ஜார்கண்ட் (Jharkhand) மாநிலத்தைச் சேர்ந்த திரு. பிப்பின் பிஹாரி (Mr.Bipin Bihari) - யின் சைக்கிளில் இணைக்கப் பட்ட நடமாடும் சூரியசக்தி மின்சார மோட்டார் பம்புகள் (Pumps on cycle) கண்டுபிடிப்பால் சுமார் 60,000 விவசாயிகள் பலன் அடைந்து வருகின்றனர்.
உதாரணமாக திரு. பேகன்லால் மாதோ (Mr.Phekanlar Mahto) 53, வயதான ஜார்கண்ட மாநிலத்தின் ஹசாரிபாக் (Hazaribag) பகுதியைச் சேர்ந்த பரம்பரை விவசாயி தன் 2.5 ஏக்கர் நிலத்தில் ஒரு போக விவசாயம் மட்டுமே செய்து வருடத்திற்கு ரூ 25,000 /- மட்டுமே ஈட்டி வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக நடமாடும் சூரிய சக்தி மின்சார 0.5 HP மோட்டார் மூலம் நிலத்தடி நீரை கொண்டு 3 போகம் பாசனம் செய்து வருடத்திற்கு, 1 லட்சம் ஈட்டுகிறார். தற்போது தனது நிலத்தில் பச்சைப்பட்டாணி (Green Peas), கேரட் (Carrot), தர்பூசணி (Water Melon) மற்றும் பூசணி (Pumpkins) அனைத்தும் பயிர் செய்வதாக திரு.மாதோ கூறுகிறார்.
தற்போது இது போன்று நடமாடும் சோலார் பம்பு சைக்கிள்கள் (Pumps on Cycle) பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவையை உலக வங்கி உதவியுடன் இயங்கும் "ஜோஹர்" (Johar) என்ற அரசு அமைப்பு (Jharkhand Opportunities for Harnessing Rural Growth) செய்து வருகிறது.
"ஜோஹர்" திட்ட இயக்குனர் (Project Directo) கூறுகையில் உலக வங்கி இத்தகைய சூரிய சக்தி தண்ணீர் பம்புகள் 1300 - க்கு அனுமதி அளித்துள்ளது.
நடமாடும் சூரியசக்தி மின்சார மோட்டார் பம்புகள் சிறப்புகள்:
- எங்கு வேண்டுமானாலும் சுலபமாக கொண்டு செல்லலாம்
- மின்சாரம் இல்லாத தொலைதூர விவசாய நிலங்களிலும் நீர் இறைத்து விவசாயம் செய்ய இயலும்.
- மணிக்கு ரூ 40 / - என்ற விகிதத்தில் வாடகைக்கும் எடுத்து செல்லலாம்.
- எந்தவிதமான எரி பொருள் (பெட்ரோல், டீசல்) செலவுகள் இல்லை
- பராமரிப்பது மிக கலபம் (Easy or No Maintenance) பராமரிப்பு செலவு இல்லை.
- மூன்று போகம் விவசாயம் என்பதால் கலப்பு பயிர்களை பயிர் செய்து பலன் அடைய முடியும்.
- மழையை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை.
அரசின் இத்தகைய 2000 க்கும் மேற்ப்பட்ட நுண்ணிய நீர் பாசனத் திட்டத்தின் (Micro Water Lift Project) மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விவசாயிகள் பொருளாதார நிலையை உயர்த்த செயலாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.