்னிறைவுப் பகுதியாக மாற்றப்படுகிறது.
இந்த ஸ்மார்ட் ஃபாரஸ்ட்சிட்டி - கான்குனில் 1,30, 000 குடியிருப்பாளர்கள், தாவரவியலாளர்கள் மற்றும் தாவிரவியலாளர் லாரி கட்டி (Lauri Gatti) யால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 400 வெவ்வேறு இனங்களின் 75,00,000 தாவரங்கள் உருவாக்கப்படுகிறது. மேலும் ஒரு குடிமகனுக்கு சுமார் மூன்று மரங்கள் என்ற விகிதத்தை உருவாக்க 2,00,000 க்கும் அதிகமான மரங்கள் நடப்படுகிறது. அதேசமயம் மீதம் உள்ள தாவரங்கள் பெரும்பாலும் பசுமை புதர்கள், பச்சை கூரைகள் (Green Roofs) மற்றும் செங்குத்து தோட்டங்கள் (Vertical Garden) கொண்டது. உண்மையில் பசுமையான பகுதிகள் மற்றும் கட்டிடங்கள் இடையே சரியான சமநிலை மூலம் (Perfect Balance) இயற்கையாக மீண்டும் வழக்கப் படுகிறது.
ஜெர்மன் நிறுவனமான டிரான்ஸ் சோலார் (German Company Transolar) உதவியுடன் கலப்பு பயன்பாட்டு வளர்ச்சி சோலார் பேனல்களின் விளையத்தால் சூழப்பட்டிருக்கிறது. இது குடியிருப்பாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்குகிறது. நகரப்புற பகுதியை சுற்றி உள்ள ஒரு விவசாய பெல்டையும் (Agricultural Field Belt) இந்த நகரம் உள்ளடக்கியுள்ளது. இதற்கு நிலத்தடி நீர் வாய்க்கால் மூலம் உப்புநீக்கி (Desilination) பாய்ச்சப்படுகிறது பாரம்பரிய வாகனங்களுக்கான நிறுத்த இடம் (Parking) நகரத்தின் சுற்றுவட்டாரத்தில் அமைந்திருக்கிறது. சங்கிலி இயக்கம் அமைப்பு, உள்நாட்டு மின்சாரம் மற்றும் தானியங்கி வாகனங்கள் குடியிருப்பாளர்கள் கொண்டு செல்கிறது.
பல்லுயிர் மற்றும் நிலையான கட்டிடங்களை, சமூக வீடுகள், முலோபாய நகரப்புற வளர்ச்சி (Strategic Urban Development) ஆகிய வற்றுக்கு வெவ்வேறு அளவுகளில் இத்தாலிய மற்றும் சர்வதேச அளவில் ஒரு புள்ளியாக ஸ்டெஃபனோ பூரி நிறுவனம் அறியப்படுகிறது. நிறுவனத்தின் கட்டிடக் கலை வடிவமைப்புகள் மற்றும் மீளுருவாக்கத் ( Regeneration Projects) திட்டங்களை சிக்கலான சூழல்களிலும் பல கட்டிடங்களிலும் உருவாக்கியுள்ளது.
இத்தகைய செயல்பாடுகளுக்காக உலகெங்கிலும் உள்ள கட்டிடங்களை சமூகத்தால் அங்கீகரிக்கபட்டபடி பல சர்வதேச விருதுகளை "ஸ் டெஃபானோ பூரி ஆர்கிடெட்டி (Stefano Boeri Architetti) நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Milano
Via G. Donizetti 4 20122 Milano IT
t +39 0255014101
f +39 0236769185
general information and proposals of new business
studio@stefanoboeriarchitetti.net
press office
press@stefanoboeriarchitetti.net
suppliers
suppliers@stefanoboeriarchitetti.net
events and lectures
eventi@stefanoboeriarchitetti.net
tenders and competitions
tender@stefanoboeriarchitetti.net
jobs
hr@stefanoboeriarchitetti.net
Shanghai
No.501 Jiujiang Rd., Shanghai, CN.
china@stefanoboeriarchitetti.net
press office
l.dong@stefanoboeriarchitetti.net
Our Website: https://www.stefanoboeriarchitetti.net/en/
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.