November 15, 2021

கழிவுகள் இல்லா பன்றி வளர்ப்பு (Zero Waste Pig Farming)

"கழிவுகள் இல்லா பன்றி வளர்ப்பு" அல்லது "ஜீரோ வேஸ்ட் பன்றி வளர்ப்பு" என்பது துர்நாற்றமற்ற விவசாய அமைப்பாகும். இது பன்றி கழிவுகளை  மாற்று எரிபொருளாகவும் பயிர்களுக்கு கரிம உரமாகவும் மாற்றுகிறது சுற்றுச்சூழலில் பன்றி உற்பத்தியன் தாக்கம் மற்றும் மிகவும் பயனுள்ள கழிவு மேலாண்மை ஆகியவற்றில் பிரச்சினைகளை நேரடியாக நிவர்த்தி செய்கிறது.

நியூவா எசிஜாவில் ஒரு ஜீரோ வேஸ்ட் பன்றி வளர்ப்பு அமைப்பு:-

Zero Waste Pig Farming System in Nueva Ecija :-

(ZWAP) :-

பிலிப்பைன்ஸ் நாட்டில் ZWAP ஆனது CLSU (College of Agriculture) வேளாண்மை கல்லூரியின் விலங்கு அறிவியல் பேராசிரியரான டாக்டர். அன்டோனியோ ஜே. பரோக்காவால் (Dr.Antonio J. Barroga) உருவாக்கப்பட்டது. டாக்டர் பரோக்காவின் கூற்றுப்படி "கழிவு என்பது எதுவும் இல்லை" கழிவுகள் என்பது மாறுபட்ட விளக்கமாகும் "(Waste is simply misplaced Resource)



பிலிப்பைன்ஸ் அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (Philippines Rice Research Institute) மற்றும் லூசன் மாநில பல்கலைக்கழகம் (Central Luzon State University) ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் ZWAP ஆனது Philrice மத்திய பரிசோதனை நிலையத்தில் 5 ஹெக்டர் நிலத்தில் கற்றல் மற்றும் கட்சி மாதிரி பன்றி பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இது சுத்தமான எரிசக்தி உற்பத்தி தொழில்நுட்பம் பற்றியும் பன்றி வளர்ப்பிலிருந்து கூடுதல் வருமானம் பெறுவது இலவச மாற்று எரி பொருளை உருவாக்குவது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி என்பதையும் விவசாயிகளுக்கு காண்பிக்கும் நோக்கம் கொண்டு செயல்பட்டு வருகிறது.



செயல்படும் முறை:

1. துர்நாற்றத்தை நீக்குதல்:

துர்நாற்றத்தை அளிக்கும் நுண்ணுயிர் கலவை OEMC (Odor - Erasing Microbial Concoction) என்பது சாம்பல் கலந்த கருப்பு ஊட்டச்சத்து மற்றும் தீவன சேர்க்கையாகும். இது பல்வேறு நுண்ணுயிர்களை கொண்டுள்ளது அதாவது பேசிலஸ் (Bacillus) தியோ பேசிலஸ் (Thio Bacillus) கரிம அமிலங்கள் (Organic Acids) மற்றும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியாக்களும் (Nitrogen Fixing Bacteria) கொண்ட இந்த நுண்ணுயிர்கள் துர்நாற்றம் நீக்கிகளாக (Deorderiser) செயல்படுகின்றன. இந்த OEMC ஒரு சதுர மீட்டருக்கு 5 கிராம் வீதம் பன்றி வீட்டிலும், குளத்திலும் (Walloing Tank ) வாரத்திற்கு இரு முறை தெளித்தால் போதும்.



2. எரிவாயு உற்பத்தி செய்தல்:-

வழக்கமான செப்டிக் தொட்டிகள் மற்றும் தனி டைஜஸ்டர் தொட்டிகளுக்கு பதிலாக நேரடியாக (Plastic Drum BioGas Digester) (PDBD) செப்டிக் தொட்டியில் நிறுவப்பட்டுள்ளது. இந்தப் பிளாஸ்டிக் டிரம்களுக்கு மேலேயுள்ள எரிவாயு சேகரிப்பு குழாய் மூலம் வாயு எரிக்க பயன்படுத்தப்படுகிறது.

3. கரிம உரம் உற்பத்தி:-

OEMC மூலம் ZWAP ஆனது ஒரு செப்டிக் தொட்டியில் துர்நாற்றமற்ற  உற்பத்தி செய்து பயன்பாட்டிற்கு செலுத்தியபின் பன்றிக் கசடுகளை கரிம உரத்திற்கு பயன்படுத்த சேகரிக்கப்படுகிறது இவை பண்ணை நிலத்திற்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும் OEMC - இன் பயன்பாடு பன்றிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பன்றிகளின் சுவாச மண்டலத்தை பாதிக்கும் அமோனியா வாயு உற்பத்தி தடுக்கப்படுவதால் சுவாசப் பிரச்சினைகள் தவிர்க்கப்படுகிறது. மற்றும் பன்றி வளர்ப்பில் ஈக்கள் தொல்லைகள் நீங்குகிறது. பன்றிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் பன்றிகளை வளர்ப்பதற்கான செலவையும் குறைக்கிறது.


Dr. Antonio J Barroga

0927-745-9870

antonio.barroga61@gmail.com

- DR. வி.எஸ்.பொய்யாமொழி (MVSc)

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories