May 14, 2021

இரண்டே நாட்களில் தற்சார்பு மண்வீடு ரெடி 3 – D Mud homes ready in 2 days

இத்தாலி நாட்டின் ரவென்னாவில் (Ravenna) அந்த நாட்டின் முன்னணி 3-டி பிரிண்டிங் நிறுவனமான "மரீயோ குசினெல்லா ஆர்கிடெக்ட்ஸ்" (Mario Cucinells Architects) மற்றும் “வாஸ்ப்” (Wash) 60 சதுர மீட்டர் பரப்பளவில் 200 மணிநேரத்தில் உள்ளூர் மண்ணைப் பயன்படுத்தி ஒரு முப்பரிமாண  (3-D) வீட்டைக் கட்டியுள்ளது. இந்த செயல்முறை "டெக்லா" (Tecla) அதாவது தொழில்நுட்பம் மற்றும் களிமண்ணாலானது (Technology and Clay) என்று பெயரிடப்பட்டுள்ளது.



இந்த வீடு சுற்றுச்சூழல் நிலையானது (Eco - Sustainable) மற்றும் சுற்றுச்சூழல் நட்பானது (EcoFriendly). ஏனெனில் உற்பத்தி பூஜ்ய கழிவுகள் (Zero waste) மற்றும் உள்ளூர் மண்ணையே பயன்படுத்துவதால் பல வகையான பொருட்களை கட்டுமான இடத்திற்கு கொண்டு செல்ல எந்த பொருட்களும் தேவையில்லை.



வீட்டின் வடிவமைப்பு என்பது ஒரு கரிம (Organic) குகை போன்ற வடிவமாகும். இது பழங்காலமாகவும் (Ancient) இயற்கையிலிருந்து செதுக்கப் பட்டதாகவும் (Carved out of nature) தெரிகிறது. இதன் பின்னால் உள்ள புதுமையான தொழில்நுட்பம் பார்வைக்கு முரணாக தென்பட்டாலும் நடைமுறையில் "மனிதாபிமான" (Humane) வடிவமைப்பு கட்டிடக்கலை மீது கவனம் செலுத்தியுள்ளது தெரிகிறது.



இந்த வீடு ஒரு அழகியல் அணுகுமுறை (Aesthetic Approach) மட்டுமல்ல. இது ஒரு நேர்மையான வடிவம் (Honest Form) என்று ஸ்தாபகர் திரு.குசினெல்லா (Mr.Cucinella) கூறுகிறார்.

இந்த வீடு கிட்டத்தட்ட பூஜ்ய உமிழ்வு (Zero Emission) மற்றும் குறைந்த கார்பன் செயல்முறை (Low Carbon Process) ஆகும். ஒரு அழகான ஆரோக்கியமான நிலையான பல வீடுகளை இயந்திரத்தால் உருவாக்க முடியும் என்று "டெக்லா" காட்டுகிறது என கூட்டு ஸ்தாபகர் திரு.மஸிமோ மொராட்டி (Mr. Massimo Moretti) கூறுகிறார்.

வீட்டின் உள்ளே ஒரு வாழ்க்கை பகுதி (Living Area) சமையலறை மற்றும் படுக்கை அறை உள்ளது. சில அலங்காரப் பொருட்கள் கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. மற்றும் மறுசுழற்சி செய்ய அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய வல்ல இயற்கைப் பொருட்களிலிருந்துருந்து நுகர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல பொருள் கலவை காப்பு (Insulation) மற்றும் நல் காற்றோட்டத்துடன் உள்ள இத்தகைய வீடுகளை நாமும் கட்ட முயற்சிக்கலாமே! 

முழுமையான குடியிருப்பு வீடுகளாக இல்லை என்றாலும் 

சுற்றுலாத் தலங்களில் இத்தகைய ரெசார்ட் (Resort) வீடுகள் நல்ல வரவேற்பைப் பெறும் என்பது நிச்சயம்.

Mario Cucinella Architects

Via Franceso Flora 6

40129 Bologna Italia

T: +39 051 631 3381

F: +39 051 631 3316

C.F + P. Iva 02192891204

https://www.mcarchitects.it/en/

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories